-
எந்த அழுத்தத்தையும் எதிர்கொள்ளத் தயார்: ஜனாதிபதி
ஜெனீவாவிலிருந்தோ, நியூயோர்க்கிலிருந்தோ, வாஷிங்டனிலிருந்தோ எந்த அழுத்தம் வந்தாலும் அதை கையாளும் ஆற்றலுடன் தனது அரசாங்கம் உள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கூறினார். கொழும்பில் நடைபெற்ற அரச ஊழியர்களின் கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். சர்வதேச ரீதியாக நாட்டின் மதிப்பை உயர்த்துவதற்காக அரச ஊழியர்களும் கூட்டுத்தாபனங்களின் தலைவர்களும் நல்ல நிர்வாகத்தை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.
-
டீசல், பெற்றோல் விலை 15 ரூபாவால் மீண்டும் உயரும்?
எரிபொருள் விலையை மீண்டும் ஒருமுறை அதிகரிக்க அனுமதி அளிக்குமாறு இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனம் (ஐஓசி) கனியவள அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது. டீசல் மற்றும் பெற்றோல் என்பவற்றை தலா 15 ரூபாவால் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனம் (ஐஓசி) நிர்வாகப் பணிப்பாளர் சுரேஸ் குமார் அத தெரணவிடம் தெரிவித்தார்.
-
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜப்பானில் பேச்சுவார்த்தை!
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ ஜப்பானுக்காக உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அரசியல் தலைவர்கள் சிரேஷ்ட தொழில்நுட்ப வல்லூனர்கள் மற்றும் அமைச்சர்களை சந்தித்து பேச்சுவார்தை நடத்தியுள்ளார்.
-
இலங்கையிலிருந்து நோர்வே செஞ்சிலுவைச் சங்கம் வெளியேறுகிறது
சுனாமியால் முற்றாக அழிந்த காத்தான்குடி மாவட்ட வைத்திசாலை நோர்வே செஞ்சிலுவை சங்கத்தின் 670 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இலங்கையின் பல பிரதேசங்களிலும் அனர்த்த காலங்களில் பல்வேறு தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த நோர்வே செஞ்சிலுவை சங்கம் கடந்த 31 ஆம் திகதியுடன் தமது பணிகளை முடித்துக்கொண்டு நாட்டிலிருந்து வெளியேறுகிறது.
-
வீழ்ந்து கிடக்கும் மனிதன் மீது அரசு மாட்டை விட்டு முட்டுகிறது – ஜேவிபி கண்டனம்
‘வாகன வரியை உயர்த்தி இந்தியாவிற்கு பாடம் புகட்டியுள்ளோம் எனக்கூறும் அரசாங்கம், கோதுமை மாவின் விலையை உயர்த்தி ஐரோப்பாவிற்கு பாடம் புகட்டியுள்ளோம் என்று கூறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை’. நாட்டில் பொருளாதார சிக்கல் இல்லை எனக்கூறும் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு புதுவருட பரிசாக அதிக வரிச்சுமையை வழங்கியுள்ளதென மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
-
10,000 வருகைகளைக் கடந்து செல்லும் ஓர் வெற்றிப் பயணத்தில் ‘உங்கள் காத்தான்குடி’
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி (04-02-2012) அன்று உத்தியோக பூர்வமாக வெளியாகி உலகை வலம் வந்து கொண்டிருக்கும் ‘உங்கள் காத்தான்குடி’ இணையத்தளம், நேற்று அதாவது (01-04-2012) அன்று 10,000 வருகைகளைக் கடந்து ஓர் வெற்றிப் பணயத்தில் சென்று கொண்டிருப்பதை எமது சகோதரர்களுக்கும் இத்தளத்தின் அபிமான வாசகர்கள் மற்றும் நண்பர்களுக்கும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். அல்ஹம்துலில்லாஹ்! உலகின் இணையத்தள வரலாற்றில் ஓர் திருப்புமுணையாக உதயம் பெற்ற ‘உங்கள் காத்தான்குடி’ இணையத்தளத்தின் மூலம் எமது நகரின் முக்கிய…
-
ஈரான் மீது கடுமையான பொருளாதார தடை : ஒபாமா வலியுறுத்து
ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வலியுறுத்தியு ள்ளார். பிற நாடுகளில் தேவையான எண்ணெய் வளம் உள்ளது. எனவே ஈரான் மீது தடை விதிப்பதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் குறிப்பிட்டார். மேலும், ஈரானிடமிருந்து அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியாவும், சீனாவும் தங்களது இறக்குமதி அளவைக் குறைத்துக் கொண்டுள்ளன.
-
வாகனங்கள் மீதான விலை அதிகரிப்பு: அத்தியாவசிய பொருட்களின் விலையில் தாக்கம் ஏற்படுத்தாது
தான்தோன்றித்தனமாக செயற்பட்டால் வர்த்தகர்கள் மீது நடவடிக்கை வாகனங்கள் மீதான வரி அதிகரிப்பு அத்தியாவசியப் பொருட்களின் விலையில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாதென உள்நாட்டு வர்த்தகம் மற்றும் கூட்டுறவுத் துறையமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நேற்று கூறினார்.
-
புள்ளிகளால் தீர்மானிக்கப்படுவதல்ல கல்வி
ஆண்டு இறுதி பரீட்சை வந்தாலே போதும் பாடசாலை மாணவர்கள் எல்லாம் பெரிய பதற்றத்துடனே உறங்குவார்கள். கண்களில் ஒரு கிலி எப்போதுமே எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும். பெற்றோரைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். ஏதோ ஒரு கொடிய நோய் வந்திருப்பது போல அவர்களுடைய பதட்டம் இருக்கும்.
-
மண்டேலாவிடமிருந்து இலங்கை அரசாங்கத்திற்கு ஓர் எச்சரிக்கை
ஜெனீவாவில் ஐ.நா.மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணை மூலம் இலங்கை அரசாங்கம் மனித உரிமை விடயத்தில் தமக்கு எதிரான சர்வதேச விசாரணையை தவிர்த்துக் கொண்டது என நாம் கடந்த வாரம் கூறினோம். அமெரிக்க பிரேரணை மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உள் நாட்டில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்விணக்க ஆணைக் குழுவின் சிபார்சுகளை அமுலாக்க வேண்டும் என்று வலியுறுத்துவதே அதற்கு காரணமாகும்.
-
ஜோர்தானில் இலங்கை பணியாளர்களின் சம்பள உயர்வு குறித்து பேச்சுவார்த்தை
ஜோர்தானில் தொழில் புரியும் இலங்கை பணியாளர்களின் சம்பள உயர்வு குறித்து இலங்கை ஜோர்தான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இவ்விடயம் தொடர்பில், ஜோர்தான் சென்றுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா ஜோர்தானின் தொழில்துறை அமைச்சர் மஹர் அல் வாகட்டை நேற்று (31) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
-
நான்கு குழந்தைகளுக்கு அப்பாவான ஒசாமா: – கூறுகிறார் இளைய மனைவி!
அமெரிக்காவின் புகழ்பெற்ற உலக வர்த்தக மையத் தாக்குதலுக்குப் பின்னர் ஒன்பது வருடங்களை ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானிலேயே செலவழித்து வந்துள்ளார். இந்தக் காலப்பகுதியில் அவர் ஐந்து வீடுகள் மாறியுள்ளார். நான்கு குழந்தைகளுக்கு அப்பாவாகியுள்ளார். அதில் இரண்டு குழந்தைகள் பாகிஸ்தானின் அரச மருத்துவமனையில் தான் பிறந்துள்ளன.