-
ஹரீஸ் – ஹக்கீம் மோதல் : மன்னிப்பின் பின்னால் உள்ள அரசியல்..?
20க்கு வாக்களித்த முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்றஉறுப்பினர்களுக்கு கட்சி தலைவர்கள் என்ன தண்டனையை வழங்க போகிறார்கள் என்ற வினா பரவலாக மக்களின்உள்ளத்தில் இருந்தது. மக்களின் இவ் வினாவுக்கானவிடையை மு.கா தலைவர் பல வழிகளிலும் தவிர்த்துவந்திருந்தாலும், அவர் பதில் வழங்கியேயாக வேண்டியநிர்ப்பந்தம் நடைபெற்று முடிந்த 30வது பேராளர் மாநாட்டில்ஏற்பட்டிருந்தது. இதற்கான பதில் கிடைத்துமிருந்ததெனலாம்.
-
அக்கரைப்பற்று: உலர் உணவுப்பொதிகள் வினியோகம்
– நூருல் ஹுதா உமர் அக்கரைப்பற்று சகாத் நிதியம்,ஜம்மியத்துல் உலமா சபை, பள்ளிவாசல்கள் மற்றும் சமூக நிறுவனங்கள் இணைந்து தேவையுடைய சுமார் 5000 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகளை வழங்கிவைத்தனர்
-
சம்மாந்துறை ஆயுர்வேத பாதுகாப்பு சபையால் விழிப்பூட்டல் நிகழ்வுகள் !
நூருல் ஹுதா உமர் இயற்கையோடு ஒன்றித்த வாழ்வை முன்னெடுப்பதற்கும், மருத்துவ மூலிகைகளை அறிவதற்கும் பொதுமக்களுக்கு குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு விழிப்பூட்டுகின்ற வேலை திட்டம் சம்மாந்துறை ஆயுர்வேத பாதுகாப்பு சபையால் பற்றுறுதியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு அமைய சம்மாந்துறை கோட்டத்துக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இடையில் போட்டி நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள் மாத்திரம் அன்றி போட்டியாளர்கள் அனைவருக்கும் பரிசில்கள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டனர் என்று சபையின் பொது செயலாளர் வைத்திய கலாநிதி எம். சி. எம்.…
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதிப்பொருளாளராக மீண்டும் ஏ.சி. எஹியாகான் நியமனம்
நூருல் ஹுதா உமர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 30 வது பேராளர் மாநாட்டுக்கு முந்திய கட்டாய உயர்பீட கூட்டம் கட்சியின் “தாருஸ்ஸலாம்” தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை (6) நடைபெற்றது. இதன்போது அக்கட்சியின் பிரதிப்பொருளாளராக சாய்ந்தமருதை சேர்ந்த ஏ.சி. எஹியாகான் சபையோரால் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
-
கல்முனை தாருஸபாவில் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு
நூருல் ஹுதா உமர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கல்முனை தாருஷபா குர்ஆன் மதரஸா மாணவர்களுக்கிடையில் மீலாத் விழா போட்டிகளாக இடம்பெற்ற இஸ்லாமிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும், கௌரவிப்பும் நிகழ்வு தாருஷபா அமையத்தின் தலைவரும், பாத்திமத்துஸ் ஸஹ்ரா அரபுக்கல்லூரி அதிபருமான மௌலவி ஏ.ஆர். சபா முஹம்மத் தலைமையில் உலமாக்கள் முன்னிலையில் தாருஷபா அமையத்தில் இன்று இடம்பெற்றது.
-
முஸ்லிம் காங்கிரசின் பேராளர் மாநாட்டுக்கு அழைக்கப்பட்ட பேராளர்கள் யார் ? தலைவர் விரும்புவதும், வெறுப்பதும் யாரை??
மக்களுக்காக கட்சி, கட்சிக்காக தலைவர் என்பது ஜனநாயக மரபு. ஆனால் இவைகள் அனைத்துக்கும் மாற்றமாக தலைவருக்காக கட்சி, தலைவருக்காகவே மக்கள் என்பது முசோலினி, ஹிட்லர் போன்றவர்களின் பாசிசவாத கொள்கையாகும். இங்கே தலைவர் ரவுப் ஹக்கீமின் அரசியல் ஓர் பாசிசவாதமாகும்.
-
கோட்டாவின் முகவர் ACJU “அறிக்கை‘ வெளியீடு!
நெருக்கடியான இந்த சூழலில் நாட்டு மக்கள் அமைதியாக செயற்பாடுமாறும் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துவதையும் வன்முறையையும் தவிர்ந்து கொள்ளுமாறும் வேண்டிக் கொள்வதோடு, அரசியல் தலைமைகள் கால தாமதமின்றி பாராளுமன்றத்தை கூட்டி, அரசியல் ஸ்திரத்தன்மையை நாட்டில் ஏற்படுத்துமாறும் ஜம்இய்யா வேண்டுகோள் விடுக்கின்றது.
-
கல்முனையில் தனியார் பஸ்களை வீதிக்கு குறுக்காக நிறுத்தி போராட்டம் : இ.போ.ச ஊழியர்களும் கவனயீர்ப்பு போராட்டத்தில் !
நூருல் ஹுதா உமர் கல்முனை: எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்தும், சீரான எரிபொருள் விநியோகம் நடைபெறாமல் உள்ளதை காரணமாக கொண்டும் நாட்டின் பல பகுதிகளில் தற்போது போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்போது எரிபொருளை தடையின்றி வழங்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
-
மஹ்மூத் லெப்பை ஆலிம் பூங்காவிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு : MLAM ஹிஸ்புல்லாஹ் ஆரம்பித்து வைத்தார்
நூருல் ஹுதா உமர் காத்தான்குடி நகரசபையினால் ஆற்றங்கரையில் அமைக்கப்படவுள்ள மஹ்மூத் லெப்பை ஆலிம் பூங்காவிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (03) காத்தான்குடி நகர முதல்வர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையில் நடைபெற்றது.
-
சாய்ந்தமருதில் வரலாறு காணாத எரிபொருள் வரிசை : போக்குவரத்தும் ஸ்தம்பிதம்!
நூருள் ஹுதா உமர் சாய்ந்தமருது: அம்பாறை மாவட்ட சாய்ந்தமருது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றைய தினம் காலை முதல் பல்வேறு குழப்ப நிலைக்கு மத்தியில் எரிபொருள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் நீண்டவரிசையில் வாகனங்கள் காத்திருப்பதனால் போக்குவரத்து நெரிசல் அந்த இடத்தில் ஏற்பட்டுள்ளது.
-
இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். 1949ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் திகதி பிறந்த பிறந்த ரணில் விக்ரமசிங்கவுக்கு 73 வயதாகும்.
-
ஏறாவூரிலுள்ள நஸீர் அஹமட்டின் காரியாலயம் தீயிட்டு கொளுத்தப்பட்டது!
நூருல் ஹுதா உமர் ஏறாவூரிலுள்ள முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பொறியியலாளர் அல்ஹாபிழ் நஸீர் அஹமட்டின் காரியாலயம் (செவ்வாய்கிழமை) மக்களால் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று முன்தினம் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.