‘தமிழ் தேசிய கூட்டமைப்பின் பட்டியலில் முஸ்லிம் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளது என்பது வடக்கு முஸ்லிம்களுக்கு செய்யும் பெரும் துரோகத்தனமாகும்’

xcscஇர்ஷாத் றஹ்மதுல்லாஹ்.

யாழ்ப்பாணம்;தமிழ் தேசிய கூட்டமைப்பின் பட்டியலில் முஸ்லிம் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளது என்பது வடக்கு முஸ்லிம்களுக்கு செய்யும் பெரும் துரோகத்தனமாகும் என்று யாழ் மாநகர சபை உறுப்பினர் அஸ்கர் ரூமி தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபை தேர்தலில் மன்னார் மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பட்டியிலில் வாக்குரிமை இல்லாத யாழ்ப்பாணத்தை சேர்ந்த அய்யூப் அஸ்மி என்பவர் இடம் பெற்றுள்ளதானது.மன்னாரில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டுவரும் அநியாயங்களின் உச்ச கட்டத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு தமது கட்டப்பாட்டுக்குள் ஒரு முஸ்லிமை வைத்துக் கொண்டு இன்னும் அந்த சமூகத்திற்கு எதிரான உள்விவகாரங்களை அறிந்து செயற்பட வாய்ப்பாக அமையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை என்பதை தெளிவாக வெளிக்காட்டுவதாக அஸ்கர் ரூமி மேலும் தெரிவித்தார்..

நல்லாட்சிக்கான இயக்கம் என்ற ஒரு அமைப்பின் பின்னணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் மட்டும் போடப்பட்டிருப்பதன் பின்னணி,முஸ்லிம்களை பிளவுபடுத்த கையாண்டுள்ள தந்திரோபாயம் என்பது தெளிவாகின்றது.

வடக்கு முஸ்லிம்கள் தமது தாயகத்தில் மீள்குடியேறவருகின்ற போது,அவர்களை வெளிமாவட்ட முஸ்லிம்களாக காண்பித்து சிங்கள பௌத்த இனவாதிகளை விடவும் படு மோசமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டு கொண்டிருக்கும் இந்த நிலையில் மன்னார் மாவட்டத்திலிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எந்தவொரு முஸ்லிமையும் பெற்றுக் கொள்ள முடியாத வங்குரோத்து  நிலையில் யாழில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வேட்பாளராக அஸ்மி நிறுத்தியிருப்பதன் பின்னணி தெளிவாகின்றது.

கடந்த 20 வருடமாக பயங்கரவாதம்,மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம்களுக்கு செய்த துரோகமும் அநியாயமும் அழியாத வடுக்கலாக இருக்கின்ற நிலையில் வேட்பாளர் அஸ்மியும் இந்த முஸ்லிம் சமூகத்தற்கு எதிரான கொள்கைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது கவலைத்தருவதாகவும் யாழ் மாநகர சபை உறுப்பினர் அஸ்கர் ரூமி தெரிவித்துள்ளார்.

சமூக சேவையென்ற பெயரில் தம்மை அடையாளப்படுத்த முற்பட்ட அய்யூப் அஸ்மியை யாழ் மக்கள் ஏற்கனவே நிராகரித்துவட்ட நிலையில்,வட மாகாண முஸ்லிம்களுக்கும்,சகோதர தமிழ் மக்களுக்கு அளப்பரிய பணியாற்றிவரும் எமது கட்சியின் தலைவர் றிசாத் பதியுதீன் அவர்களுக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டுவரும் விசமத்தனமான பிராசாரங்களை செய்துவரும் நிலையில் அதற்கு துணையாக முஸ்லிம் ஒருவரை பயன்படுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு வகுத்த வலையில் அய்யூப் அஸ்மி  விழுந்துள்ளார்.

மன்னார் மாவட்ட மக்கள் அவரது சுய விபரங்களையும் பின்னணியினையும் அறிந்து கொள்ள ஒரு சந்தரப்பம் ஏற்படடுள்ளது என்று தெரிவித்துள்ள யாழ் மாநாகர சபை உறுப்பினர் அஸ்கர் ரூமி,இவரது பெயரை சிபாரிசு செய்துள்ள நல்லாட்சிக்கான இயக்கம் என்பது கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக செயற்பட்டதையும் நினைவுபடுத்தியுள்ளார்.

Published by

One response to “‘தமிழ் தேசிய கூட்டமைப்பின் பட்டியலில் முஸ்லிம் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளது என்பது வடக்கு முஸ்லிம்களுக்கு செய்யும் பெரும் துரோகத்தனமாகும்’”

  1. புவி எம். ஐ. றஹ்மதுல்லாஹ் Avatar
    புவி எம். ஐ. றஹ்மதுல்லாஹ்

    வேட்பு மனுத் தாக்கலாயிட்டில்லே.. தொடங்கிட்டாங்கய்யா.. இனித் தொடங்கிட்டாங்க!

    இனவாத சாக்கடையை இன்னமும் நமது சமூகத்தின் தலைமேல் கொட்டி தங்களின் பதவிக் கதிரைகளை ஸ்திரப்படுத்திக் கொள்ள இவங்கெல்லாம் இப்படியும் பேசுவாங்க.. இதுக்கு மேலயும் பேசுவாங்க!

    இவங்க சொல்ற படி பார்த்தா எப்போதுமே இந்த நாட்டு முஸ்லிம் சமூகம் சிங்களவர்களுக்கு கீழேதான் கண்ண மூடிக்கிட்டு மண்டியிட்டுக் கிடக்கணும். தமிழனுக்குப் பக்கத்தில அவன்ட நிழல்லயும் நிக்கப்படாதென்னு தோணுது.

    ஆமா.. யாழ். சோனகன் ஐயுபு அஸ்மிய மன்னாரில் போட்டிருக்கெண்டா, மன்னாரு சோனகர்களுக்கு புத்திமதிகூற இந்த யாழ். சோனக மெம்பருக்கு என்ன தேவை இருக்கு?

    ‘நான் வடக்கான்’ என்டு அவர் சடக்கென்டு பதில் சொல்லுவாரோ..? அப்ப.. இந்த யாழ். சோனகன் ஐயூபு அஸ்மியும் மன்னாரு வழியா வட மாகாண சபைக்குப் போய் ‘வடக்கு சோனக சமூகத்தை’ப் பத்தி ஏன் சார் பேச முடியாது?

    ஏன் சார் இன்னமும் இந்த ஊரு வாதமும், தெரு வாதமும், பிரதேச வாதமுமே பேசிப்பேசி அரசியல் வியாபாரம் பண்றீங்க..? அது நல்லாயில்லே.

    கிழக்கில கொழும்பு சோனகன் அஸாத் சாலி வந்து போட்டியிட்டபபோ இஞ்ச யாரும் ‘வாக்குரிமையில்லாத கொழும்பான் வந்து வாக்குக் கேக்கான்’ என்டு மட்டமா பேசல்ல.

    யாழ். மாவட்டத்தில கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு இடமளிப்பதில் நெருக்கடி இருந்ததால தான் இந்த ஐயூபு அஸ்மி நளீமிய மன்னாரில போட்டாங்க. இவர கூட்டமைப்பு பட்டியல்ல போட்டது முஸ்லிம் சமூகத்துக்கு செய்யுற துரோகம்னா.. முஸ்லிம் சமூகத்த இன்ட வரைக்கும் சப்பித்துப்பிக்கிட்டே இரிக்கிற சிங்களவங்களோட மட்டும் நம்ம சோனகன் ரோஷமில்லாம பேரு போட்டு சேந்துக்குறது துரோகமில்லயா?

    மக்களுக்கு சேவகம் செய்ய வாறவனுக்கு வாக்குரிமை இருக்கோணும் என்கிறது முக்கியமில்ல சார்.. வாக்குல நேர்ம இருக்கணும். நடத்தயில தர்மம் இருக்கணும். அதான் முதல் தகுதி.

    ஆமா.. நீங்க இன்னமும் கூட்டமைப்பு துரோகம் பண்ணியது.. தமிழன் துரோகம் பண்ணினான் என்டு சொல்லிக்கிட்டே இரிக்கீங்களே.. நம்ம ரிசாத் சார் கட்சியில இரிக்கிற தம்பி கிஸ்புல்லா துரோகம் செய்யல்லியா..?

    அவர் துரோகம் செஞ்சுதான் சார் நாட்டில ஒன்னா இருந்த முஸ்லிம் கட்சி மூனா கெப்புட்டு வளந்திரிக்கி.. அவரு பள்ளியில செய்த சத்தியத்தை மீறி துரோகம் செய்த வரலாறு இருக்கே.. அதத்தான் சார் நாம முஸ்லிம்கள் முதல்ல கண்டிக்கணும்.

    இதெயெல்லாம் உட்டுப்போட்டு இப்ப அரசியலப் பத்திப் பேசுங்க சார். உங்க அரசாங்கம் இன்னா செஞ்சிச்சி..? இனி இன்னா செய்யும்…? யாழ்ப்பாணத்துக்கு எப்ப பல சேனா வரும்..? எப்ப சோனக தெரு பள்ளிக்க பண்டிட ரெத்தம் ஊத்துவான்..? எப்பிடி அத நாங்க தடுப்பம்.. போராடுவம்.. அப்படி இப்பிடி என்டு அரசியல் பேசுங்க சார்..!

    சும்மா அவனுக்கு வாக்குரிமையில்.. இவன் கள்ளத்தோணி என்டெல்லாம் றீல் உடாதீங்க.. நம்ம சனங்களும் கொஞ்சமென்டாலும் விழிப்படைஞ்சி இருக்கு என்கிறத புரிஞ்சிக்கோங்க..!

    கூட்டமைப்புத்தான் இந்த ஐயூபு ஆசாமிய இழுத்துப் போட்டு நம்ம சோனக சமூகத்துக்கு துரோகம் பண்ண திட்டமிட்டிருந்தாலும், இந்தாளு என்ன வாய்க்க விரலக் கொடுத்தா கடிக்கத் தெரியாத பபாவா சார்.?

