-
கணவன் குளிக்காத காரணத்தினால் விவாகரத்து கோரிய மனைவி
யாழ்ப்பாணம்: கணவன் குளிப்பது இல்லை எனக் காரணம் குறிப்பிட்டு விவாகரத்து கேட்டு மனைவி தாக்கல் செய்த மனுவை யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்து கட்டளையிட்டது. நீங்கள் காதலித்து திருமணம் செய்வீர்கள். பின்னர் குளிக்கவில்லை போன்ற சட்டத்தில் கூறப்படாத காரணங்களைக் குறிப்பிட்டு மண நீக்கம் கேட்டு வந்தால் நீதிமன்றம் கட்டளை ஆக்க முடியாது” என்று யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி வி.இராமகமலன் கட்டளையில் சுட்டிக்காட்டினார்.
-
சந்திரிகா தலைமையில் ஆரம்பமாகியது மாநாடு
கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் மாநாடு தற்போது சுகததாச உள்ளக அரங்கில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.இம் மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம மற்றும் சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
-
21/4 குண்டுத்தாக்குதல்: குற்றவாளிகள் யாராக இருந்தாலும் எமது ஆட்சியில் தண்டிக்கப்படுவர்
சிலாபம்: ஏப்ரல் 21 தின குண்டுத்தாக்குதல் சுயாதீன ஆணைக்குழுவின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுகுற்றவாளிகளாக கருதப்படுபவர்கள் எவ்வித பாரபட்சமுமின்றி தண்டிக்கப்படுவார்கள் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். சிலாபம் நகரில் இன்று பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
-
இந்த நாட்டின் அடுத்த ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஷதான் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது: பஷீர் சேகுதாவூத்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோடாபய ரஜபக்ஷவுக்கு ஆதரவான ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் முதலாவது பிரசார கூட்டம் வெள்ளிக்கிழமை (01) ஏறாவூரில் பஷீர் சேகுதாவூத்தின் வழிகாட்டலில் இடம்பெற்றது. இதில் பஷீர் சேகுதாவூத் உரையாற்றுகையில்,
-
பேஸ்புக் விருந்துபசாரம்: போதைப்பொருட்களுடன் 100 பேர் கைது!
கொழும்பு: தெஹிவளை பகுதியில் பேஸ்புக் விருந்துபசாரத்தில் ஈடுபட்ட 100 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேகநபர்கள் (02.11.2019) கைது செய்யப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. கைது செய்யப்பட்டவர்களில் 17 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. போலீஸாருக்கு கிடைத்த தகவலொன்றை அடுத்து, நடத்தப்பட்ட சுற்றி வளைப்பின் ஊடாகவே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
-
“கிழக்கு மாகாணத்திற்கு மீண்டும் முஸ்லிம் ஆளுனரையோ முதலமைச்சரையோ எம்மால் ஏற்க முடியாது”-
கிருலப்பனை: கிழக்கு மாகாணத்திற்கு மீண்டும் முஸ்லிம் ஆளுனரையோ முதலமைச்சரையோ எம்மால் ஏற்க முடியாது என்று தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தமிழ் தலைமைத்துவத்தின் கீழ் கிழக்கு மாகாணம் இருக்க வேண்டும் என்றும் கூறினார். கிருலப்பனையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதில் மேலும் கருத்து தெரிவித்த அவர்.
-
தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு
தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்குவதாக ஏழு மணித்தியாலய கலந்துரையாடலின் பின்னர் முடிவெட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழரசுகட்சியின் மத்தியகுழு கூட்டம் வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று காலை 10மணியிலிருந்து மாலை வரை இடம்பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
-
அரச, தனியார் துறை ஊழியர்களுக்கான தேர்தல் வாக்களிப்பு விடுமுறை விபரம்
அரச , தனியார் துறைகளில் தொழில் புரியும் ஊழியர்களுக்கு அவர்களின் தொழில் நடைமுறைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேர்தல் விடுமுறைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு தேசிய தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.அத்துடன் இதன்போது ஊழியர்களின் சம்பளம் மற்றும் தனிபட்ட விடுமுறை விதிகளுக்கு எந்தவித இழப்புகளுமின்றி அந்த விடுமுறைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-
சமையல் அடுப்பு வெடித்து பாகிஸ்தான் ரயிலில் தீ விபத்து; குறைந்தது 73 பேர் பலி
பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து ராவல்பிண்டிக்கு சென்று கொண்டிருந்த தாஜ் ஜெம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 73 பேர் உயிரிழந்துள்ளனர்.ரயிலில் பயணித்தவர்கள் எரிவாயு சிலிண்டரை எடுத்துவந்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தீ மூன்று ரயில் பெட்டியில் பரவியதாக கூறப்படுகிறது.
-
ஹகீம், ரிஷாட் பற்றி சஜித்திடம் கேள்வி கேட்ட எம்பி கட்சியிலிருந்து நீக்கம்
ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளில் கட்சியின் ஒழுக்கத்தை மீறிய குற்றச்சாட்டில், ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமான வசந்த சேனநாயக்கவை, கட்சி உறுப்பினர் நிலையில் இருந்து நீக்கியுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
-
மாவனல்லையில் ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ் ஏற்பாடு செய்த தேர்தல் பிரசாரக் கூட்டம், ஊர் மக்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக கை விடப்பட்டது
மாவனல்லையில் ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ் ஏற்பாடு செய்த தேர்தல் பிரசாரக் கூட்டம், அந்த ஊர் மக்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக கை விடப்பட்டது. மாவன்னலை ராழியா வரவேற்பு மண்டபத்தில் இந்தக் கூட்டம் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லாவின் இணைப்பாளர் ஒருவரினால் இந்த கூட்டத்தை நடாத்துவதற்கு மண்டபத்துக்கான கட்டணங்களும் செலுத்தப்பட்டிருந்தன.