WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • இணையம் தோன்றிய வரலாறு

    இணையப் பயன்பாடு குறித்து நாம் எல்லோரும் அறிந்திருந்தாலும் அதன் தோற்ற வரலாறு பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 1960 ஆம் ஆண்டு வாக்கில் கணினிகளின் பயன்பாடு அதிகரித்த போதிலும், ஒரு கணினியிலுள்ள தகவல்களை மற்றொரு கணனியிடம் பகிர்ந்துகொள்ளும் நிலை வரவில்லை. இது கணினி பாடத்திட்டங்களை நடத்திவரும் பல பல்கலைக்கழ கங்களுக்கு பெரும் தலைவலியாக இருந்தது. அமெரிக்காவின் டார்ட்மெளத் மற்றும் பெர்க்லீ பல்கலைக்கழகங்கள் ஐ. பி. எம். கணினிகளைப் பெருமளவில் பயன்படுத்தி வந்தன. அந்த பல்கலைக்கழகங்களுக்கு பெரும் தலைவலியாக இருந்துவந்த…

  • குர்ஆன் பிரதிகள் எரிப்புக்கு அமெரிக்கா மன்னிப்புக் கோரல்

    காபூலில் தொடரும் கலவரங்கள். புனித குர்ஆன் பிரதிகள் காபூலில் எரிக்கப்பட்டதை அடுத்து அங்கு இரண்டாவது நாளாக கலகம் தொடர்ந்து வருகிறது. இது வரைக்கும் பதினொரு பேர் காயமடைந்திருப்பதாக அங்கு செயற்படும் ஊடகங்கள் அறிவித்திருக்கின்றன. .காபூலில் உள்ள நேட்டோ படைத்தளத்தில் இந்த குர்ஆன் பிரதிகள் அங்குள்ள படையினரால் எரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ‘லியோன் பனேட்டா’ நடந்த சம்பவத்திற்கு பொது மன்னிப்புக் கோரியுள்ளார். எனினும் இச்சம்பவமானது ‘அமெரிக்காவுக்கு சாவு’ எனவும் ‘கர்ஸாயிக்கு சாவு’ எனும் கோஷங்களுடன்…

  • ஹஜ் செய்யவுள்ளோர் பெப். 28க்குள் பதியவும்

    முஸ்லிம்களின் இறுதிக் கடமை யான ஹஜ்ஜுக் கடமையை நிறை வேற்ற 2012ம் ஆண்டு தயாராக வுள்ள அனைவரும் இம்மாதம் 28ம் திகதிக்கு முன்னர் முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் மூலம் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் பதிவு செய்யாதவர்களுக்கு ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்வது கஷ்டமாகும் என்று நகர விவகார சிரேஷ்ட அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி தெரிவித்தார். வாழைச்சேனை – கோறளைப்பற்று மத்தி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் நிருவாகக் காரியாலயத் திறப்பு விழா நிகழ்வு…

  • இங்கிலாந்தின் 4:0 வெற்றி

    இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் (U.A.E.) நடைபெற்று வந்த  சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டிகளில் 4:0 என்ற ரீதியில் பாகிஸ்தானை வெற்றிகொண்டு Bank Al-Falah வெற்றிக் கிண்ணத்தை இங்கிலாந்து அணி பெற்றுக் கொண்டது.

  • கிரிக்கெட் வர்ணணையாளர் ரணில் காலமானார்

    இலங்கை கிரிக்கெட் இடைக்கால நிர்வாக சபையின் முன்னாள் உறுப்பினரும் தேசிய தெரிவுக் குழுவின் உறுப்பினருமான ரணில் அபேநாயக்க சுகயீனமுற்றிருந்த நிலையில் தனது 57 ஆவது வயதில் இன்று காலை காலமானார். இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான இவர் சிறந்த கிரிக்கெட் வர்ணணையாளருமாவார். -வீரகேசரி இணையம்

  • பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்றுநராக வட்மோர்

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்றுநராக டேவ் வட்மோர் அடுத்தமாதம் பொறுப்பேற்கவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பங்களாதேஷில் நடைபெறவுள்ள ஆசிய கிண்ணத் தொடரானது வட்மோரின் பயிற்சியின்கீழ் பாகிஸ்தான் அணி விளையாடும் முதலாவது சுற்றுப்போட்டியாக அமையும். டேவ் வட்மோரும் களத்தடுப்பு பயிற்றுநர் ஜூலியன் பௌண்டெய்னும் தமது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்காக அடுத்த மாதம் பாகிஸ்தானுக்கு வருவர் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் சிரேஷ்ட அதிகாரியொருர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்து;ளளார்.

