-
பிரதமரின் பொய் நாடகத்தை அம்பலப்படுத்துகிறார் அலவி மௌலானா!
தம்புள்ளை – ரங்கிரி பள்ளிவாசலை வேறு இடத்திற்கு மாற்றும் திட்டத்திற்கு மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். தம்புள்ளை பிரச்சினை தொடர்பில் பிரதமர் டி.எம்.ஜயரத்ன தலைமையில் நேற்று (22) கம்பளையில் இடம்பெற்ற கூட்டத்தில் தான் கலந்து கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
பலவீனமான சமூகத்தை பாதுகாக்க முடியாத அரசாங்கத்தை பலமானதெனக் கூறமுடியாது: ஹக்கீம்
காத்தான்குடியில் நேற்று ஹகீம் ஆற்றிய உரை, நன்றி தமிழ்மிரர் பலவீனமானவர்களைப் பாதுகாக்க வேண்டியது பலமுடைய அரசாங்கத்தின் பொறுப்பாகும். பலவீனமான சமூகத்தை பாதுகாப்பதற்கு பலமான அரசாங்கத்தினால் முடியாவிட்டால் அதை பலமான அரசாங்கம் என்று கூறமுடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். மட்டக்களப்பு, காத்தான்குடியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற கதீப் முஅத்தீன்கள் சேவை மூப்புள்ளவர்களை கௌரவிக்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
-
தம்புள்ளை பள்ளிவாசல் விடயத்தில் பொய் கூறுவது பிரதமரா? பௌசியா?
தம்புள்ளை நகரில் பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினர் இடிக்க வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்திய முஸ்லிம் பள்ளிவாசலை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் டி.எம்.ஜயரத்ன அறிக்கை ஒன்றின் ஊடாக அறிவித்திருந்தார்.
-
கம்பளையில் கூட்டம் நடந்ததுபற்றி எனக்குத் தெரியாது! ஹிஸ்புல்லாஹ்
பேரினவாதிகளால் கடந்த வெள்ளிக்கிழமை சேதமாக்கப்பட்ட தம்புள்ளை மஸ்ஜிதுல் ஹைரிய்யா பள்ளிவாயல் விடயமாக ஓர் கூட்டம் நேற்று கம்களையில் நடைபெற்றதாக சில ஊடகங்களில் வெளியாகி இருந்தன. இதன்படி கம்பளையில் கூட்டம் நடந்ததாக எனக்குத் தெரியாது எனவும், குறித்த கூட்டத்திற்கான அழைப்பு எனக்கு விடுக்கப்படவில்லை எனவும் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்திருக்கின்றார். கம்பளைக் கூட்டம் ஓர் மர்மமானதோ என சந்தேகம் தோன்றுகிறதும் பல ஊடகங்கள் கேள்விகள் எழுப்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-
தம்புள்ளை பள்ளிவாசலை அகற்றுமாறு பிரதமர் உத்தரவு?
உண்மைக்குப் புறம்பான செய்திகள்! முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைக்கப்படுகிறதா? இலங்கையின் மத்திய மாகாணத்தில் தம்புள்ளை நகரில் பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினர் இடிக்க வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்திய முஸ்லிம் பள்ளிவாசலை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுப்பதாக இலங்கையின் பிரதமர் டிஎம் ஜயரத்ன அறிவித்துள்ளதாக அறிக்கையொன்று வெளியாகியுள்ளது.
-
கல்முனை கடற்கரைப்பள்ளிவாசல் வருடாந்த கொடியேற்றம் இன்று
–வாசகர் மடல் இஸ்லாத்தை விட்டும் நீங்கக்கூடிய கப்ர்வணக்கம், கப்ருகளை அலங்கரித்தல், அவற்றுக்கு அருகில் நின்று மரணித்தவர்களுக்கு ஸலாம் கூறாமல் அவர்களிடத்தில் உதவி தேடுதல் போன்றனவும், இஸ்லாம் வண்மையாத் தடுக்கும் ஆண்பெண் கலப்பு, கேளிக்கைகள் போன்றனவும் கண்முன்னால் நடக்கும் இவ் கொடியேற்ற விழாக்கள் பற்றி உள்ளுரிலும் இலங்கையிலும் பல எதிர்ப்புக்களும், கண்டணங்களும் மக்களிடமிருந்து எழுந்துள்ளதால் ஆதாரபூர்வமான இஸ்லாம் கூறிய கருத்துக்களையும் இவை இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டவையா என்பதனையும் அறியத்தருமாறு அல்குர்ஆன், ஹதீஸ்களைக் கற்ற உலமாக்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன். தனிப்பட்ட ஒருவருக்கோ, ஓர்…
-
தம்புள்ளை பள்ளிவாயலில் சனிக்கிழமை இடம்பெற்ற தொழுகை
-தினகரன் தம்புள்ளயில் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து மூடப்பட்ட ஜும்ஆப் பள்ளிவாசல் மீண்டும் திறக்கப்பட்டு தொழுகை இடம்பெற்றது. (இமாம் ஜமாஅத்துடன்) கூட்டாக லுஹர் தொழுகை நடத்தப்படுவதையும், பிரதி அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் உட்பட பிரதேச மக்கள் தொழுகையில் ஈடுபடுவதையும் படத்தில் காணலாம்.
