-
சுஷ்மா சுவராஜ் தலைமையில் இந்திய எம்.பி.க்கள் குழு இலங்கைக்கு வருகை
-MJ பல வாரங்களாக இழுபட்ட நிலையிலும் உட்கட்சிகளின் தலையீடுகளிலும் தாமதித்த இந்திய எம். பிக்கள் குழுவினர் இலங்கை புறப்பட்டுள்ளதாக. டெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன ‘இந்த குழு இலங்கை செல்வது கண்துடைப்பு நாடகம்’ என்று குற்றம் சாட்டிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, அதிமுக சார்பில் அந்த குழுவில் இடம் பெற்றிருந்த ரபி பெர்னாட் விலகுவதாக அறிவித்தார். திமுகவும் குழுவில் இருந்து விலகுவதாக திமுக தலை வர் கருணாநிதி அறிவித்தார்.
-
இலங்கை – பலஸ்தீன் தலைவர்களின் சந்திப்பு
-MJ இலங்கை வந்துள்ள பலஸ்தீன் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் அவர்கள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ அவர்களை 16-04-2012 காலையில் சந்தித்தார். செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டு இச்சந்திப்பு இடம் பெற்றது. கடற்படை அணிவகுப்புக்களும் இடம் பெற்றன. ஜனாதிபதி செயலகத்தில் உள்ள விருந்தினர்களுக்கான விசேட பதிவில் தனது கையெழுத்தையும் மஹ்மூத் அப்பாஸ் அவர்கள் பதிவு செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
-
ஐ.சி.சி.நிறைவேற்றுக் குழுக் கூட்டம் ஆரம்பம்: சுயாதீன கிரிக்கெட் சபை தொடர்பில் முக்கிய தீர்மானம்
‘அணி ஒன்றுக்கு ஆண்டொன்றுக்கு வழங்கப்படும் சர்வதேச இருபது-20 போட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கோரியிருந்தது. அதில் தற்போது அணி ஒன்றுக்கு ஆண்டொன்றுக்கு வழங்கப்படும் 12 இருபது-20 சர்வதேச போட்டிகள் 15ஆக அதிகரிக்க வேண்டும்’ என பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. -சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலின் (ஐ. சி. சி.) நிறைவேற்றுக்குழுக் கூட்டம் நேற்று டுபாயில் ஆரம்பமானது. இதில் சுயாதீன கிரிக்கெட் சபை மற்றும் எதிர்கால போட்டி அட்டவணை என முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வுள்ளன.
-
பாகிஸ்தானில் சர்வதேசப் போட்டிகள்!
இம்மாத இறுதியில் குறுகிய கிரிக்கெட் சுற்றுப்பயணமொன்றை பாகிஸ்தானுக்கு மேற்கொள்ள பங்களாதேஷ் அணி சம்மதித்துள்ளது. ஓர் ஒருநாள் சர்வதேசப் போட்டி மற்றும் ஒரு டுவென்டி டுவென்டி போட்டியில் பங்குபற்றவே பங்களாதேஷ் அணி சம்மதித்துள்ளது.
-
காலியில் தமிழ் குடும்பங்கள் மீது தாக்குதல்! 7 வீடுகள் எரிந்து நாசம்
காலி – எல்பிட்டி – திலிதுற தோட்டத்தில் வசிக்கும் தமிழ் குடும்பங்கள் மீது பெரும்பான்மை சிங்கள யுவதிகள் சிலர் தாக்குதல் நடத்தி அவர்களது வீடுகளுக்கு தீயிட்டுள்ளதோடு பெறுமதியான பொருட்களையும் திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அத தெரண தமிழிணையம் பெற்றுக் கொண்ட நம்பகரமான, உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள்படி நடந்தவை வருமாறு,
-
பானு சிறை தாக்கப்பட்டதால் கைதிகள் தப்பியோட்டம்
-MJ பாகிஸ்தான் வட மேற்குப் பகுதில் உள்ள பானு சிறைச்சாலை இன்று அதிகாலை இஸ்லாமிய போராட்டக் குழு ஒன்றினால் தாக்கப்பட்டதால் சிறைவைக்கப்பட்டிருந்த சுமார் 400 இற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். இத்தாக்குதலுக்குப் பின்னணி யார் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், தலிபான் இயக்கமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
-
தொழிநுட்பத்தில் ஒழுங்கு வேண்டும்: அலீம் தார்
‘லாகூர் கடாபி மைதானத்தில் நடுவர்களுக்கான அறை தனது பெயரில் அழைக்கப்படுவதன் காரணமாக அம்மைதானத்தில் நடுவர் பணியில் ஈடுவது தனக்குப் பிடித்தமானது எனத் தெரிவித்த அலீம் தார், அதைத் தவிர லோர்ட்ஸ் மைதானத்தில் வரலாறு மற்றும் பெருமை காரணமாக லோர்ட்ஸ் மைதானத்தில் நடுவர் பணியில் ஈடுபடுவதும் தனக்கு மிகப் பிடித்தமானது’ நடுவர் மீள்பரிசீலனைத் திட்டம் நடுவர்களுக்கு மிசச்சிறப்பானது எனவும், அதைத் தான் முழுமையாக ஆதரிப்பதாக சர்வதேச நடுவரும், உலகின் முதற்தர நடுவராகத் தொடர்ச்சியாகத் தெரிவுசெய்யப்படுபவருமான அலீம் தார் தெரிவித்துள்ளார்.
