-
கிழக்கு முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ஏ. ஆர். எம். மன்சூர்?
கிழக்கிலிருந்தே வருகிறார் கிழக்கின் முதல்வர் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் பட்சத்தில் இம்முறை அத்தேர்தலில் முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல்வாதியும், இராஜதந்திரியுமான அல்ஹாஜ் ஏ.ஆர்.எம். மன்சூரை பொதுவான முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த சில கட்சிகள் கூடி ஆராய்ந்து வருவதாக நம்பகரமான வட்டாரத்திலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
-
மின்னல் தாக்கத்தினால் வாழைச்சேனையில் வீடு எரிந்து நாசம்
வாழைச்சேனை வினாயகபுரம் கிராமத்தில் இடி மின்னல் தாக்கிய சம்பவத்தில் வீடொன்று எரிந்து சேதமாகியுள்ளது. இச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு 8.30 மணியளவில் நடைபெற்றுள்ளது. வீட்டில் கணவன் மனைவி உட்பட ஐந்து பேர் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் இந்த வீட்டை மின்னல் தாக்கியுள்ளது. இதில் குறித்த ஐவரும் மயிரிழையில் உயிர் தப்பியுள்ள போதிலும் வீட்டில் இருந்த மின் பாவனைப் பொருட்கள் உட்பட உடு துணிகளும் எரிந்து சாம்பலாகியுள்ளன.
-
இலங்கை – இஸ்ரேல் இடையிலான முதலாவது கலந்துரையாடல்
இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கும் இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சுக்கும் டையிலான முதலாவது இருதரப்பு கலந்துரையாடல் இலங்கை வெளிவிவகார அமைச்சில் நேற்று நடைபெற்றதாக அவ்வமைச்சு தெரிவித்தது. இலங்கையின் தூதுக்குழுவுக்கு வெளிவிவகார செயலாளர் கருணாரட்ண அமுனுகமவும் இஸ்ரேலிய தூதுக்குழுவுக்கு இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சின் ஆசிய – பசுபிக் திணைக்களத்தின் தலைவரான ருத் கஹானொவும் தலைமை தாங்கினர்.
-
தம்புள்ளை பள்ளிவாயல் உடைப்பும் திறப்பும்: இலங்கைக்கு உலகின் கண்டணங்களும் அழுத்தங்களும்!
80 வருடகால வரலாறு கொண்டிருக்கும் தம்புள்ளை மஸ்ஜிதுல் ஹைறாத் ஜூம்ஆ பள்ளிவாயல் சில அமைச்சர்களுடனும் தம்புள்ளை மற்றும் மாத்தளை அரசியல் பிரமுகர்களுடனும் ஏற்பாட்டில் கொழும்பு அழுத்தங்களுக்குப் பின்னர் தற்பொழுது மீண்டும் திறக்கப்பட்டிருப்பதாகவும் தொழுகைகள் இடம்பெறுவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் இருந்த வீதி மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டது
மட்டக்களப்பு விமானப்படையின் உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் இருந்த ஆலையடிச்சோலை பொதுமயானத்துக்கு அருகில் செல்லும் வீதி விமானப் படையினரால் திறக்கப்பட்டு மக்கள் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் புத்தூர் விமானப்படைத்தள விரிவாக்கத்தின் போது ஆலையடிச்சோலை பொதுமயானம் உட்பட சில குடியிருப்புக்களும் உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்வாங்கப்பட்டன.
-
சிங்களப் பேரினவாதமும் சிறுபாண்மை முஸ்லிம்களும்
சிங்களப் பேரினவாதத்தின் மற்றுமொரு நிகழ்வுதான் நேற்று (20-04-2012) வெள்ளிக்கிழமை தம்புள்ளையில் இடம்பெற்ற பள்ளிவாயல் உடைப்பும் ஆர்ப்பாட்டமுமாகும். அரசாங்கத்திலும் எதிர்க்கட்சியிலும் உள்ள முஸ்லிம் தலைவர்கள் வாய்மூடிய பொம்மைகளாகவே சம்பவம் நடைபெற்றதிலிருந்து தற்பொழுது வரை கதிரைக்காக குரல்வளை பிடுங்கப்பட்டவர்களாக இருக்கின்றனர்.
