WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • மேலும் 18 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 523

    ஒரே நாளில் 63 பேர் அடையாளம்; இது வரை ஆகக் கூடிய பதிவு இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 18 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று (26) இரவு 11.58 மணியளவில் தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 505 இலிருந்து 523 ஆக அதிகரித்துள்ளது.

  • நாளை நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம்

    கொழும்பு: விடுமுறையில் சென்றுள்ள முப்படை அதிகாரிகளை முகாம்களுக்கு அழைப்பதனை இலகுபடுத்தும் வகையில் நாளை (27) திங்கட்கிழமை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அதற்கமைய, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில், ஊரடங்குச் சட்டம் செவ்வாய்க்கிழமை (28) அதிகாலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டு அன்றைய தினம் இரவு 8.00 மணிக்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.

  • கொரோனா வைரஸ் தொற்றுநோய் இலங்கையில் இத்தாலியை ஒத்ததாக உள்ளது

    கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்த இலங்கையின் தற்போதைய நிலைமையானது இத்தாலியை ஒத்ததாக பயணிப்பதாக எச்சரிக்கை விடுக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பேலியகொட மீன்வாடியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுநோயாளி மூலமாக கொழும்பில் பலருக்கு கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது எனவும் கூறுகின்றனர். இப்போதுள்ள இலங்கையின் நிலவரம் குறித்து அரச வைத்தியர் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அழுத்கே கூறுகையில்,

  • இங்கிலாந்து வைத்தியர்களின் கொரோனா தடுப்பு மருந்து முதல்கட்ட சோதனை வெற்றி

    லண்டன்: கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் விலங்குகளுக்கு அளித்து முதல்கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ள இங்கிலாந்து மருத்துவர்கள், அடுத்ததாக மனிதர்களிடம் அதை பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர். கொரோனா தடுப்பு மருந்து மட்டுமே அதன் பரவலை கட்டுப்படுத்தும் ஒரே தீர்வு என உலக அளவில் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் அனைத்து நாடுகளும் இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது தொடர்பாக மிகத்தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றன.

  • கொழும்பு ஒரே வீதியைச்சேர்ந்த 26 பேர் காத்தான்குடி தளவைத்தியசாலைக்கு வருகை

    காத்தான்குடி: காத்தான்குடி தள – கடற்கரை வைத்தியசாலைக்கு கோவிட் 19 தொற்றுக்குள்ளான கொழும்பு 12 ஒரே வீதியைச் சேர்ந்த 26 பேர் திங்கள் மாலை இராணுவத்தின் பாதுகாப்பில் வந்து சேர்ந்தனர். இவர்களுள் ஒரு தமிழ்ப்பெண் ஒருவரும் ஏனைய அனைவரும் முஸ்லிம்களாவர். இவர்களுள் 18 பெண்களும், 8 ஆண்களும் உள்ளடங்குகின்றனர். மேலும் 3 சிறுவர்களும் உள்ளடங்குவதாகவும், வந்தவர்களுள் அதிகமானவர்கள் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் தெரியவருகிறது.

  • தேர்தல் ஆணைக்குழுவுக்கு NFGG அனுப்பி வைத்துள்ள கடிதம்!

    தலைவர்தேர்தல்கள் ஆனைக்குழுதேர்தல்கள் செயலகம்சரண மாவத்தைராஜகிரிய. ஒத்திவைக்கப்பட்டுள்ள பொதுத் தேர்தல்  தொடர்பாக.. 2020 ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவிருந்த பொதுத் தேர்தல் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட கொவிட் 19 வைரஸ் பிரச்சினையினால் ஒத்திவைக்கப்பட்டது.

  • ஈஸ்டர் தாக்குதல் தற்கொலைதாரிகளுடன் தொடர்புகளை பேணிய நபர்கள் அனைவரையும் விரைவில் சட்டத்தின் முன்னால் நிறுத்தி தண்டிப்போம்: மேஜர் ஜெனரல் கமல்

    கொழும்பு: கடந்த ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் நடத்திய தற்கொலைதாரிகளுடன் தொடர்புகளை பேணிய நபர்களையே இப்போது கைது செய்துள்ளோம். இந்த குற்றத்தில் தொடர்புபட்ட அனைவரையும் விரைவில் சட்டத்தின் முன்னால் நிறுத்தி தண்டிப்போம் என்கிறார் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன.

  • ஊரடங்கு தளர்த்தப்படும் விபரங்கள்

    கொழும்பு ,கம்பஹா,புத்தளம்,கண்டி கேகாலை ம்ற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் 20 ஆம் திகதிக்கு பின்னர் தினமும் காலை 5 மணிக்கு நீக்கப்படும் ஊரடங்கு இரவு 8 மணிக்கு அமுலாகும், கொழும்பு,கம்பஹா,களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் 22 ஆம் திகதிக்கு பின்னர் சில பகுதிகளை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தினமும் காலை 5 மணிக்கு நீக்கப்படும் ஊரடங்கு இரவு 8 மணிக்கு அமுலாகும்,

  • ஜம்இய்யதுல் உலமா சபையின் ரமழான் கால வழிகாட்டல்கள்!

    அல்லாஹ் அல்குர்ஆனை இறக்கி அருளியதன் மூலம் புனித ரமழான் மாதத்தை சங்கைப்படுத்தியுள்ளான். ரமழான் துஆவினதும் பொறுமையினதும் மாதமாகும். இது முஸ்லிம்களாகிய நாம் ஆர்வத்தோடும் நிதானத்தோடும் உலமாக்களின் வழிகாட்டல்களோடும் அதிகமதிகம் நல்லமல்களில் ஈடுபடும் மாதமுமாகும்.

  • ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் கைது; சட்டத்தரணிகள் சங்கம் IGP இற்கு கடிதம்

    கொழும்பு: உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பு எனத் தெரிவித்து, CID யினால் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் கைது தொடர்பில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பொலிஸ் மாஅதிபருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. அச்சங்கத்தின் தலைவர், காலிங்க இந்ததிஸ்ஸவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

  • ஏப்ரல் 21 ஆம் திகதியன்று காலை 8.45 மணிக்கு உயிரிழந்தவர்களுக்காக வீடுகளிலிருந்தவாறு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு பேராயர் கர்தினால் வேண்டுகோள்

    கொழும்பு: கடந்த 21/4 திகதியன்று மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவுத் திருப்பலிகள் மற்றும் விசேட வேலைத்திட்டங்கள் ஆகியன ஏற்கனவே திட்டமிப்பட்டப்படி நடத்தப்படாது என கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

  • ஏப்ரல் 25 இற்கு பின் தேர்தல் திகதியை அறிவிக்க ஜனாதிபதிக்கு முடியும்

    கொழும்பு: நாட்டில் கொரோனா தொற்றினால் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்துவதற்கு அரசாங்கம் அவசரம் காட்டவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் நடத்துவதற்கு முன்னர் திகதி குறிப்பிடப்பட்டது. ஆனால் தற்பொழுது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் தேர்தலை ஒத்தி வைப்பதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்புக்கு எதிராக அரச தரப்பு நீதிமன்றத்தை நாட வில்லை.

←Previous Page
1 … 35 36 37 38 39 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar