WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • இலங்கையில் இன்று இரு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

    கொழும்பு: இலங்கையில் இன்று (15.04.2020) இரு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இலங்கையில் இதுவரை 235 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 163 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

  • மத விழுமியங்களைப் பின்பற்றுவதை விட சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதே பொறுத்தமானது: அஸ்கிரிய

    கண்டி: கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் இறுதி சடங்குகள் சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தல்களுக்கு அமையவே முன்னெடுக்கப்பட வேண்டும். இவ்விடயத்தில் மதத்தையோ அல்லது இனத்தையோ தொடர்புபடுத்தத் தேவையில்லை எனத் வலியுறுத்திய அஸ்கிரியபீடம் இறுதி சடங்குகள் பற்றி ஐக்கிய நாடுகள் சபை ஆலோசனை தெரிவித்துள்ளதே தவிர அது கட்டளையல்ல என்றும் குறிப்பிட்டது.

  • டிசம்பரில் கொரோனாவைரஸ் குறித்து எச்சரித்து உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அனுப்பிய மின்னஞ்சல்களை பகிரங்கப்படுத்தியுள்ள தாய்வான்

    தாய்பே: டிசம்பரில் கொரோனாவைரஸ் குறித்து எச்சரித்து உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அனுப்பிய மின்னஞ்சல்களை தாய்வான் பகிரங்கப்படுத்தியுள்ளது. தாய்வானின் நோய் தடுப்பிற்கான நிலையம் இந்த மின்னஞ்சலை டிசம்பரில் உலக சுகாதா ஸ்தாபனத்திற்கு அனுப்பியுள்ளது. சீனாவின் வுகானில் நிமோனியா போன்ற நோயினால் ஏழு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என செய்திகள் தெரிவிப்பதாக தாய்வானின் நோய் தடுப்பிற்கான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

  • ரியாஜ் பதியுதீன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்

    கொழும்பு: முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் புதிதாக இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கு அமைய, இக்கைது இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

  • கொரோனா தொற்றியோர் 218

    கொழும்பு: இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று (13) இரவு அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய நேற்று (13) இரவு 11.30 மணியளவில் தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 217 இலிருந்து 218 ஆக அதிகரித்துள்ளது.

  • நாங்கள் எப்படியெல்லாம் “பாய்ந்து” கொடுத்தோம்: முகத்தில சாம்பல வீசிட்டாங்களே!

  • இனவாதிகளை திருப்திப்படுத்துவதற்காக முஸ்லிம்களின் ஜனாஸாவில் அரசியல் செய்யும் ஆட்சியாளர்கள் ?

    இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஒரே சட்டம் என்று காரணம் கூறி கொரோனா வைரசின் தாக்கத்தினால் மரணிக்கின்ற அனைவரது உடல்களும் எரிக்கப்படும் என்று வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டது. நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவான மதமான பௌத்த மதத்தை பின்பற்றல் வேண்டும் என்று எதிர்காலங்களில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டாலும் கோளைச் சமூகமான எங்களால் எதுவும் செய்ய முடியாது.

  • சடலத்தை தகனம் செய்வது தொடர்பில் அதி விசேட வர்த்தமானி

    கொழும்பு: கொரோனாவைரஸ்‌ காரணமான‌ கொவிட்‌-19 நோயினால்‌ மரணிப்பவரின் பூதவுடலை தகனம் செய்வது தொடர்பில், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு அமைய,

  • 4 மாத குழந்தை கொரோனாவிலிருந்து குணமடைந்தது

    கொழும்பு: இலங்கையில் வயது குறைந்த கொரோனா நோயாளியாக அடையாளம் காணப்பட்ட 4 மாத குழந்தை முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளது. கடந்த மார்ச் 29 ஆம் திகதி, நாத்தாண்டியா பகுதியில் 4 மாத குழந்தை உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

  • மேலும் 04 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 203

    கொழும்பு: இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்றையதினம் (12) முற்பகல் 11.30 மணியளவில் தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 199 இலிருந்து 203 ஆக அதிகரித்துள்ளது. அதற்கமைய இன்றையதினம் (12) இது வரை 04 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, ஒருவர் குணமடைந்துள்ளார்.

  • மேலும் ஒருவர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 199

    கொழும்பு: இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று (11) இரவு 11.30 மணியளவில் தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 198 இலிருந்து 199 ஆக அதிகரித்துள்ளது.

  • இலங்கையில் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் சிறுவர்கள்

    இலங்கையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த காலப் பகுதியில் சிறுவர் துன்புறுத்தல்கள் வெகுவாக அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கின்றது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாநிதி முதித்த விதானபத்திரன ஊடகங்களுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

←Previous Page
1 … 36 37 38 39 40 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar