-
வெளிநாட்டு மாணவர்களுக்கான கடும் வீசா விதிமுறைகள் பிரிட்டனில் நேற்று முதல் அமுல்!
ஐரோப்பிய ஒன்றியத்தைத் தவிர்ந்த ஏனைய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பிரிட்டனில் கல்வி கற்பது தொடர்பான கடுமையான வீசா விதிமுறைகள் நேற்று வெள்ளிக்கிழமை முதல் பிரித்தானியாவில் அமுலுக்கு வந்துள்ளன.
-
மருந்துக்கு கட்டுப்படாத மலேரியா: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை
மலேரியா நோய்க் கிருமிகள் மருந்துக்கு அழியாமல் போகும் எதிர்ப்பு சக்தியைப் பெற்று வருகிறது என்றும், இதனால் அந்த நோய் குணப்படுத்த முடியாத ஒரு நோயாக உருவெடுத்துவிடலாம் என ஆராய்ச்சியாளர்கள் அஞ்சுகின்றனர். இந்த வகையான நோய்க்கிருமிகள் முதலில் தென்பட்டிருந்த இடத்துக்கு 800 கிலோமீட்டர்கள் அப்பால் பர்மா தாய்லாந்து எல்லைப் பகுதியில் தற்போது காணப்படுவதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
இந்தியாவை பழிதீர்க்கும் இலங்கை அரசு! எண்ணெய் நிறுவன (IOC) ஒப்பந்தத்தை ரத்துச் செய்ய திட்டம்!
இவ்வாறு வரி அதிகரிக்கப்பட்டதன்மூலம், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ”மாருதி” வாகனம், ”டாட்டா நெனோ” மோட்டார் வாகனம் ஆகியவற்றின் விலை 5 லட்சம் முதல் 8 லட்சம் ரூபா வரை அதிகரித்துள்ளது. இதில் விசேட அம்சம் என்னவெனில், ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எந்தவொரு வாகனத்திற்கும் வரி அதிகரிக்கப்படவில்லை. -ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் அமெரிக்க பிரேரணைக்கு இந்தியா ஆதரவளித்ததால் இந்தியாவை பழிதீர்க்கும் செயற்பாடுகளை மகிந்த அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
வணக்கஸ்தலங்களுக்கு சி.எப்.எல். மின்குமிழ்கள்
மின்சார சிக்கன திட்டம்: (CFL: Compact Fluorescent Lamps – கச்சிதமான ஒளிரும் விளக்குகள்) மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்தும் திட்டத்தின் கீழ் வணக்கஸ்தலங்களுக்கு சி.எப். எல். மின்குமிழ்களை வழங்குவதற்கு மின்சக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இதன் முதற்கட்டமாக நேற்று 6ஆம் திகதி கங்காராம விகாரைக்கு சி.எப்.எல். மின்குமிழ்களை அமைச்சர் வழங்கினார். கடந்த காலங்களில் மின்வெட்டுக்கள் அமுல்படுத்தப்பட்ட யுகம் இருந்தது.
-
சிறையில் இருப்பது மிகவும் கொடுமையானது – ஆமீர்
மற்ற எதையும் விட சிறையில் இருப்பது மிகவும் கொடுமையானது. என்னைப் போல இனி யாரும் தவறு செய்ய வேண்டாம் என பாகிஸ்தான் பந்துவீச்சாளர் முகமது ஆமீர், வீரர்களுக்கு அறிவுரை செய்துள்ளார்.
