-
கருவிழி கூம்பல் நோய்க்கு முதல் முறையாக சிகிச்சை
இலங்கையை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள கெரட்டகோனர்ஸ் எனப்படும் கருவிழி கூம்பல் நோய்க்கு சிகிச்சை அளிக்கும் திட்டம் முதல் முறையாக தேசிய கண் வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
-
வெளிநாட்டினரை இலங்கையின் பக்கம் திரும்பச் செய்யும் காலி டெஸ்ட் போட்டி!
-MJ இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் தற்பொழுது நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் உல்லாசப் பிரயாணிகளின் பங்களிப்பு ஓர் விசேட அம்சமாக கணிக்கப்படுகின்றது. சுமார் 30 வருட இலங்கை கிரிக்கட் சரித்திரத்தில் இவ்வளவு பெருந்திரளான வெளிநாட்டவர்கள் இவ்வளவு சுதந்திரமாக இந்த போட்டியை பாரத்து இரசிக்கின்றமை இலங்கையின் சுமுகமான நிலையை உலகுக்கு எடுத்துக் காட்டும் ஓர் செயற்பாடாகவே இப்போட்டியின் பிரதிபலிப்பு அமைகின்றது.
-
நாடெங்கிலும் 40 ஆயிரம் போலி வைத்தியர்கள்
* சுகாதார அமைச்சு தகவல் * பொதுமக்களுக்கு எச்சரிக்கை நாடு பூராகவும் சுமார் 40 ஆயிரம் போலி மருத்துவர் கள் இருப்பதாக முறைப் பாடு கிடைத்துள்ளதால் அத்தகைய மருத்துவர்கள் குறித்து மிகவும் கவன மாக இருக்குமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. இத்தகைய மருத்துவர் கள் குறித்த விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சு தெரிவித்தது.
-
க.பொ.த.சா/த பரீட்சை: இரண்டு இலட்சத்து 70 ஆயிரம் மாணவர்களில் ஒரு இலட்சத்து 64, 000 பேர் உயர்தரம் கற்க தகுதி
* 3908 பேர் 9 ‘A’ * 12,795 பேர் 9 ‘F’ * முதல் 10 இடங்களில் தமிழ்மொழி மூலம் இல்லை * 463 பெறுபேறுகள் நிறுத்தம் 2011 டிசம்பர் மாதம் நடைபெற்ற க. பொ. த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய 2,70, 314 பாடசாலை பரீட்சார்த்திகளில் 1, 64, 191 பேர் க. பொ. த உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
-
மாபெரும் மருத்துவ கண்காட்சி
நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானபீடத்தின் மாணவர்களும் சேவையாளர்களும் இணைந்து முதன்முதலாக கிழக்கு மாகாணத்தில் மாபெரும் மருத்துவ கண்காட்சி ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை காலை கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானபீடத்தின் பீடாதிபதி கே.இ.கருணாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க பிரதம அதிதியாகவும் சிறப்பு அதிதியாக கிழக்குப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி மு.கோவிந்தராஜாவும் கலந்துகொண்டனர்.
-
463 மாணவர்களின் சா/த முடிவுகள் இடைநிறுத்தம்
-Adaderana 2011ம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சை முடிவுகளில் 463 மாணவர்களின் முடிவுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பல்வேறு காரணங்களை கருத்திற் கொண்டே இம்மாணவர்களின் முடிவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
-
GCE O/L பரீட்சையில் விசாகா கல்லூரி மாணவி தேசிய ரீதியில் முதலிடம்
வெளியிடப்பட்டுள்ள க.பொ.த சா/த பரீட்சை பெறுபேறுகளின் படி தேசிய ரீதியில் கொழும்பு விசாக்கா கல்லூரியின் மாணவி உதேசிகா மதுசானி ஹெட்டியாராச்சி முதலிடத்தை பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தை மாத்தளை சயன்ஸ் கல்லூரி மாணவன் அனுச பெரேராவும் மூன்றாம் இடத்தை கண்டி தர்மராஜ வித்தியாலய பாரத மதுசங்க என்ற மாணவனும் பின்னவல மத்திய மகா வித்தியாலய மாணவி தில்மி சமுத்ரிகா ஆகியோரும் பெற்றுள்ளனர். -adaderana
-
மன்னர் காலத்து தண்டனைகளுடன் ஒப்பிடும்போது கைகால்களை உடைப்பது குறைந்த தண்டனை: மேர்வின்
தன்னைப் பற்றிய வதந்திகளை பரப்புவதன் மூலம் விற்பனையை அதிகரித்துக்கொள்வதற்காக தனது பெயரை ஊடகங்கள் பயன்படுத்த விரும்பினால் அப்படி செய்துகொள்ளட்டும் என பொதுமக்கள் உறவுகள் அமைச்சர் மேர்வின் சில்வா கூறினார். பண்டைய மன்னர்கள் காலத்தில்; வழங்கப்பட்ட தண்டனைகளுடன் ஒப்பிடும்போது கைகால்களை உடைப்பது குறைந்த தண்டனையாகும் என்பதை நான் கூற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
-
ஆமிரின் போட்டித் தடையை எதிர்த்து மேன்முறையீடு செய்ய பாகிஸ்தான் கிரிக்கெட் அறிவுரை
இங்கிலாந்தில் 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஸ்பொட் ஃபிக்சிங் சம்பவம் தொடர்பாக ஐந்து வருடகால போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஆமிரை அத்தடையை எதிர்த்து மேன் முறையீடு செய்யுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவுறுத்தியுள்ளது.
-
அமைச்சர் தொண்டமானின் இராஜினாமா செய்தி தவறானது: ஆதாரமற்றது
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அமைச் சுப் பதவியிலிருந்து இரா ஜினாமா என்ற தலைப் பிலே வெளியான செய்தி குறித்து தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையின் பதில் பொது முகாமையாளர் ஏ.சீ.எச்.முனவீர விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட் டுள்ளதாவது,
-
மக்கள் வீண் அச்சமடைய தேவையில்லை; பொருளாதார தடைகளும் விதிக்க முடியாது
நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகள் மக்களின் நலனுக்கேற்பவே அமுல் எந்தவித வெளிநாட்டுத் தலையீட்டிற்கும் அரசாங்கம் தலைசாய்க்காது. எமது நாட்டு மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற என்ன தேவையோ அதனையே அரசாங்கம் முன்னெடுக்கும். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் எமது மக்களின் நலன்களுக்கேற்ற அடிப்படையில் அமுல்படுத்தப்படும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.
-
ஆறுமுகன் தொண்டமான் ராஜினாமா கடிதம் சமர்ப்பித்தார்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கான தனது ராஜினாமா கடிதத்தை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இன்றுமாலை சமர்ப்பித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள்தெரிவித்தன.