-
2006 முதல் 2012 மார்ச் வரையில் 2,16,390 வாகன விபத்துக்கள்
2012 ஆம் ஆண்டு ஆரம்பமாகி மூன்று மாதங்கள் முழுமையாக கடந்த நிலையில் வீதி விபத்துகளினால் 600 பேர் இதுவரை மரணமாகியுள்ளனர். 1290 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். 590 வாகன விபத்துகள் நடைபெற்றுள்ளன. வீதி விபத்துகள் அதிகரித்து வருவது ஆரோக்கியமானதல்ல.
-
அஜ்மீர் தர்காவில் சர்தாரி பிரார்த்தனை
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் தர்காவில் பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி பிரார்த்தனை செய்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ் மீர் நகரில் புகழ்பெற்ற குவாஜா மொய்னு தீன் சிஸ்டி தர்கா உள்ளது. அங்கு பிரார்த் தனை செய்வதற்காக பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி நேற்று முன்தினம் இந்தியா வந்தார். தனி விமானத்தில் டில்லி வந்த அவர் அங்கு பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார்.
-
காந்தியின் உருவச்சிலை புனரமைக்கப்பட்டது
மட்டக்களப்பில் கடந்த வெள்ளிக்கிழமையன்று உடைத்து சேதப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தியின் உருவச் சிலை மீளவும் புனரமைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நகரில் நிர்மாணிக்கப்பட்டிருந்த இந்திய நாட்டின் தேசபிதா அஹிம்சா மூர்த்தி அண்ணல் மஹாத்மா காந்தி மற்றும் சாரணிய இயக்கத்தின் தந்தை பேடர்ன் பவல் ஆகியோரின் சிலைகளின் தலைகள் சில நாட்களின் முன் உடைத்து சேதமாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-
ஜனாஸா அறிவித்தல்
சகோதரர் ஆதம்லெவ்வை அப்துல் ஹமீட் (60) அவர்கள் இன்று அதிகாலை 5 மணியளவில் லண்டனில் காலமானார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
-
பலஸ்தீன ஜனாதிபதி 15ம் திகதி இலங்கை வருகிறார்
-adaderana பலஸ்தீன ஜனாதிபதி முஹம்மர் அப்பாஸ் எதிர்வரும் 15ம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரும் பலஸ்தீன ஜனாதிபதி, இலங்கை ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.
-
மேற்குலகின் எச்சரிக்கைக்கு சவால்!
மேற்குலகின் அழுத்தமான எச்சரிக்கைகளையும் கடந்து தனது சொந்தத் தயாரிப்பான Unha-3 எனும் ஏவுகணையை இம்மாதம் 12-16 ஆம் திகதிகளுக்குள் விண்ணில் ஏவ இருப்பதாக வட கொரியா உத்தியோகபூர்வமாக நேற்று அறிவித்திருக்கின்றமையானது, மேற்குலக நாடுகளுக்கு ஒரு சவாலை ஏற்படுத்தி இருக்கின்றது. ‘இவ் ஏவுகணை பரிசோதனையானது ‘எமது நாட்டின் விஞ்ஞான வளர்ச்சியையும் எம் மக்களின் சாதனையையும் வெளிக்கொனரும் ஓர் செய்பாடாக இருக்கும் ‘ என்பதாக இவ் அமைப்பின் பொது முகாமையாளர் Jang Myong Jin தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் பல…
-
அதிகரிக்கும் விபத்துகள்: வெகுவாக கட்டுப்படுத்த கடும் ஒழுங்கு விதிகள்
* பொருத்தமில்லாத வாகனங்களை அப்புறப்படுத்தல் * குற்றச் செயல்களுக்கு தண்டனைப்புள்ளி * தரக்கட்டுப்பாட்டுச் சோதனை * பாதசாரிகளுக்கு விழிப்புணர்வுத் திட்டம் நாட்டில் இடம்பெற்று வரும் வீதி விபத்துக்களைக் குறைக்கும் பொருட்டு புதிய ஒழுங்கு விதிமுறைகளை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் நடைமுறைப்படுத்தவுள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் பூரண ஒத்துழைப்புடன் புதிய ஒழுங்கு விதிமுறைகளை வெகுவிரைவில் அமுல்படுத்தவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எஸ். எச். ஹரிஸ்சந்திர தெரிவித்தார்.
-
“Dream Spark” மென்பொருளை பாடசாலை மாணவர்களுக்கு வழங்க கல்வி அமைச்சுடன் மைக்ரோசொப்ட் கைகோர்த்துள்ளது
‘Dream Spark மூலம் Developer, Designer, மற்றும் Gaming ஆகிய பல்வேறு மென்பொருள்கள் இலங்கை மாணவர்களுக்கு வழங்க மைக்ரோசொப்ட் நடவடிக்கை எடுத்துள்ளது. கல்வி அமைச்சின் கீழுள்ள அனைத்து பாடசாலைகளிலும் கல்வி கற்கும், தமது கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்திக் கொள்ள தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் Dream Spark செயற்றிட்டம் முக்கியமானதாகும்’. –கல்வி அமைச்சின் “1000 School of the future” இரண்டாம் நிலை பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் மூலம் நாடு தழுவிய பாடசாலைகளுக்கு புதிய…
-
ஜெனிவா பிரேரணை; முஸ்லிம் நாடுகளுக்கு நன்றி தெரிவிக்க ஹிஸ்புல்லா சவூதி செல்கிறார்
ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனதி உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் நாடுகளுக்கு நன்றி தெரிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
-
சொத்து விபரங்களை 30ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்குமாறு உத்தரவு
பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதிக்கு முன்பு சொத்துக்கள் மற்றும் கடன்கள் பற்றிய தகவல்களை அறியத்தர வேண்டும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
-
சிலைகளைக் கண்ணியப்படுத்துதல், மாலைகள் போடுதல் தொடர்பாக…
( அஷ்செய்ஹ்: CMM. அமானி ) காத்தான்குடி ஜம்மிய்யத்துல் உலமா சம்மேளனத்துக்கும் இவ்விடயத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதம்: 07.04.2012 தலைவர் /செயலாளர், பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம், காத்தான்குடி. அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹூ சிலைகளைக் கண்ணியப்படுத்துதல், மாலைகள் போடுதல் தொடர்பாக…