-
GCE O/L -2011 பரீட்சையில் 9 A -பெற்று எமது நகருக்கு பெருமை சேர்த்த மாணவர்கள்
-MJ GCE O/L -2011 Results in Kattankudy: க.பொ.த. சா. பரீட்சை 2011 இன் பெறுபேறுகள் வெளியாகி முடிந்திருக்கும் இந்நிலையில் காத்தான்குடி கல்வி வலராறுகளில் காத்தான்குடி பதுரியா வித்தியாலயம் இம்முறை ஒரு சாதனையைப் படைத்து புகழை ஈட்டியிருக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்.
-
பலஸ்தீனம் மீதான பிரேரணைக்கு அமெரிக்கா மட்டும் எதிர்ப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் பலஸ்தீனர்களின் உரிமைகள் மீதான பிரேரணை தொடர்பாக ஆராய எடுக்கப்பட்ட போது, சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் அமெரிக்க தனியாக நின்று ஒதுங்கிக் கொண்டது. இதே தினத்தன்று தான் இலங்கை மீதான பிரேரணையும் ஆராயப்பட்டது.சுய நிர்ணயத்துக்கான உரிமைகளுக்கான பாலஸ்தீன உரிமைகளை ஆதரித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 47 உறுப்பினர்களுள் 46 பேர் ஆதரவாக வாக்களித்தனர். அமெரிக்கா மட்டும் எதிர்த்து வாக்களித்தது.
-
T20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியின் முதலாவது நுழைவுச்சீட்டை ஜனாதிபதி கொள்வனவு செய்தார்
-MJ இவ்வருடம் இலங்கையில் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியின் அனுமதிச் சீட்டுக்கள் நேற்றைய தினத்திலிருந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் தலைமை நிர்வாகியான ஹாருன் லோகட் தலைமையில் ‘Galle Face Green’ இல் நேற்று இடம்பெற்ற இவ்வைபவத்தில் இலங்கை கிரிக்கட் தலைவர் உபாலி தர்மதாச உட்பட பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
-
வரலாற்றில் இன்று
-MJ உலக கிண்ண வரலாற்றில் பல புதிய மாற்றங்களுடன் நவீன தொழிநுட்பத்திற்கு அமைவாக நடாத்தப்பட்ட Benson Hedges World Cup -1992 உலகக் கிண்ணப் போட்டியானது கிரிக்கட் வரலாற்றில் ஒரு திருப்புமுணையை அன்று ஏற்படுத்தி இருந்தது. அவுஸ்திரேலியா-நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளும் இணைந்து நடாத்திய உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியின் இறுதிப் போட்டி 25-03-1992 அன்று உலகப் புகழ்பெற்ற அவுஸ்திரேலியாவின் மெல்போன் நகரில் இடம் பெற்றது.
-
12 ஆவது தோஹா மாநாட்டுக்கு ஜனாதிபதிக்கு அழைப்பு!
12 ஆவது தோஹா மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தோஹா கட்டாரின் அமீர் அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையில் உள்ள கட்டார் தூதுவர் செய்யத் அப்துல்லாஹ் அல்- மன்சூர் – கட்டார் அமீரின் அழைப்பை இன்று ஜனாதிபதியிடம் கையளித்தார்.