    ஒரு நளீமி இல்ல? ஓதிப்படிச்ச மனிசனில்ல..? அவருக்கும் சொந்தமா ஒரு மூள இரிக்கெல்ல..? ஏதோ அவங்க தூக்கிப் போட்டாங்க.. இவரு துரோகத்துக்குப் பலியாகிட்டாரெண்டு இந்தக்கத்தல் கத்துறீங்களே.. கேட்கச் சகிக்கல்ல.!

    உங்க அமைச்சர் றிசாத் சாரு மக்களுக்கு சேவை செய்யிறாரென்டா அது நல்ல விசயம். ஆனா ஏன் சார் அடிக்கடி வட பகுதி மக்களும் அவருடைய மக்கள் சேவைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் பண்றாங்க..?

    அடுத்த வீட்டான் பசித்திருக்க தான் மாத்திரம் தின்னுறவன் உண்மை முஸ்லிம் இல்லே என்டு நான் ஒரு கதீசக் கேட்டிருக்கன். அபிவிருத்தி என்பத பாரபட்சமில்லாம யாரு செஞ்சாலும் அத மக்கள் பொதுவாக ஏத்துக்குவாங்க. யாரும் சும்மா ஆட்சேபிக்க மாட்டாங்க.

    கூட்டமைப்புக் காரங்களே தங்களுக்கு ஒரு இடம் கிடைக்கல்லையே என்டு ஆதங்கமும், ஆத்திரமும்
    பட்டுக்கொண்டிருக்கேக்க முஸ்லிம் ஒராளுக்கு கூட்டமைப்பு இடம் கொடுத்ததே அவங்கட நல்லெண்ணத்தக் காட்டுற பெரிய விஷயம்.

    ‘இல்ல தம்பிமாரே.. உங்களுக்குத்தான் நாட்டில மூணு கட்சி சொந்தமா இருக்குதே.. அதுக்குள்ள நீங்க போயி உங்கட அரசியல் உரிமகளப் பெத்துக்குங்க’ என்டு ஒரு வார்த்த சொல்ல அனுப்பியிருந்தா.. அவங்களுக்கு என்ன நஷ்டம் வந்துடப் போகிறது? இன்னொரு தமிழனுக்கு இடம் கொடுத்து வாக்கு வங்கிய ஸ்ரோங் பண்ணியிருக்கலாமில்லே..?

    என்னப் பொறுத்த வரைக்கும் ஐயூபு அஸ்மி நளீமிக்கு கூட்டமைப்பு ஒரு இடம் கொடுத்தது, வடக்கு முஸ்லிம் சமூகத்தோட மாத்திரமல்ல, கிழக்கு முஸ்லிம் சமூகத்தோடயும் தமிழ்ச் சமூகம் எதிர்காலத்தில் மேலும் நல்லிணக்கத்துடனும், பரஸ்பரம் புரிந்துணர்வோடும் வாழ்வதற்கும், சிங்களப் பேரின சமூகத்தினால் மறுக்கப்பட்டு வரும் அரசியல் மற்றும் சமூக உரிமைகளையும் கூட்டுச் சேர்ந்து பெறுவதற்காக அடையாளம் காட்டியுள்ள முதல் சிக்னல் என்றுதான் சொல்வேன். இதனை முஸ்லிம் சமூகம் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம், கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராகச் செயற்பட்டது என யாழ்ப்பாண மெம்பர் சொல்றதக் காட்டிலும், ஏறாவூரில இருக்கிற கிழக்கு மாகாண சபை மெம்பர் சுபைர் சாரோ.. ஓட்டமாவடியில இருக்கிற அமீரலி சாரோ.. எங்க காத்தான்குடிக்கு வந்து ஒரு பப்ளிக் மீட்டிங்ல தெளிவா எடுத்துச் சொன்னாங்களென்டா.. நாங்க அவங்கள துரோகிகளாக ஏத்து தூக்கி எறிஞ்சுடறோம்.

    நல்லாட்சிக்காரங்களுடைய கொள்கையென்ன, கோட்பாடு என்ன, அவங்கட அரசியல் இலக்கு என்ன? இலட்சியம் என்ன என்கிறதெயெல்லாம் எட்டு வருஷமா நாங்க கரைச்சுக் குடிச்சிருக்கம்.

    அவங்களாலதான் இப்ப இருக்கிற அரசியல் யாவாரிமார கொஞ்சமென்டாலும் நேர்மையா அவங்கட யாவாரத்தைச் செய்ய வழிக்கு கொண்டு வர ஏலும் என்டு இப்ப கிழக்கு மாகாண முஸ்லிம்களும் ஏத்துக்கிட்டிருக்காங்க.

    ஆகவே, மெம்பரே.. நீங்க நல்லாட்சி என்னடா என்னா.. நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் என்டா என்னா என்டெல்லாம் முழுசாத் தெரிஞ்சிக்காம சும்மா அரை குறை வரலாத்தக் கேட்டுப்போட்டு இன்னமும் அவங்களத் துரொகி.. துப்பட்டி என்டெல்லாம் சொல்ல வராதேங்கோ என்டு கேட்டுக்கிறன்.
    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

Leave a comment