  • காத்தான்குடி ஜம்மிய்யத்துல் உலமாவின் புதிய நிர்வாகத் தெரிவு

    (அஷ்ஷெய்க் C.M.M.  அமானி (நளீமி) BA) ஹிஜ்ரி 1433 – 17.02.2012ம் திகதி நடைபெற்ற ஜம்இய்யாவின் பொதுச் சபைக் கூட்டத்தின்போது தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் விபரம் வருமாறு: ஆயுட் காலத் தலைவர் :                        மௌலவி I.L.M. முஸ்தபா (பஹ்ஜி) 01. தலைவர் :                                                  மௌலவி S.M. அலியார் (பலாஹி) 02. செயலாளர் :                                             அஷ்ஷெய்க். M.H. ஜிப்ரி (மதனி) BA. 03. பொருளாளர் :            …

  • ‘லியனல் மெஸ்ஸி’ இன் 200வது கோல்

    உலக உதைப்பந்தாட்டக் கழகங்களுள் முன்னணிக் கழகமான  Barcelona விற்கும் மற்றும் Valencia  ஆகிய அணிகளுக்கிடையில் நேற்றிரவு நடைபெற்ற லாலிகா (La Liga) ஸ்பெயின் லீக் போட்டியில் ஐந்து கோல்கள்  இட்டு  Barcelona வெற்றியீட்டிருந்தது.  உலகின் முன்னணி உதைப்பந்தாட்ட விருது பெற்ற வீரரும் ஆர்ஜண்டீனாவின் நம்பிக்கை நட்சத்திரமுமான ‘லியனல் மெஸ்ஸி’  (Lionel Messi) நான்கு கோல்களை இப்போட்டியின் போது தனது அணிக்காக பெற்றுக்கொடுத்ததன் மூலம் இந்த லீக்கில் 200வது கோல் மைல்கல்லையும் தொட்டார். மெஸ்ஸியின் மகிழ்ச்சியின் ஓரு ‘கிளிக்’. -yourkattankudy/spotrs.

  • ஈரானின் இரண்டு போர்க்கப்பல்கள் சிரியாவின் துறைமுகத்தில்

    ஈரானின் இரண்டு போர்க்கப்பல்கள் சுயஸ்கால்வாய்  (Suez Canal ) ஊடாக சிரியாவின் டார்டோஸ் துறைமுகத்தில் (port of Tartous) வந்து சேர்ந்திருப்பதாக உலக செய்தி நிறுவனங்கள் நேற்றிரவு செய்து வெளியிட்டிருந்தன. இத்தகவலை ஈரானின் மாநில ஊடகம்  மற்றும் The Mehr News Agency   ஆகியவை உறுதிப்படுத்தியிருந்தன.

  • கனடா ஆசைகாட்டி 269 பேர் டோஹோவில் கைது…

    இலங்கையிலிருந்து 260 க்கும் மேற்பட்டோரை கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி பல கோடி ரூபாவை பெற்றுக் கொண்டு  டோஹோ மற்றும் மாலிக்கு கொண்டு சென்று கைவிட்ட பிரதான சந்தேக நபரை கைது செய்துள்ளதாக கொழும்பு குற்ற ஒழிப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கனடாவுக்கு தொழில் வாய்ப்பினைத் பெற்றுத் தருவதாகக் கூறியே சுமார் 269 பேரை ஆபிரிக்க நாடான டோஹோவுக்கும் மாலிக்கும் அனுப்பியுள்ளார். குறித்த நபர் பற்றிய இரகசிய தகவலென்றின் மூலம் சந்தேக நபரைப் பின்தொடர்ந்த புலனாய்வு பிரிவினர் வெள்ளவத்தையிலுள்ள விடுதியில்…

  • நேற்றைய CRICKET நிமிடங்கள்…

    பாகிஸ்தான் -இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நேற்று Dubai யில் நடந்த 3வது ஒருநாள் தொடரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு உறுதுணையாயிருந்த  துடுப்பாட்டத்தின் ஓர் ‘கிளிக்’. PIETERSEN – COOK (C) ஆகியோர்    170 ஆரம்ப இணைப்பாட்டத்தைப் (Duo Shared) பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. –YourKattankudy/Sports.

  • பள்ளிவாயல்கள்-Update

    அஸ்ஸலாமு அலைக்கும் பள்ளிவாயல்கள் பகுதி புதிய தகவல்களுடன் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம். நன்றி. -Your Kattankudy

←Previous Page
1 … 1,295 1,296 1,297 1,298 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar