-
தற்கொலைதாரி 12 வருடம் மதீனாவிலிருந்த பாகிஸ்தான் பிரஜை
மதீனா: மதீனாவில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற தாக்குதலை மேற்கொண்டவர் அப்துல்லாஹ் கல்ஷா கான் எனும் பாகிஸ்தான் பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த நபர் கடந்த 12 வருடங்களாக மதீனாவில் வசித்து வந்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
-
நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் எம் உறவுகளோடு….
அஸ்ஸலாமு அலைக்கும் சங்கை பொருந்திய ரமழான் எம்மைவிட்டும் கடுகதியில் பிரிந்திவிட்டது. முஃமினுக்கு ரமழானின் பிரிவு, பெருநாளை அடுத்துவரும் ஓரு சில தினங்களுக்குக் கவலையாகவே இருக்கும்.
-
காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அறிவித்தல்
அன்புடையீர்: அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ பின்வரும் விடயங்களை கடைப்பிடித்து இன்ஷா அல்லாஹ நாளை 06.07.2016ம் திகதி ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுமாறு காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சகல பொது மக்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றது.
-
ஷவ்வால் பிறை காத்தான்குடியில் தென்பட்டது
காத்தான்குடி: ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறை காத்தான்குடியில் சற்றுமுன்னர் தென்பட்டுள்ளது. இதன்படி இன்ஷா அல்லாஹ் நாளை புதன்கிழமை ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகிறது.
-
நீதிமன்றம் மூடப்பட்டதால் சரணடைய வந்த தெவரப்பெரும ஏமாற்றம்
கொழும்பு: மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலித தெவரப்பெரும, வைத்தியசாலையிலிருந்து வெளியாகி, சரணடைவதற்காக சென்றுள்ளார். உரிய ஆவணங்களுடன் இன்று பி.ப. 3.30 மணியளவில் மதுகம நீதிமன்றில் சரணடைய சென்றபோதிலும் நீதிமன்ற கடமைகள் நிறைவடைந்ததால் நீதிமன்றம் மூடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
-
மஸ்ஜித் நபவிக்கு அருகில் தற்கொலைத் தாக்குதல்
மதினா: இஸ்லாத்தின் மிகப் புனித ஸ்தலங்களில் ஒன்றாகக் கருதப்படும் மதினா மஸ்ஜித் நபவிக்கு வெளியே தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்று நடந்ததாக செய்திகள் வந்துள்ளன.
-
இந்தக் கலாநிதி ஏன் இப்படி இருக்கிறார்? பகுதி 01
காத்தான்குடியைச் சேர்ந்த கலாநிதி அஹ்மத் அஷ்ரப் என்பவரின் அண்மைக்கால செயற்பாடுகள் படு முட்டாள்தனமாக இருப்பதை பொது வாழ்வில் உள்ள அனைவரும் நன்கறிவார்கள். இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பிரச்சாரம் செய்து வரும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தையும் அதன் பிரச்சாரகர்களையும் அநியாயமாகவும் அர்த்தமற்ற வகையிலும் விமர்சிப்பதில் தனது முழு நேரத்தையும் இவர் செலவிட்டு வருகிறார்.
-
மகிந்த விசுவாசிகள் 8 பேர் அரசாங்கத்தில் இணைவு
கொழும்பு: கூட்டு எதிர்க்கட்சி எதிர்வரும் 28ம் திகதி நடத்தவுள்ள நடைபேரணிக்கு முன்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கி வரும் கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டு எதிர்க்கட்சியில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச அரசியலில் ஈடுபடுவதை எதிர்த்தே இவர்கள் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
-
உலகின் பெரும்பாலான நாடுகளில் ரமழான் 30 தினங்களாக பூர்த்திசெய்யப்படுகிறது
AK-99 லண்டன்: உலக நாடுகளின் பிறை மற்றும் தொழுகை நேரங்களைக் கணித்துவரும் லண்டன் மர்கஸின் அறிவித்தல்களுக்கமைய இதுவரை சூரியன் நேரத்தோடு மறையும் உலக நாடுகளில் ஷவ்வால் பிறை தென்படாததால் ரமழானை 30 தினங்களாகப் பூர்த்திசெய்து, புதன்கிழமை பெருநாள் என அந்நாடுகள் அறிவித்திருக்கின்றன.
-
பெருநாள் சட்டங்கள்
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் ஒவ்வொரு சமுதாயமும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக சில நாட்களைத் தேர்வுசெய்து அந்நாட்களுக்குப் புனிதம் வழங்கி அவற்றை பெருநாட்களாகக் கொண்டாடிவருகின்றனர். இஸ்லாமிய மார்க்கத்தில் இரண்டுநாட்கள் மக்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டிய நாட்களாக உள்ளன. ஒன்று ஈதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள், மற்றொன்று ஈதுல் அழ்ஹா எனப்படும் ஹஜ்ஜுப் பெருநாள்.
-
குசல் பெரேராவுக்கு 10 கோடி ரூபா நட்டஈடு
லண்டன்: இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேராவுக்கு நட்டஈடு வழங்க சர்வதேச கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஊக்கமருந்து பாவித்த குற்றச்சாட்டின் பேரில் குசல் ஜனித் பெரேராவுக்கு சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு நீக்கப்பட்டதன் பின்னரே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.