-
சீன விமானங்கள் அமெரிக்காவில் தரையிறங்க தடை?
வாஷிங்டன் DC: அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே தொடர்ந்து நிலவி வரும் பதற்றங்களுக்கு மத்தியில் வரும் ஜூன் 16ஆம் தேதி முதல் சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு வரும் பயணிகள் விமானங்களுக்கு தடை விதிப்பதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து மீண்டெழ தொடங்கியபோதும், அமெரிக்க விமானங்களை தங்களது நாட்டிற்குள் அனுமதிக்காத சீனாவை தண்டிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.
-
ஹஜ் கடமையில் இருந்து இந்தோனேசியா விலகல்
ஜகார்த்தா: உலகில் அதிக வழிபாட்டாளர் குழுவினர் பங்கேற்கும் இந்தோனேசியா கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஹஜ் கடமையில் இருந்து விலகியுள்ளது. உலகின் மிகப் பெரிய முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட இந்தோனேசியாவில் இருந்து இந்த ஆண்டு ஹஜ் கடமைக்கு 220,000க்கும் அதிகமானவர்கள் பங்கேற்கவிருந்தனர்.
-
A9 வீதியில் விபத்து; பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் பலி
வவுனியா, கனகராயன்குளம் ஏ-9 வீதியில் இன்று (03) காலை இடம்பெற்றுள்ள வாகன விபத்தில், பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் மரணமடைந்துள்ளனர். மட்டக்களப்பில் பணியாற்றும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் விடுமுறை நிமித்தம், யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு பிறிதொரு இளைஞருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
-
அமெரிக்காவை அதிரவைக்கும் போராட்டங்கள்
செயிண்ட் லூயிஸ்: அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் காவல் மரணத்தை தொடர்ந்து நடக்கும் போராட்டங்களில் வன்முறை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.செயிண்ட் லூயிஸ் நகரில் நான்கு காவல் அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது என அந்நகர காவல் துறை தெரிவித்துள்ளது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனினும் உயிராபத்தை உண்டாக்கும் காயங்கள் அவர்களுக்கு உண்டாகவில்லை.
-
கபூர் கட்டிடத்தில் இருந்த 200 கடற்படை வீர்ரகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
கொழும்பு புறக்கோட்டை கபூர் கட்டிடத்தில் இருந்த 200 கடற்படை வீர்ரகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இது குறித்து இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் இசுறு சூரிய பண்டார தெரிவிக்கையில், இது குறித்து மக்கள் குழப்பமடையத் தேவையில்லை. குறித்த கபூர் கட்டிடத்தில் ஒரு கடற்படை வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, குறித்த கட்டிடத்தில் இருந்த 200 கடற்படை வீரர்களும் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த கட்டிடமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
-
ஊரடங்கை மீறிய 66,519 பேர் இதுவரையில் கைது
கொழும்பு: கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் நாடு முழுவதும் 66,519 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 18,733 வாகனங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 20ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் இன்று (28) அதிகாலை 4.00 மணி வரையான காலப்பகுதியினுள்ளே இக்கைதுகள் இடம்பெற்றுள்ளன.
-
சோத்துக்கு சோரம்போன எங்களுக்கு எப்பதான் நல்ல புத்தி வருமோ ?
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதிலும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதன் பின்பு கடந்த ஏப்ரல் 12,13 ஆகிய தினங்களில் தமிழ், சிங்கள சித்திரை புத்தாண்டும், முஸ்லிம்களுக்கு கடந்த 24 இல் நோன்புப் பெருனாள் என நாட்டின் மூன்று சமூகத்தவர்களுக்கும் பெருநாள் அனுஸ்டிக்கப்பட்டது. அதில் தமிழ், சிங்கள புத்தாண்டின்போது சமூக வலைத்தளங்களில் பெரியளவில் பெருநாள் களை கட்டப்படவுமில்லை, பெருமை புகழ் பாடப்படவுமில்லை.
-
பல்கலை நுழைவு ஒன்லைன் விண்ணப்ப முடிவுத் திகதி ஜூன் 02
2019/2020 கல்வி ஆண்டு, பல்கலைக்கழக நுழைவுக்கான ஒன்லைன் மூல விண்ணப்பங்கள், எதிர்வரும் ஜூன் 02 ஆம் திகதி நிறைவடையும் என, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தெரிவித்துள்ளது. மார்ச் மாதம் 26ஆம் திகதி வரை இதற்கான முடிவுத் திகதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று நிலை காரணமாக, குறித்த விண்ணப்ப முடிவுத் திகதி மேலும் நீடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-
சமூக இடைவெளியை பேணாதோர் கைது செய்யப்படுவர்
கொழும்பு: நாளை (26) முதல் சமூக இடைவெளியை பேணாதவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
-
போதைப்பொருளுடன் கிரிக்கட் விளையாட்டு வீரரான ஷெஹான் மதுஷங்க கைது
குளியாப்பிட்டி – பன்னலை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கிரிக்கட் விளையாட்டு வீரரான ஷெஹான் மதுஷங்க கைது செய்யப்பட்டுள்ளார். பன்னல பொலிஸாருக்கு கடந்த சனிக்கிழமை கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாக பன்னல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
-
குவைத்திலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு கோவிட்19 தொற்று
கொழும்பு: இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்று (25) முற்பகல் 10.00 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,141இலிருந்து 1,148 ஆக அதிகரித்துள்ளது.
-
இந்த நோன்பும், பெருநாளும் வரலாற்றில் பேசப்படும்
இரண்டாம் உலகப்போரின் பின்னர் முதன்முதலாக ஐரோப்பவை மாத்திரமல்ல அமெரிக்காவையும் கோவிட் 19 வைரஸ் அச்சத்தால் உறையவைத்துள்ளது. இங்கிலாந்தில் இந்நோயினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை நாற்பதாயிரத்தை எட்டும் நிலையில்..ஹரமைன்- இரண்டு ஆலயங்களின் தரிசித்தல் மட்டுப்படுத்தப்பட்டிருக்கையில்…உலகின் அதிகமான நாடுகளில் கல்வி, வர்த்தகம், விமானசேவைகள், அரச நிர்வாக சேவைகள் தொடக்கம் விளையாட்டுப்போட்டிகள் வரை காலவரையின்றி முடங்கிக்கிடக்கின்றன.