-
மட்டக்களப்பில் இன்று உடைக்கப்பட்ட சிலைகளின் படங்கள்
-Tamilmirror
-
நோயாளி நலம் விசாரித்தல் (இறைநினைவுகள்)
– மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ : நோயாளிக்காக ஓத வேண்டிய துஆக்கள் : ஒரு முஸ்லிம் நோயுற்றால், அவரை நோய் விசாரிப்பது மற்ற முஸ்லிமின் கடமையாகும். இயல்பிலேயே நோயுற்றவரின் மனதில் கவலையும் சஞ்சலமும் குடிகொண்டுவிடுகின்றது. அதுவும் கொஞ்சம் பெரிய நோயாக இருந்தால் சொல்லத் தேவையில்லை. படபடப்பும் பயமும் அதிகரித்து விடும். வீட்டில் உள்ளவர்களின் நிலையோ அதைவிட மோசமாக இருக்கும், குறிப்பாக நோயுற்றவர் வீட்டுப் பொறுப்பாளியாக இருந்தால், அதுவும் நம் போன்று வெளிநாடுகளில் வாழ்பவர்களாக இருந்தால். கவலை மிகவும்…
-
காத்தான்குடி கோட்ட விளையாட்டு போட்டியில் மத்திய கல்லூரி முதலாமிடம்
காத்தான்குடி கல்வி கோட்ட பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டியில் காத்தான்குடி மத்திய கல்லூரி 665 புள்ளிகளை பெற்று முதலாவது இடத்தினை பெற்றுக்கொண்டது.
-
மட்டக்களப்பில் சிலைகள் உடைக்கப்பட்டமைக்கு கண்டனம்
ஜெனிவா மாநாட்டு தீர்மானம் நடந்து கொண்டிருக்கின்ற இந்த தருனத்தில் மட்டக்களப்பில் மகாத்மா காந்தியின் உருவச் சிலை உட்பட நான்கு உருவச் சிலைகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் தருகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
-
உம்மு ஸுலைம்(ரலி) அவர்கள்
இஸ்லாமிய வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற பெண்மனிகளில் உம்மு சுலைம்(ரலி) அவர்களும் ஒருவராவார். இவர்கள் ஈமானிய உணர்வும், திடஉறுதியும், அறிவும், ஆற்றலும், வீரமும், ஒப்பற்ற ஒழுக்க மாண்புகளும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற அன்னையவர்கள். ஒரு தாயாகவும் தாயியாகவும் மட்டுமின்றி இஸ்லாத்திற்க்காகப் போராடும் வீராங்கனையாகவும் திகழ்ந்தார்கள். ஸஹீஹ் முஸ்லிமில் வரக்கூடிய ஹதிஸில் – உஹது யுத்தத்தில் பங்குகொண்ட 14 பெண்களில் இவர்களும் ஒருவர், போராளிகளுக்கு உணவு தயாரித்தல், நீர் விநியோகித்தல், காயங்களுக்கு மருந்து கட்டுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டதாக இவர்களது…
-
ஐவருக்கு ஒன்று என்ற அடிப்படையில் வாகனங்களின் பாவனை நாட்டில் அதிகரிப்பு
வாகனங்கள் நாட்டிற்கு சுமையாக அமைவதை தவிர்க்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு 2009 ம் ஆண்டு 3421 ஆக இருந்த காரின் இறக்குமதி தொகை 2011ம் ஆண்டில் 54285 ஆகவும், 170 ஆக இருந்த வேன் மற்றும் கெப் ரக வாகனங்களின் இறக்குமதி 12838 ஆகவும், 34563 ஆக இரந்த முச்சக்கர வண்டியின் இறக்குமதி எண்ணிக்கை 137816 ஆகவும், 139000 ஆக இருந்த மோட்டார் சைக்கிளின் இறக்குமதி எண்ணிக்கை 252318 ஆகவும், 34525 ஆக இருந்த பஸ் மற்றும்…
-
நாடு திரும்பும் தமிழர்கள் துன்புறுத்தப்படுவதாக பொய்யான பிரசாரம்
உண்மை நிலையை தெளிவுபடுத்துவேன் என்கிறார் பிரித்தானிய சர்வகட்சி குழுவின் தலைவர் நெஸ்பி பிரபு பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு நாடு திரும்பும் புலம்பெயர் தமிழர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் அவர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் பிரிட்டனில் தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த பொய்யான குற்றச்சாட்டுகள் குறித்து பிரித்தானியாவில் கேள்வியெழுப்பவிருப்பதாக பிரித்தானிய பாராளுமன்றத்தின் சர்வகட்சிப் பாராளுமன்ற இலங்கை நட்புறவுக் குழுவின் தலைவர் நெஸ்பி பிரவு தெரிவித்துள்ளார்.