-
மனித உரிமை ஆர்வலர்களின் கைகால்களை உடைப்பேன்
–BBC Tamil இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்துக்கு ஆதரவாகச் செயல்பட்ட இலங்கையின் மனித உரிமை ஆர்வலர்களின் கைகால்களை உடைப்பேன் என்று மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மெர்வின் சில்வா தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தற்போது பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருக்கிறது. இலங்கைக்கு எதிரான ஐநா மனித உரிமை கவுன்சில் தீர்மானத்திற்கு ஆதரவாக குரல்கொடுக்கும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் இலங்கை அரசை விமர்சிப்பதாக அரசு கருதும் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவன்ங்கள் குறித்து இலங்கை அரசும், அரச கட்டுப்பாட்டில் இருக்கும் ஊடக…
-
டில்சான் மீது குற்றச்சாட்டு: இலங்கை கிரிக்கெட் நிராகரிப்பு
இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர் திலகரட்ண தில்ஷான் மீது புதிதாக எழுப்பப்பட்டுள்ள கருத்துக்களை முழுமையாக எதிர்ப்பதாக இலங்கைக் கிரிக்கெட் சபை விடுத்துள்ள உத்தியோக பூர்வமான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் சண்டே டைம்ஸ் வெளியிட்ட செய்தியறிக்கையில் சூதாட்டங் களுக்கு வீரர்களை உளவுபார்ப்பதற்காக பொலிவூட் நடிகையான நுபுர் மேக்தா பயன்படுத்தப்படுவதாகத் தெரிவித்தது. அதனை அடுத்து முதலில் கிரிக்கெட் வீரர்களுடன் எந்தவித்த தொடர்புகளோ, பழக்கமோ கிடையாது எனத் தெரிவித்திருந்த நுபுர் மேக்தா, இறுதியாக தனக்கும் தில்ஷானிற்கு மிடையில் தொடர்புகள் காணப்பட்டதாகத்…
-
பாடசாலை மாணவர்களின் பகல் போசனத்துடன் முட்டை வழங்க ஏற்பாடு
பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு திட்டத்தை மேம்படுத்தும் வகையில் வாரத்தில் மூன்று நாட்களுக்கு பகல் போசனத்துடன் முட்டை ஒன்றையும் வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். உணவு பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு கட்டுப்பாட்டு குழுவின் கூட்டம் ஜனாதிபதியின் தலைமையில் அலரிமாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற போதே ஜனாதிபதி குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு இப்பணிப்புரையை விடுத்துள்ளார்.
-
‘வானொலிக் குயில்’ ராஜேஸ்வரி சன்முகம் மறைவு
இலங்கை வானொலி தமிழ் சேவை வரவாற்றில் மறக்க முடியாக அறிவிப்பாளராக கடமை புரிந்த அறிவிப்பாளர் திருமதி ராஜேஸ்வரி சன்முகம் அவர்கள் சுகவீனமுற்றிருந்த நிலையில் யாழ்ப்பானத்தில் இன்று காலாமானார்கள். ‘வானொலிக் குயில்’ என அழைக்கப்படும் இவர் ‘பொங்கும் பூங்குணல்’ நிகழ்ச்சியை திறம்பட அக்காலத்தில் தொகுத்து வழங்கி இரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார். கம்பீரக் குரலில் இனிமையாக காலை சூரியக் கதிர்களுடன் கலந்து வரும் இவரது குரல் இவருக்கே நிகர். இறக்கும் போது இவருக்கு வயது 72.
-
செலிங்கோ வைப்பீட்டாளர்களான விதவைப் பெண்களும், யுவதிகளும் மகளிர் விவகார அமைச்சரிடம் கோரிக்கை
– MJ –பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் மனைவி பெற்ற கடன் குறித்தும் பிரஸ்தாபம்- செலிங்கோ புரொபிட் செயரிங் நிதி நிறுவனத் தில் வைப்பீடுகளைச் செய்திருந்து அவற்றை இன்று வரைக்கும் மீளப்பெற முடியாமல் தவிக் கும் ஆயிரக்கணக்கான பெண்களைக் கொண்ட கூட்டமைப்பினர் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சர் கௌரவ திஸ்ஸ கரலியத்த அவர்களுக்கு தமது அவல நிலையை விளக்கி கடந்த 15ம் திகதி நீண்ட கோரிக்கைக் கடித மொன்றைஅனுப்பி வைத்துள்ளனர்.
-
ஆசியக் கிண்ணம் 2012 பாகிஸ்தான் வசம். பங்களாதேஷ் பரிதாபகரமான தோல்வி
நேற்று இரவு நிறைவடைந்த 2012ஆம் ஆண்டிற்கான ஆசியக் கிண்ணப் போட்டியின் மகிழ்ச்சியான காட்சிகளும், உலக விளையாட்டு இரசிகர்களை கலங்க வைத்த உருக்கமான காட்சிகளும் எமது விளையாட்டு இரசிகர்களுக்காக இங்கு பதிவேற்றப்படுகிறது. படங்களினைப் பெரிதாகப் பார்ப்பதற்கு படத்தின்மேல் ‘கிளிக்’ செய்யவும்.
-
அமெரிக்கா வென்றது-அதிகாரம் நீதியை தோற்கடித்தது
இலங்கைக்கு சீனா ஆதரவு – இந்தியா எதிர்ப்பு ஆதரவு: 24, எதிர்ப்பு: 15, 8 வாக்களிக்கவில்லை. உலக வல்லரசு என்ற போர்வையில் அமெரிக்கா தனது அதிகாரத்தை சிறு சிறு நாடுகள் மீது பிரயோகித்ததால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டது.