-
திண்மக்கழிவகற்றல் தொடர்பாக காத்தான்குடி ஜம்மிய்யத்துல் உலமா சம்மேளனத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடிதம்.
-அஷ்செய்ஹ் C.M.M. அமானி– 14.04.2012 தலைவர் / செயலாளர், பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம், காத்தான்குடி. அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹூ திண்மக்கழிவகற்றல் – வேலைத்திட்டம் தொடர்பாக…
-
பாகிஸ்தான் மாணவர் விசாக்களில் 40 வீதம் போலியானது!
-MJ ‘இதேபோல் பங்களாதேஷ் 38 %, இலங்கை 27 %இந்தியா 29 %, எகிப்து 28% என்ற நிலையில் போலி மாணவர் விசா தரப்பட்டியலில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.’ ஐக்கிய இராச்சியத்துக்குள் படிப்பதற்காக மாணவர் விசா மூலமாக பாகிஸ்தானில் இருந்து விண்ணப்பித்து வருபவர்களில் 40 வீதமானோர் போலி மாணவர்களாகவே ஐக்கிய இராச்சியத்துக்குள் வருவதாக ஐக்கிய இராச்சிய உள்துறை செயலர் ‘தெரேசா மே’ கடுமையாக சாடியுள்ளார்.
-
இலக்குத் தவறிய வடகொரியாவின் ஏவுகணை
-MJ பல உலக நாடுகளின் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் பலத்த எதிர்பார்ப்புடன் இன்று ஏவப்பட்ட வடகொரியாவின் ஏவுகணை இலக்கு தவறி இருப்பதாக வடகொரிய விண்வெளி ஆய்வு மையம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
-
வாழ்வாதாரத்திற்கு உதவி கோரும் யாழ். பொம்மை வெளி முஸ்லீம் மக்கள்
யாழ். பொம்மை வெளிப்பிரதேசத்தில் மீள்குடியமர்ந்த முஸ்லீம் மக்கள் எந்தவித வாழ்வாதார உதவிகளும் இன்றி பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இவர்களின் தேவை எல்லாம் நிரந்தரமாக வாழ்வதற்குரிய இருப்பிடங்களே. மிகவும் ஏழ்மையான வாழ்க்கையை வாழ்ந்து வரும் இம்மக்களின் அடிப்படைத் தேவைகள் கூட நிறைவேற்ற முடியாமல் அரச அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இருப்பதாக அவர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
-
நபி(ஸல்) அவர்களின் நற்குணங்கள்
(சுவனப்பாதை நடத்திய மாபெரும் எழுத்துலகப் புரட்சிப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கட்டுரை – திருத்தியது, ஹாஜா முஹ்யுத்தீன் – சகோ. ஷாகுல் ஹமீது – சவூதி ஓஜர், ஜித்தா ) அகிலத்திற்க்கோர் அருட்கொடையாம் அண்ணலம் பெருமானார்(ஸல்) அவர்கள் நானிலம் போற்றும் நற்குணவாதியாகத் திகழ்ந்தார்கள் என்பதை முஸ்லிம், முஸ்லிமல்லாதார் என்ற பாகுபாடுயின்றி உலக மாந்தர்கள் அனைவரும் அறிவர். இதை மாற்று கருத்துடைய பல்வேறுபட்ட அறிஞர்களின் கூற்றும், The Hundred போன்ற புகழ் பெற்ற நூற்களும்கூட மெய்பித்துக் கொண்டிருக்கின்றன.