-
அறிவிலிகளின் கைகளில் மாட்டிக்கொண்ட முகநூல்..
இர்ஷாட் ஏ.காதர் காத்தான்குடி: நோன்பு பிறையுடன் ஆரம்பமாகும் முகநூல் அறிவிலிகளின் ஸ்டேடஸ்கள் அவர்களையும் அடையாளப்படுத்தி, ஊரையும் அவமானப்படுத்திச் சென்றுகொண்டிருக்கின்றன. மார்க்க அறிஞர்கள் எனக் கூறிக்கொள்வோரையும், சகோதரர்களையும் துண்டாட உருவாக்கப்பட்ட முகநூலின் நோக்கங்களிள் ஒன்று கச்சிதமாக வெற்றியடைந்திருக்கிறது.
-
புறக்கோட்டையில் தீவிபத்து
(காணொளி M. அக்ரம்)
-
அதிகூடிய கொக்கேய்ன் தொகை மீட்பு
கொழும்பு: பேலியகொட உணவு களஞ்சியசாலை ஒன்றில் சுமார் 270 கிலோ கொக்கேய்ன் மீட்கப்பட்டள்ளதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது. இலங்கையில் இதுவரை மீட்கப்பட்ட, அதி கூடிய கொக்கேய்ன் இதுவாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது வரை சுமார் 270 கிலோ கிராம் கொக்கேய்ன் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இரு கொள்கலன்களை சோதனையிட வேண்டியுள்ளதாக, போதைத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
-
“நரேந்திர மோடி வீடமைப்புக் கிராமம்” ஹம்பாந்தோட்டையில்
அஷ்ரப் ஏ சமத் ஹம்பாந்தோட்டை: இந்தியப் பிரதமா் நரேந்திர மோடியின் பெயரிலான ”நரேந்திர மோடி வீடமைப்புக் கிராமம்” ஹம்பாந்தோட்டை திஸ்ஸமகரமாவில் அமைச்சா் சஜித் பிரேமதாசாவினால் நேற்று (20) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
-
காத்தான்குடி ஆசிரியையால் முஸ்லிம்களின் இளவயது திருமணங்கள், விவாகரத்துக்கள் NGOக்களுக்கு விற்கப்படுகின்றனவா?
முஹம்மது நியாஸ் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் நடைபெற்றுவருகின்ற இளவயது திருமணங்கள் மற்றும் விவாகரத்துகளின் எண்ணிக்கைகள், விபரங்கள் அனைத்தும் ஒரு அரச சார்பற்ற மேலைத்தேய தனியார் தொண்டு நிறுவனம் (NGO) ஒன்றிற்கு விற்கப்படுவதாக நம்பகமான தகவல்கள் பல கிடைத்துள்ளன.
-
ஜித்தாவுக்கான புதிய consulate general இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சந்திப்பு
கொழும்பு: சவூதி அரேபியாவின் ஜித்தாவுக்கான புதிய consulate general ஆக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ள பைசல் மக்கீன், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வை இன்று சந்தித்து கலந்துரையாடினார். இன்று புதன்கிழமை இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,
-
காத்தான்குடி தள வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை கூடம் உருவாக்கம்
M.T. ஹைதர் அலி காத்தான்குடி: காத்தான்குடி தள வைத்தியசாலையில் மிக நீண்ட காலமாக தேவைப்பாடாகக் காணப்பட்டு வந்த சத்திர சிகிச்சை நிபுணர் ஒருவரை நியமிப்பதற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் பல பிரயத்தனங்களுக்கு மத்தியில் பல முயற்சிகளை மேற்கொண்டு நியமிக்கப்பட்டு 2016.07.20ஆந்திகதி (இன்று) முதல் முதன்முறையாக உத்தியோகபூர்வமாக சத்திர சிகிச்சை கூடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
-
போலி கடவுச்சீட்டு மற்றும் வீசாக்களை அச்சிட்டு வந்த அச்சகம் சுற்றிவளைப்பு
கொழும்பு: போலி கடவுச்சீட்டு மற்றும் வீசாக்களை அச்சிட்டு வந்த அச்சகத்தினை பொலிசார் சுற்றிவளைத்து சந்தேக நபர்கள் மூவரையும் கைது செய்துள்ளனர். குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர், நேற்று அவிஸ்சாவலை கொடிகாவத்தை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றினை சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது 75ற்கும் அதிகமான போலிக் கடவுச்சீட்டுகள் மற்றும் குவைட் வீசாக்கள் போன்றவையும் அச்சக உபகரணங்கள் சிலவற்றுடன் 2 இலட்ச ரூபாய் பணம், மோட்டார் வண்டி, முச்சக்கர வண்டி போன்றவையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
-
இங்கிலாந்தில் ஐக்கிய அமீரக பிரதமரும்-மகனும் மக்களோடு மக்களாக ரயில் பயணம்
லண்டன்: ஐக்கிய அமீரகத்தின் துணை ஜனாதிபதியும் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத், அவரது மகனும் இளவரசருமான ஷேக் ஹம்தான் பின் முகமது இருவரும் இணைந்து லண்டனின் மத்திய பகுதியில் அமைந்துள்ள சுரங்க ரெயிலில் பயணம் மேற்கொண்டனர்.கொளுத்தும் வெயில் கூட்ட நெரிசல் எதையும் பொருட்படுத்தாமல் பொதுமக்களுடன் இணைந்து இருவரும் பயணம் மேற்கொண்டது சமூக வலைப்பக்கங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
-
“ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்ட இயக்கம் வேரோடு அழிக்கப்படும்”- துருக்கி பிரதமர்
அங்காரா: துருக்கியில் கடந்த வெள்ளியன்று தோல்வியில் முடிந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதியைத் தொடர்ந்து, துருக்கியின் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதிப்படுத்த வேண்டும் என்று துருக்கி பிரதமர் பினாலி யில்டிரிம் தெரிவித்துள்ளார்.ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டதாக அரசால் குற்றம் சுமத்தப்பட்ட இயக்கம், வேரோடு அழிக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.