WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஹிஸ்புல்லாஹ்வின் ‘நமது கனவு’தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

    – ஆர்.எஸ்.மஹி ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ‘நமது கனவு’ எனும் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று திங்கட்கிழமை கொழும்பில் அமைந்துள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் உத்தியோகபூர்வமாக வெளியீட்டு வைக்கப்பட்டது.

  • அல் பக்தாதியை துரத்திச்சென்ற நாய்

    அல்பக்தாதியை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்ட நாயின் படத்தினை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். பெல்ஜியன் மலினொய்ஸ் இனத்தை சேர்ந்த அந்த நாய் பக்தாதி தன்னை வெடிக்கவைத்த வேளை காயமடைந்துள்ளது.

  • சுஜித் மீட்பு: தோண்டி முடிக்க 16 மணி நேரமாகும்

    மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கியிருக்கும் இரண்டு வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணி 63 மணி நேரத்தை கடந்து தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், குழந்தை அதே இடத்தில நீடிப்பதாகவும், மீட்புப்பணி தொடர்ந்து நடைபெறும் என்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

  • சுஜித்தை மீட்கும் பணி தீவிரம்

    ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கியிருக்கும் சிறுவன் சுஜித்தை மீட்க தோண்டப்பட்டு வரும் மற்றொரு குழியில் இதுவரை 35 அடிதான் தோண்டியிருப்பதாகவும், இன்னும் 45 அடி தோண்ட வேண்டியுள்ளது என்றும் மீட்புப்பணி பற்றி தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சிறுவன் சுஜித் மீட்புப்பணி நடக்கும் இடத்திற்கு வந்த தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்த போது, இதனை அவர் தெரிவித்தார்.

  • “முழு சமூகத்தையும் பாதிக்கும் அரசியல் தீர்மானங்களுக்கு சாய்ந்தமருது மக்கள் ஒருபோதும் துணைபோக மாட்டார்கள்”- ஹக்கீம் 

    நகரசபை விடயத்துக்காக சாய்ந்தமருது பள்ளிவாசல் மொட்டு அணிக்கு ஆதரவளிப்பது நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் பாதிக்கும் செயலாகும். முழு சமூகத்தையும் பாதிக்கும் அரசியல் தீர்மானங்களுக்கு சாய்ந்தமருது மக்கள் ஒருபோதும் துணைபோக மாட்டார்கள் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் மரைக்காயர் சபைக்கும் கட்சி முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (26) ஏ.எம். ஜெமீலின் இல்லத்தில் நடைபெற்றபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

  • சாய்ந்தமருதில் வாக்குறுதிகளை அள்ளி வழங்கிய மகிந்த

    பாறுக் ஷிஹான் நாம் ஆட்சிக்கு வந்தால் சாய்ந்தமருது பிரதேச சபை மலரும் என உறுதிபட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவை ஆதரித்து தேர்தல் பிரச்சாரமொன்று பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸவை ஆதரித்து சாய்ந்தமருது பௌசி விளையாட்டு மைதானத்தில் கூட்டம் வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்றது .

  • “எவரது நிபந்தனைகளுக்கும் அடிபணியாத கொள்கையே எனது தேர்தல் கொள்கை” – கோத்தாபய

    நாட்டு மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு முன்னுரிமை வழங்கி எவரது நிபந்தனைகளுக்கும் அடிபணியாமல் தேர்தல் கொள்கை பிரகடனத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவித்த பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ, ஆட்சிக்கு வந்து குறுகிய காலப்பகுதியில் இக்கொள்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்தார்.

  • உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இலக்கில் கொழும்பிலுள்ள இந்திய தூதரகமும் உள்ளடக்கம்

    உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னெடுத்தவர்களின் இலக்காக கொழும்பிலுள்ள இந்திய தூதரகமும் காணப்பட்டது என உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இலங்கையின் நாடாளுமன்ற தெரிவுக்குழு தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள்செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியர்கள் பெருமளவு தங்கியிருந்த ஹோட்டல் ஒன்றும் தாக்குதல் இலக்காக காணப்பட்டது என புலனாய்வு தகவல்களை மேற்கோள் காட்டி நாடாளுமன்ற தெரிவுக்குழு தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

  • “தான் ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்; என்பது சட்டவிரோதமானதாகும்”

    வை எல் எஸ் ஹமீட் சட்டத்தின் பார்வையில் போட்டியிடுகின்ற 35 வேட்பாளர்களும் தாம் ஜனாதிபதியாக வருவதற்கே போட்டியிடுகிறார்கள். வேட்பாளர் அதிகரிப்பு காரணமாக சில நூறுகோடி மக்கள் வரிப்பணம் மேலதிகமாக செலவாகிறது.இந்த 35 பேரில் யார் ஜனாதிபதி என்பதைத் தீர்மானிப்பது மக்கள். இன்னுமொரு வேட்பாளர் ஜனாதிபதியைத் தீர்மானிப்பதற்கு ஒரு வேட்பாளருக்கு நியமனம் வழங்குவதுமில்லை. கோடிக்கணக்கான பணம் அதற்காக செலவழிக்கப்படுவதுமில்லை.

  • அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பிரதிநிதிகளுடன்கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்துரையாடல்!

    அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைத் தலைவர் அஷ்ஷேய்க் ரிஸ்வி முப்தி தலைமையிலான நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுடன் ‘ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்’ கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கடந்த 21ஆம் திகதி திங்கட்கிழமை விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

  • 21/4 தாக்குதல் சம்பவத்திற்கும், ஐ.எஸ். அமைப்பிற்கும் இடையில் நேரடி தொடர்புகள் எதுவுமில்லை

    இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்றத்தினால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை நேற்று (23) சமர்பிக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரம ரத்னவினால் இன்று முற்பகல் நாடாளுமன்றத்தில் இந்த அறிக்கை சமர்பிக்கப்பட்டது.

  • பகிரங்க விவாதத்திற்கு வரவும்: கோத்தாவுக்கு சஜித் சவால்

    நேரடி தொலைக்காட்சி விவாதத்திற்கு வருமாறு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபயவிற்கு சஜித் பிரேமதாச சவால் விடுத்துள்ளார். புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக ஒரு நேரடி தொலைக்காட்சி விவாதத்திற்கு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு சவால் விடுத்துள்ளார்.

←Previous Page
1 … 52 53 54 55 56 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar