வெள்ளைப்படுதலை குணப்படுத்தும் தேங்காய் எண்ணெய்

coconut oil1தேங்காய் எண்ணெய் என்பது, காய்ந்த தேங்காயில் இருந்து பிரித்தெடுக்கப்படும். இதில் பல உடல்நல மற்றும் அழகு நன்மைகள் உள்ளன. மேலும் இதனால், ஈஸ்ட் தொற்றுக்கான சிகிச்சைக்கு பயன்படுத்தலாம். இன்னும் சொல்லப்போனால் இது இயற்கை வைத்தியங்களில் மிகச்சிறந்த ஒன்று. இந்த எண்ணையில் மூன்று விதமான கொழுப்பு அமிலம் உள்ளது. அவை லாரிக் அசிட், கேப்ரிக் அசிட், மற்றும் கேபிரில்லிக் அசிட். இது ஈஸ்ட் தொற்றுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என சொல்லப்படுகிறது. Read the rest of this entry »

பிரபல போதைப் பொருள் வியாபாரி ‘டீ மஞ்சு’ என்பவரது உதவியாட்கள் கைது

வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் பிரபல போதைப் பொருள் வியாபாரியான ‘டீ மஞ்சு’ என்பவரது உதவியாட்கள் மூவர் ஹெரோயின் மற்றும் ஹசீஸ் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (06) பிற்பகல், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போதே ஹேகித்த பிரதேசத்தில் போதைப் பொருட்களுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். Read the rest of this entry »

சுங்க பணிப்பாளர் நாயகமாக மீண்டும் திருமதி சார்ள்ஸ்

சுங்க திணைக்கள பணிப்பாளர் நாயகமாக திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸை, மீண்டும் நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சுங்க திணைக்கள பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய அவர், அப்பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் (05) கூடிய அமைச்சரவையில் அவரை மீண்டும் அப்பதவியில் நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. Read the rest of this entry »

‘முட்டாள்’களின் சுதந்திர தினம்

  • AK-79

parliament (2)இலங்கையின் வழமையான சுதந்திர தின நிகழ்வுகள் போன்று 71வது சுதந்திர தினமும் இன்று அரங்கேறுகிறது. ஜனாதிபதியும், பிரதமரும், உள்ளுர் அரசியல்வாதிகளும் தேசியக் கொடியை ஏற்றிவிட்டு, வந்திருப்போர் வாயில் சாந்தியும் சமாதானமும் மலரட்டும் என்ற வார்த்தையை அள்ளிவிட்டு விடைபெறும் ஓர் விடுமுறை நாள் இன்றாகும். Read the rest of this entry »

உலகின் முதல் ஹோல்லெஸ் ஸ்மார்ட்போன்

phoneஉலகின் முதல் ஹோல்லெஸ் ஸ்மார்ட்போன் மீஸு ஜீரோ மாடலை மீஸு நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மிரட்டலான ஹோல்லெஸ் மீஸு ஜீரோ ஸ்மார்ட்போன் இல் ஒரு துளைகள் கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஹோல்லெஸ் ஸ்மார்ட்போன் இல் பட்டன்கள் மற்றும் போர்ட்களுக்கென எந்தத் துளை அனுமதியும் வழங்கப்படவில்லை என்பதே சிறப்பு.

Read the rest of this entry »

ஜனாதிபதியின் மரணம் தொடர்பாக கணிப்பு கூறிய ஜோதிடர் விடுதலை

rohana vijemuniகொழும்பு: “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2017ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதிக்கு முன்னர் மரணிப்பார்” என கணிப்பு கூறிய ஜோதிடர் விஜித ரோஹன விஜேமுனிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து, புதன்கிழமை அவர் விடுவிக்கப்பட்டார். மேற்படி வழக்கை சட்டமா அதிபர் மீளப்பெற்றமையினால், ஜோதிடரை அந்த வழக்கிலிருந்து விடுவிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது. Read the rest of this entry »