-
தம்புள்ளை பள்ளிவாசல் அதே இடத்திலேயே அமைய வேண்டும்: அரசியல் கட்சிகள்
“அநுராதபுரத்திலுள்ள புனித பூமியில் அமைச்சரொருவருக்கு சொந்தமான மதுபானசாலை உள்ளது. அப்படி அநுராதபுர புனித பூமியில் மதுபானசாலை இருக்க முடியும் என்றால் ஏன் தம்புள்ளை புனித பூமியில் பள்ளிவாசல் இருக்க முடியாது?’ ‘தேங்காய் பறிப்பதற்க்காகவா முஸ்லிம் மக்கள் தங்களின் பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்தனர்’. தம்புள்ளை மஸ்ஜிதுல் ஹைரிய ஜும்ஆ பள்ளிவாசல் உரிய இடத்திலேயே அமைய வேண்டும் என அரசியற் கட்சிகள் இன்று ஞாயிறுக்கிழமை கோரிக்கவிடுத்தன
-
சட்டம் ஓர் இருட்டறை?
இலங்கைத் திருநாட்டின் அரசியல் சட்டங்கள் என்னதான் கூறி இருந்தாலும் சிறுபான்மை இனத்தவராக நாங்கள் இருக்கும்வரை பெரும்பான்மைக்கு தலை சாய்த்தே இந்த நாட்டில் வாழ வேண்டும் என்பதை தம்புள்ளை பள்ளிவாயல் உடைப்பு தெளிவாக எடுத்துக்காட்டுகிறது . இதுவரை அரசாங்கத்தில் உள்ள எந்த முஸ்லிம் அமைச்சரும் இது விடயமாக கண்டிக்கவோ வாய் திறக்கவோ இல்லாத நிலையில் காவி உடை தரித்தவர்களை மீறி ஒரு சானும் எந்த அரசாங்கமும் முன் எடுக்காது என்பதே இந்த நாட்டில் எழுதப்படாத சட்டம்! பள்ளிவாயலின் உறுதி இருந்தும்…
-
இன்பச்சோலையும் குப்பை மேடும்!
அதிகாரத்தை கையிலெடுக்குமா நகரசபை? எமது பிரதேச அரசியல்வாதிகள், தொண்டார்வ நிறுவனங்கள், மற்றும் சமூக சேவை இயக்கங்கள் ஆகியவற்றால் எவ்வளவுதான் மக்களின் சுகாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்க தீவிர நடவடிக்கை எடுத்தாலும் சில செல்வாக்குள்ளவர்களால் மக்கள் வசிக்கும் அல்லது பொழுபோக்கும் இடங்களில் குப்பைகளைக் கொட்டி அவற்றினால் சூழவுள்ள மக்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றனர்.
-
தமிழீழத்தை கருணாநிதி தமிழ் நாட்டில் உருவாக்கட்டும்!
-கோத்தாபய ராஜபக்ச கருத்து புலிகளின் தமிழீழத்தை அமைக்கும் தனது கனவை- திமுக தலைவர் மு.கருணாநிதி இந்தியாவில் வைத்துக் கொள்ளட்டும்- இலங்கையில் அது ஒருபோதும் சாத்தியமாகாது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். புலிகளின் தனித் தமிழீழம் அமைக்க ஐ.நாவின் கண்காணிப்பில் பொதுவாக்கெடுப்பு நடத்தும் யோசனைக்கு திமுக தலைவர் மு.கருணாநிதி ஆதரவு தெரிவித்துள்ளதை அடுத்தே பாதுகாப்பு செயலாளர் ,வ்வாறு விமர்சித்துள்ளார்.
-
ஜனாதிபதியின் பணிப்பில் அமைச்சர்கள் பெளஸி, ரிசாட் நேரடி விஜயம்
தம்புள்ளை ஹைரியா ஜம்ஆ பள்ளி மீண்டும் வழமையான நடவடிக்கைகளில்! பிரதேச மக்களுடன் சுமுக உறவை வளர்க்கும் நல்லெண்ண பேச்சின் எதிரொலி! தம்புள்ளையில் அமைந்துள்ள 60 வருட கால பழமைவாய்ந்த ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய அந்தப் பகுதிக்கு அமைச்சர் பெளஸி தலைமையில் அமைச்சர் ரிசாட் பதியுதீன், ஹுனைஸ் பாரூக் எம்.பி., முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என். எம். அமீன், வக்பு சபைத் தலைவர், முஸ்லிம் கலாசார பணிப்பாளர் நவவி அடங்கிய உயர்…