කාත්තාන්කුඩි ආදරයෙන් පිළිගැනීම
காத்தான்குடி அன்புடன் அழைக்கின்றது
Welcome to Kattankudy
مرحبا بكم في كاتانكودي
Web: www.yourkattankudy.com
Email: yourkattankudy@gmail.com
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவியால் உங்களை ‘உங்கள் காத்தான்குடி’ க்கு அன்புடன் அழைக்கின்றோம். அல்ஹம்துலில்லாஹ்!

கடந்த முப்பது வருடகாலமாக இலங்கையில் நிலவி வந்த இனப்பிரச்சினைக்கும் இயற்கை அணர்த்தங்களுக்கும் முகம் கொடுத்து இன்று அல்லாஹ்வின் உதவியால் உலகின் பக்கம் இந்நகரம் ஈர்க்கப்பட்டிருக்கின்றது.
![kattankudy[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2011/10/kattankudy1.jpg?w=273&h=185)
ஆசியாவில் இரண்டாவதும் இலங்கையில் முதலாவது அடர்த்தியான ஓர் நகரமாகவும் திகழும் காத்தான்குடிக்கு உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.எமது அழகிய நகரத்தையும் அதன் செயற்பாடுகளையும் எமது மக்களினதும் மண்ணினதும் திறமைகளையும் சாதனைகளையும் உலகுக்கு எடுத்துக்காட்டும் ஓர் உன்னதமான நோக்கில் www.yourkattankudy.com உங்கள் இதயங்களை இன்று தொட்டுச் செல்கின்றது.


எமது நகரின் பிரதான அமைப்புக்களையும் அதன் செயற்பாடுகளையும் தனித்தனியே அழகிய பக்கங்களாக வடிவமைத்து இணையத்தளங்கள் ஊடாக இன்று உலகை http://www.yourkattankudy.com வலம் வந்து கொண்டிருப்பதானது இலங்கையிலும் மற்றும் கடல் கடந்து வாழும் எம் உறவுகளுக்கு நிச்சயம் பலன் உள்ளதாக இருக்கும் என்பதோடு அவர்களின் உறவுகளையும் நண்பர்களையும் அறிந்து கொள்ளக் கூடியதாகவும் அமையும் என்பதையும்; எமது நகரையும் அதன் செயற்பாடுகளையும் ஏனைய மக்களும் அறிந்து கொள்ள வழி வகுக்கும் என்பதனையும் மகிழ்ச்சியுடன் எதிர்பார்க்கின்றோம்.

ஒரு ஊரின் அனைத்து விடயங்களையும் உள்ளடக்கி அழகிய பக்கங்களாக வடிவமைத்து எமது நகரை உலகுக்கு அறிமுகப்படுத்தும் ஓர் சமூக நோக்கில் இன்று http://www.yourkattankudy.com வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இன்ஸா அல்லாஹ் விரைவில் முடிந்தளவு ஏனைய விடயங்களையும் பக்கங்களையும் தொகுத்து அதன் தகவல்களையும் தரவுகளையும் வழங்கவுள்ளோம்.
உலகில் இன்று தங்களது வியாபாரத்திற்காகவும் பொதுச் சேவைக்காகவும் மற்றும் செய்தி ஊடகங்களுக்காகவும் பல கோடி இணையத்தளங்களுக்குள் http://www.yourkattankudy.com தனிச் சிறப்பைப் பெருகின்றது. உலகில் ஒரு நகரின் அனைத்து விடயங்களையும் செயற்பாடுகளையும் முதன் முதலில் ஒரே தளத்தின் கீழ் கொண்டியங்கும் http://www.yourkattankudy.com எம் நகருக்கும் அதன் மக்களுக்கும் தனித்துவமான கௌரவத்தையும் சிறப்பையும் பெற்றுத் தரும் என்பதை மகிச்சியுடன் தெரிவிக்கின்றோம்.


இத்தளத்தினை பார்வையிடும் சகோதரர்களுக்கு மேலும் உதவும் முகமாக இலங்கையிலும் உலகிலும் உள்ள அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சமய, பொது அமைப்புக்களின் சுமார் 100 மேற்பட்ட இணையத்தளங்களினை ஒவ்வொரு பக்கங்கள் ஊடாகவும் இணைத்து தொகுத்திருக்கின்றோம்.
அரசியல் சாயங்களுக்கப்பால் தனித்து நின்று சமூக நல நோக்கம் மாத்திரம் கருத்திற் கொண்டு இயங்கும் http://www.yourkattankudy.com இணையத் தளத்திற்கு உங்கள் அன்பான கருத்துக்களையும், தகவல்களையும், ஆலோசனைகளையும் ஆதரவுகளையும் இன்முகம் கொண்டு வரவேற்கின்றோம்.
![21-ROOTS[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2011/10/21-roots12.jpg?w=240&h=151)
இது உங்கள் களம் -காத்த நகரின் தகவல் தளம்!
நன்றி .
வஸ்ஸலாம்.
என்றும் அன்புடன்
இயக்குனர்,
உங்கள் காத்தான்குடி

Leave a reply to yourkattankudy.com Cancel reply