-
பண்டைய காலந் தொட்டு முஸ்லிம்கள் தாய்நாட்டு விசுவாசிகளாக வாழ்ந்ததே வரலாறு
காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகள் இனி இல்லை -நுவரெலியாவில் ஜனாதிபதி: நாடுகள் இனங்களைப் பிரித்து நாடுகளுக்கும் மக்களுக்கும் இடையில் பேதங்களை ஏற்படுத்த உலக நாடுகள் பல முயற்சிக்கின்றபோதும், சகல இன மக்களும் ஐக்கியமாக வாழும் இலங்கையை எம்மால் கட்டியெழுப்ப முடிந்துள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். காத்தான்குடியில் இடம்பெற்ற துயரமான சம்பவம் போன்று இனியும் இந்த நாட்டில் இடம்பெறாது என குறிப்பிட்ட ஜனாதிபதி, இலங்கையில் முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களுடன் இணைந்து ஒற்றுமையாக வாழவே விரும்புகின்றனர் எனவும்…
-
வடகொரியா ரொக்கெட் ஏவ எரிபொருள் ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்
உடன் நிறுத்த அமெரிக்கா எச்சரிக்கை ‘மறுபுறத்தில் வட கொரிய ரொக்கெட் தமது வான்பரப்புக்குள் வந்தால் அதனை தாக்குவதற்கு ஏதுவாக தமது ஏவுகணை செயற்பாட்டை இயக்கியுள்ளதாக ஜப்பான் அறிவித்துள்ளது. தென் கொரியாவும் தனது வான்பரப்புக்குள் ரொக்கெட் சென்றால் தாக்குவதாக எச்சரித்துள்ளது’. வட கொரியா ஏவவுள்ள ரொக்கெட்டுக்கு எரிபொருள் ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் சர்ச்சைக்குரிய இந்த ரொக்கெட் விண்ணுக்கு ஏவப்பட வுள்ளது.
-
சுனாமி பதட்டம் ஓய்வு!
கிழக்காசிய நாடுகளில் இன்று ஏற்பட்ட சுனாமி பீதிகள் நிறைவடைந்திருக்கின்றன. உலக சுனாமி எச்சரிக்கை நிலையம் சற்று முன்னர் இதனைத் தெரிவித்தது. உலகில் இன்று ஏற்பட்ட சுனாமி அச்சத்தாலும் பதட்டங்களாலும் மக்கள் பதறியடித்துத் திரிந்தனர்.
-
இந்து சமுத்திரத்தில் பாரிய நிலநடுக்கம்
இலங்கையின் கடலோரங்களில் வசிப்போருக்கும் எச்சரிக்கை: காத்தன்குடியிலும் இவ் அதிர்வு உணரப்பட்டதாக பலர் தெரிவிப்பு: -MJ இந்து சமுத்திரத்தில் இன்று 8.7 பரிமாண அளவு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கின்றது. இந்தோனேசிய கடலின் 33 கி.மீ. ஆழத்தில் இவ் அதிர்வு ஏற்பட்டிருக்கின்றது. பண்டா ஆசெய்ஹ் எனும் இந்தோனேசிய நகரத்திற்கு 445 கி.மீ. தொலைவில் இவ் அதிர்வு ஏற்பட்டிருப்பதாக இந்தோனேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. மலேசியா, சிங்கப்பூர், இந்தியா ஆகிய நாடுகளில் இவ் அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் கரையோரங்களில் வாழ்பவர்கள் எச்சரிக்கையாக…
-
‘திவி நெகும’ வீட்டுப் பயிர்ச் செய்கை மூன்றாம் கட்ட ஆரம்ப நிகழ்வு
எம்.எல்.எம். அன்ஸார் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் ‘திவி நெகும’ வீட்டுப் பயிர்ச் செய்கை செயற்றிட்டத்தின் மூன்றாவது கட்டத்தை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று (10) எல்பிட்டிய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வல்அம்பகல பிரதேசத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மீள்குடியேற்ற அமைச்சர் எம்.எச்.குணரத்ன வீரகோன் மரக்கன்று ஒன்றை நட்டு வேலைத் திட்டத்தை ஆரம்பித்து வைப்பதை படத்தில் காணலாம்.
