-
ஒன்பது மேலதிக வாக்குகளால் பிரேரணை நிறைவேற்றம்!
(Picture: Washington Post) இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை 9 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது! இதன்படி அமெரிக்க பிரேரணைக்கு ஆதரவாக 24 நாடுகளும் எதிராக 15 நாடுகளும் வாக்களித்தன 8 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
-
நட்பு!
போட்டியும் மோதலும் விளையாட்டில்தான் அதையும் தாண்டிய நட்பில்…… இன்றைய இறுதிப்போட்டியில் இருதுருவங்களாய் மோதும் இந்த இரு இளம் நட்சத்திர வீரர்களின் புன்னகையில்தான் எத்தனை எத்தனை ஆனந்தம்! வாழ்த்துக்கள்!!!
-
கடமையிலிருந்த அனைத்து அதிகாரிகளும் இடைநிறுத்தம்
கொழும்பு நூதனசாலை கொள்ளைச் சம்பவம்: கொழும்பு நூதனசாலையில் இருந்து தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த வாள்கள் காணாமல் போன சம்பவத்தை யடுத்து அன்றைய தினம் கடமையில் ஈடுபட்டிருந்த காவலாளி, இறுதியாக பொருட்களை பரீட்சித்த அதிகாரி, உதவி அதிகாரி அடங்கலான சகல பாது காப்பு அதிகாரிகளும் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய மரபுரிமை அமைச்சர் ஜகத் பாலசூரிய தெரிவித்தார்.
-
செனல் 4 காணொளிக்கு பதிலளிக்கும் இலங்கையின் காணொளி!
பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி சேவை வெளியிட்ட இலங்கையின் கொலைக் களங்கள் – தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள் எனும் காணொளிக்கு பதிலளிக்கும் வகையில் உத்தியோக பூர்வ காணொளி ஒன்றை இலங்கை வெளியிட்டுள்ளது. இக்காணொளியினை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ளது.
-
தாய்நாட்டை சர்வதேச அழுத்தங்களிலிருந்து பாதுகாப்பது முஸ்லிம்களின் பாரிய பொறுப்பு
ஜம்இய்யதுல் உலமா தலைவர்கள்: சர்வதேச ரீதியில் இன்று இலங்கைக்கு தோன்றியுள்ள அழுத்தங்களை எதிர் நோக்க வேண்டுமாயின் இலங்கையர் அனைவரும் ஒன்றுபட்டு அதனை எதிர்க்க வேண்டும். யுத்தம் முடிவடைந்து நாட்டில் அமைதி திரும்பிக் கொண் டிருக்கும் இவ்வேளையில் இஸ்லாமிய மதத்தலைவர்களான தங்களுக்கு நாட்டிற்காக செய்ய வேண்டிய பெரும் கடமை இருக்கிறது. அதனடிப்படை யில் நாட்டை நாம் சர்வதேச அழுத் தங்களில் இருந்து பாதுகாப்பது அவ சியமாகும்.
-
பாகிஸ்தானுடன் அடுத்த சவாலைச் சந்திக்கும் இறுதிப்போட்டியில் பங்களாதேஷ்
-MJ ஆசியக் கிண்ணம் 2012: இலங்கையும் இந்தியாவும் வெளியே. இன்று நடைபெற்று முடிந்த 2012ம் ஆண்டிற்கான அசியக் கிண்ணப் போட்டியின் இறுதி லீக் சுற்றுப் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி, இந்தியாவை வெளியேற்றி பங்களாதேஷ் அணி தனது கிரிக்கட் வரலாற்றில் சுற்றுப் போட்டி ஒன்றில் முதன் முறையாக இறுதிப் போட்டிக்கு தெரிவாகி இருக்கின்றது. பங்களாதேஷ் நகரங்களும் பட்டி, தொட்டி எங்கும் பட்டாசுகளும் பங்காளிக் கொடிகளும் வானைத் தொட மக்களின் மகிழ்ச்சி வெள்ளம் அலை அலையாய் நகரங்களைச் சுற்றி…
-
இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்களும் தொடரும் உள்நாட்டு-வெளிநாட்டு அழுத்தங்களும்
ஓர் விசேட அரசியல் கண்ணோட்டம் -MJ இந்தக் குற்றச் செயலானது இலங்கையில் தமிழ் மக்கள் மீது மாத்திரமே மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாக ஒரு பக்கச்சார்பான கருத்தை புலி ஆதரவு ஊடகமான சனல்-4 முன்வைத்திருக்கின்றமையும் புலிகளால் பல்லாயிரம் முஸ்லிம்களின் உயிர்கள் காவப்பட்டது முழுப் பூசனிக்கையை சோற்றில் மறைத்து மேற்படி ஊடகம் செயல்படுவதும் வேடிக்கையான ஒன்றாகும். இலங்கையில் உள்நாட்டு யுத்தம் காரணமாக தமிழ் மக்களுக்கு எதிராக சுமார் முப்பது வருடங்களாக நடைபெற்று வந்த உள்நாட்டுப் போரில் இலங்கை படையினரால்…
-
அக்பார் குறுந்தகவல் சேவை
காத்தான்குடி குறுந்தகவல் சேவைகளின் மற்றுமொரு மைல்கல்லாக அக்பார் (AKHBAAR) குறுந்தகவல் சேவை விரைவில் உதயமாகிறது.
-
சனல் – 4ன் நிர்வாக பணிப்பாளரின் மனைவி இலங்கை தமிழ்ப்பெண்
புதிய தகவல்கள் அம்பலம் சனல் 4 வீடியோ தொலைக்காட்சி நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளரின் மனைவி இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழ்ப் பெண் என்பது தெரியவந்துள்ளது. சிராணி சுப்பிரமணியம் என்ற பெயருடைய இந்தப் பெண்மணி, சனல் 4 தொலைக்காட்சியின் நிர்வாகப் பணிப்பாளரை மணந்து லண்டனில் வசித்து வருகின்றார். இந்தப் பெண்மணி (சிராணி சுப்பிரமணியம்) சனல் 4 தொலைக்காட்சியில் முன்னர் வர்த்தகப் பணிப்பாளராக பணிபுரிந்துள்ளார் என்பதும் இப்போது தெரியவந்துள்ளது.
-
ஆசியக் கிண்ண இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடப் போகும் அணி எது?
-MJ எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெற இருக்கும் ஆசியக் கிண்ண இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடப் போகும் அணி எது என்ற கேள்வி விளையாட்டு இரசிகர்களிடையே உள்ள இன்றைய பேச்சாக இருக்கின்றது.
-
தாயும் உறவும்
–மிஸ்ஜா புழுதி மணல் மண்வாசனை களிமண் குடிசை முற்றத்து நிலாச்சோறு வீட்டுத் தோட்டத்தின் குளிர்ந்த நிழல்
-
கொழும்பு அருங்காட்சியகம் உடைக்கப்பட்டு திருட்டு
இலங்கையின் பிரபல்யமான கொழும்பு அருங்காட்சியகம் (Museum) நேற்றிரவு இனம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு பல மில்லியன் பெறுமதியான விலையுயர்ந்த பழைமை பொருட்கள் களவாடப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பற்றி பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையும் பரிசோதனையும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.