-
தம்புள்ளை பள்ளிவாயல் பௌத்த ஆக்கிரமிப்பாளர்களின் கட்டுப்பாட்டில்! முஸ்லிம் தலைவர்கள் மௌனம்?
-MJ தம்புள்ளையில் இடம்பெற்று வந்த பள்ளிவாயலுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் அரச படைகளையும் மீறி, 500 பேர்களால் இப்பள்ளிவாயல் உடைக்கப்பட்டு தற்பொழுது பௌத்த ஆக்கிரமிப்பாளர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக சிங்கள ஊடகங்களும் தமிழ் ஊடகங்களும் ஊர்ஜிதப்படுத்தி இருக்கின்றன. இது வரைக்கும் எந்த ஒரு முஸ்லிம் அமைச்சரும் எந்த கண்டணங்களையும் வெளியிடாமல் இருப்பது இவர்கள் முதுகெழும்பற்றவர்கள் என்பதையும் பச்சோந்திகள் என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது. மனவேதனை அளிக்கின்றது.
-
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கட் தொடர்
-MJ இந்தியா-பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான கிரிக்கட் தொடர்களை மீண்டும் நடாத்தும் படி பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் ஷாகா அஷ்ரப் இந்தக் கோரிக்கையை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர் என். ஸ்ரீனிவாசனிடம் விடுத்துள்ளார். சென்றவாரம் டுபாயில் நடைபெற்ற கிரிக்கட் சம்மேள கூட்டத்தில் இக்கோரிக்கையை ஷாகா அஷ்ரப் விடுத்திருந்தார்.
-
80 வருட வரலாற்று பள்ளிவாயல்! தகர்க்க பௌத்த பிக்குகள் முயற்சி!!
-MJ பௌத்த பிக்குகள் தலைமையில் தம்புள்ளையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய பள்ளிவாயல் நிர்மாணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று நண்பகள் இந்த ஆரப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. தம்புள்ளை நகரில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் ஹைரிய்யா எனப்படும் இப்பள்ளிவாயல் 80 வருடங்கள் வரலாற்றைக் கொண்டிருந்தும் ரங்கிரி விகாராதிபதிகளால் பள்ளிவாயல் சுற்றிவளைக்கப்பட்டிருந்தது. பொலிசாரின் பாதுகாப்புக்கைள் தாண்டியும் சில அசம்பாவிதங்கள் நடைபெற்றதாகவும் அறியப்படுகிறது. இதுவரைக்கும் இங்கு ஐந்து வேளை தொழுகைகளும் வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையும் எவ்வித பிரச்சினைகளுமின்றி நடந்து வந்த நிலையிலேயே இத்தூண்டுதல் சில…
-
நூராணியா ஹஸன் மறைவு: அமைச்சர் ஹகீம், பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரின் அனுதாபச் செய்திகள்.
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான நுராணியா ஹஸன் என்று அழைக்கப்படும் நண்பர் பௌசுல் ஹஸன் வாகன விபத்தில் காலமான செய்தி கேட்டு தான் அதிர்ச்சியும் கவலையும் அடைந்தேன் என தற்பொது கட்டாரிலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
-
இடி மின்னலுடன் பலத்த மழை
இடி மின்னலுடன் பலத்த மழை நாட்டின் பல பாகங்களிலும் தற்பொழுது பெய்து வருகின்றது. அண்மைக்காலமாக இடி மின்னல் காரணமாக சுமார் 50க்கும் அதிகமானோர் பலியாகி இருக்கின்றனர். இதனால் தொலைக்காட்சிகளில் ‘இடி மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்புப் பெறுவது எப்படி’ எனும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களும் காண்பிக்கப்பட்டு வருகின்றன. காத்தான்குடியிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை தற்பொழுது பெய்து வருகின்றது.
-
சாய்ந்தமருதுவில் தீயில் எரிந்து குடும்பப் பெண் பலி
சாய்ந்தமருது பிரதேச வீடொன்றில் மின் ஒழுக்கினால் ஏற்பட்ட தீயில் சிக்கி குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (19) வியாழக்கிழமை மதியம் 12.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.