-
மூழ்காது என்று உத்தரவாதம் பெற்ற டைட்டானிக் கப்பல் முதற் பயணத்தில் மூழ்கியது
விமானப் பயணங்கள் இல்லாத இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பெருந் தொகை பயணிகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் பிரபலமாக இருந்தன. ஜக்கிய இராச்சியமும் அமெரிக்காவும் அந்தக் காலத்தில் கப்பல் கட்டும் தொழில் நுட்பத்தில் அதியுயர் மேம்பாடு அடைந்திருந்தன.
-
சமுர்த்தி கொடுப்பனவு 33 வீதத்தால் அதிகரிப்பு
ஏப்ரல் 1ம் திகதி முதல் அமுல் * வடக்கு, கிழக்கில் 43,000 குடும்பங்கள் புதிதாக சேர்ப்பு * முத்திரை முறை நிறுத்தம்; பணம் வங்கியில் வைப்பு சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கான நிவாரண கொடுப்பனவு 33 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டிருப்பதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.
-
பிக்கு உடையில் கஞ்சா விற்ற இருவர் கைது
எம்பிலிப்பிட்டி தனமள்வில பகுதியில் இருந்து கஞ்சா பொதி களை ஏற்றிக் கொண்டு மட்டக் களப்பு நோக்கி வந்த வாகனம் ஒன்றினை வாழைச்சேனை பொலி ஸார் நேற்று (09) இரவு கைப் பற்றியுள்ளனர். இவ்வாறு கைப்பற்றிய வாகன த்தில் இருந்து நாலு (04) கிலோ கிராம் கஞ்சாவினை மீட்டதுடன், பெளத்த பிக்குகள் அணியும் சீருடைகள் சிலவற்றையும் கஞ்சா கடத்தலுடன் தொடர்புடைய சந்தேசக நபர்கள் இருவரையும் வாழைச்சேனை பொலிஸார் கைது செய்தனர்.
-
திமுது ஆட்டிகல எவ்வாறு கடத்தப்பட்டார்? அவரே விவரிக்கிறார்
முன்னிலை சோஷலிசக் கட்சி இன்று (10) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில், கடத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்ட கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் திமுது ஆட்டிகல தான் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து தகவல் வெளியிட்டார். “6ம் திகதி மாலை கட்சியின் செயற்பாடு ஒன்றை தோழருடன் முடித்துவிட்டு பொல்வத்தை பகுதியில் இறங்கி பஸ்ஸில் வீடு செல்ல தயாரானேன். கொடகமயில் உள்ள வீட்டுக்கு செல்லும் வழியில் வெள்ளை வானில் வந்தோர் கண் வாயை கட்டி வானுக்குள் போட்டனர்.
-
சம்மேளனத்தின் நற்பணிகளும் இன்றியமையாத் தேவைகளும்!
– வாசகர் மடல் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் கூட்டு ஸகாத் நிதியத்தினால் ஸகாத் உதவி வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை அந்நாசர் வித்தியாலயத்தில் நடைபெற்றது. இதன்போது தொழிலுக்காக 70 பேருக்கும், கடன் நிவாரண உதவியாக 70 பேருக்கும், வாழ்வாதார உதவியாக 50 பேருக்கும் ஸக்காத் உதவிகள் வழங்கப்பட்டிருந்தன. அல்ஹம்துலில்லாஹ்!
-
ஸக்காத் உதவி வழங்கும் நிகழ்வு
-Tamilmirror காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் கூட்டு ஸக்காத் நிதியத்தினால் ஸக்காத் உதவி வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை காத்தான்குடி அந் நாசர் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
-
பாலத்திலிருந்து தவறி வீழ்ந்து இரு இளைஞர்கள் படுகாயம்
மட்டக்களப்பு, பனிச்சங்கேணி பாலத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பயணம் செய்த இளைஞர்கள் இருவர் பாலத்திலிருந்து வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காத்தான்குடி பதுறிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் வீதியில் வசிக்கும் இவ்விரு இளைஞர்களும் மோட்டார் சைக்கிளில் வாகரையூடாக திருகோணமலைக்கு சென்றுகொண்டிருந்தபோதே பாலத்திலிருந்து வீழ்ந்துள்ளனர்.