-
இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி
அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கையின் ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடையவதை தடுக்க கடந்தவாரம் இலங்கை முயற்சிகளை எடுத்த போதும், அது பாரிய வெற்றியை அளிக்கவில்லை. கடந்தமாதம் அமெரிக்க டொலர் ஒன்று 111 ரூபா என இருந்த இலங்கை ரூபாவின் பெறுமதி இந்தமாதம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
-
சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் விருது வழங்கி கெளரவிப்பு
ஊடகத்துறையில் சிறந்த சேவையாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் 11 பேர் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர். ஊடக அபிவிருத்திக்கான மத்திய நிலையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற போது சிரேஷ்ட ஊடகவியலாளர்களான ஒலிபரப்புத் துறைசார்ந்த சற்சொரூபவதிநாதன், புர்கான் பீ இப்திகார் ஆகியோர் உட்பட 11பேர் ஜனாதிபதியிடமிருந்து கெளரவம் பெற்றனர்.
-
பிரித்தாணிய சிறிலங்கா இஸ்லாமிய போரத்தின் 9வது மாநாடு
பிரித்தாணியாவில் உள்ள சிறிலங்கா இஸ்லாமிய போரம் (Srilanka Islamic Forum-SLIF) வருடா வருடம் நடாத்தும் இலங்கை முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கான 9வது மாநாடு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஜூன் மாதம் 23ம் 24ம் திகதிகளில் MARKFIELD, LEICESTER எனும் இடத்தில் நடைபெற உள்ளதாக இதன் ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
-
ஆசியாவில் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு 8ம் இடம்
ஆசிய தரப்படுத்தலின்படி கொழும்பு பல்கலைக்கழகம் 8வது இடத்தை பிடித்துள்ளதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க பாராளுமன்றில் இன்று (30) தெரிவித்தார். அதுபோல பேராதனை, ரஜரட்டை, களனி, ஜயவர்த்தனபுர மற்றும் நாவல ஆகிய பல்கலைக்கழகங்கள் கடந்த 2011 வருடத்துடன் ஒப்பிடும்போது 2012ம் வருடம் பாரிய முன்னேற்றத்தை கண்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
-
இலங்கைக்கு அமெரிக்கா விடுத்துள்ள கடுமையான சமிக்ஞை!
இலங்கையில் நிலையான சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு, கடுமையான சமிக்ஞை ஒன்றை சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் அமெரிக்கா அனுப்பியுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மீள்பார்வை இணையத்துக்கு அங்கீகாரம் !
இதுவரை 40 இணைய தளங்களுக்கு அனுமதி புதிதாக 13 இணைய தளங்களுக்கு இன்று ஊடக அமைச்சு அங்கீகாரம் வழங்கியதுடன் அவற்றின் ஆறு இணைய தளங்களுக்கான அனுமதிப் பத்திரங்களை அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத் துறை பதில் அமைச்சருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கையளித்தார்.
-
கல்லடி பாலத்தின் நிர்மானப்பணிகள் மாகா நிறுவனத்திடம் ஒப்படைப்பு!
மந்தகெதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் நிர்மானப்பணிகளை துரிதப் படுத்தும் வகையில் அதனை மாகா நிறுவனத்திடம் ஒப்படைக்க அமைச்சரவை தீர்மானித்தள்ளது நெடுஞ்சாலைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதற்கான ஆலோசனையை முன்வைத்திருந்தார்.
-
அயலவர்களை ஆதரியுங்கள் அல்லாஹ் உங்களை நேசிப்பான்
-சீனன்கோட்டை முர்சித் தாஹா (நளீமி) தனிமனிதர்களின் கூட்டுச் சேர்க்கையான சமூகக் கட்டமைப்பை மிகச் சரியாக வடிவமைப்பதில் இஸ்லாம் அதீத கவனக்குவிப்பை செய்கின்றது. அவ்வாறே சீரான சமூகக் கட்டமைப்பை பாதிக்கின்ற அனைத்து வழிகளையும் தடுப்பதுடன் வன்மையான அணுகுமுறையையே கையாள்கின்றது.
-
13 இணையங்களுக்கு அரசாங்கம் அனுமதி
மேலும் 13 இணையத்தளங்கள் தகவல் ஊடகத்துறை அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டன. இவற்றுக் கான அனுமதிப்பத்திரங்கள் பதில் தகவல் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பாவினால் தகவல் திணைக்களத்தில் வைத்து நேற்று கையளிக்கப்பட்டன.
-
1000 பாடசாலை திட்டத்தையும் உள்ளடக்கி ஆசிரிய இடமாற்றம்
புதிய இடமாற்ற முறைமைக்கு அமைச்சரவை அங்கீகாரம் ஆயிரம் பாடசாலை திட்டத்தையும் உள்ளடக்கியதாக ஆசிரிய இடமாற்றத்திற்கு புதிய முறைமையொன்றை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியது. கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன சமர்ப்பித்த பிரேரணைக்கமைய மாகாண சபைகளையும் தேசிய பாடசாலைகளையும் உள்ளடக்கியதாக இந்த இடமாற்ற முறைமை மேற்கொள்ளப்படும்.
-
எம்பிலிபிட்டியவில் இருந்து மட்டக்களப்புக்கு புதிய ரயில் பாதை
-adaderana மொனராகலை – அம்பாறை ஊடாக எம்பிலிபிட்டியவில் இருந்து மட்டக்களப்புக்கு புதிய ரயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம செயற்திட்டம் ஒன்றை அமைச்சரவைக்கு சமர்பித்த நிலையில் அதற்கு அனுமதி கிடைத்துள்ளது.
-
அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்படுவாரா?
அமைச்சர் மேர்வின் சில்வா குறித்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. கட்சி என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பதில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.