-
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பொது மக்களுக்கு விடுக்கும் அறிவித்தல்.
CMM. அமானி கடந்த வாரம் தம்புள்ளையில் நடந்து முடிந்த பள்ளிவாசல் தாக்குதலை அடுத்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பொது மக்களுக்கு விடுத்த அறிவித்தல் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றப்படுகிறது.
-
தம்புள்ளை புனித பூமியில் ஒருபோதும் பள்ளிவாசல் இருக்கவில்லை: ஹெல உறுமய
ரங்கிரி தம்புள்ளை புனித பூமி பிரதேசத்திற்குள் உள்ள பள்ளிவாசல், ஒரு பள்ளிவாசல் அல்ல எனவும் அங்கு பள்ளிவாசல் அமைப்பதற்கு அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெறவில்லை எனவும் ஜாதிக ஹெல உறுமய கூறியுள்ளது. 1962 ஆம் ஆண்டு அப்பகுதியிலிருந்த வர்த்தகர் ஒருவருக்கு கடையொன்றை நிர்மாணிப்பதற்காக காணி வழங்கப்பட்டது என ஜாதிக ஹெல உறுமய தலைவர் வண. ஒமல்பே சோபித தேரர் கூறினார்.
-
தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம்; நோன்பு பிரார்த்தனைக்கு ஜம்இய்யத்துல் உலமா அழைப்பு
கடந்த வாரம் தம்புள்ளையில் பள்ளிவாசல் தாக்கப்பட்டமைக்காக நாளை வியாழக்கிழமை 26ஆம் திகதி நோன்பு நோற்கும் படியும் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் பள்ளிவாசல் முற்றவெளியில் ஒன்றுதிரண்டு அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கோரியுள்ளது.
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சனியன்று கூடுகிறது! முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்மட்டக் குழுக் கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை 28ம் திகதி இடம்பெறவுள்ளதாக அதன் துணைப் பொதுச் செயலர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் தம்புள்ளை பிரச்சினை குறித்து விவாதிக்கப்படும் எனவும் தம்புள்ளை பிரச்சினையை தீர்த்து வைக்க அரசாங்கம் முன்வராத நிலையில் தொடர்ந்தும் அரசுக்கு ஆதரவு அளிப்பதா? என்பது தொடர்பில் இக்கூட்டத்தில் பெரும்பாலும் கேள்வி எழுப்பப்படலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
-
கிழக்கில் 327 பட்டதாரி, டிப்ளோமா ஆசிரியர்களுக்கு நியமனம்
கிழக்கு மாகாண பட்டதாரி மற்றும் டிப்ளோமா ஆசிரியர்களுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கும் வைபவம் நேற்று 24ம் திகதி செவ்வாய்க்கிழமை திருகோணமலையில் இடம்பெற்றது.
-
UEFA – ‘பார்சிலோனா’ அதிர்ச்சி தோல்வி! இறுதிப்போட்டிக்குத் ‘செல்சி’ தெரிவு
-MJ நான்கு முறை UEFA உலக கழக சம்பியன் பட்டம் வென்ற உலகின் முன்னணி வீரர்களைக் கொண்டமைந்த ‘பாசிலோனா’ நேற்றிரவு நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ‘செல்சி’யுடன் விளையாடி மொத்தகோல் (Aggregate)அடிப்படை விதிக்கமைய அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியது. இதனால் இவ்வருடத்துக்கான UEFA இறுதிப்போட்டியில் விளையாடும் தகுதியை இழந்துள்ளது.
-
தம்புள்ளை பள்ளிவாயல் உடைப்பும் எழும் சந்தேகங்களும்
தம்புள்ளை பள்ளிவாயலை அகற்றக்கோரி புதுவகையான செய்திகள் தினம் தினம் ஒன்றுக்கு ஒன்று மாற்றமாக வெளியாகி வருகின்ற நிலையில், இந்நாட்டில் வாழுகின்ற முஸ்லிம் மக்களிடையே பாரிய சந்தேகங்கள் எழுந்தவண்ணமிருக்கின்றன.
-
ஹிஸ்புல்லாவின் கருத்துக்கு ஜம்இய்யதுல் உலமா சபை கண்டனம்
தம்புள்ளை ரங்கிரி ரஜமஹா விகாரையின் விகாராதிபதி இனாமலுவ தேரரை நேற்று திங்கட்கிழமை சந்தித்த பின்னர் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்துக்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும் முஸ்லிம் கவுன்ஸில் ஒவ்; ஸ்ரீலங்கா ஆகியன கண்டனம் தெரிவித்துள்ளன.
-
பிரதியமைச்சர் ஹிஸ்புழ்ழா தலைமைலான குழு தம்புள இனாமலுவ மகாநாயக்க தேரரை சந்திப்பு! சுமுகமான பேச்சுவார்த்தை மூலம் தீர்வு..
–ஜூனைட் எம். பஹ்த்– கடந்த சில தினங்களாக இடம்பெற்று வருகின்ற தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எவ்வித இணக்கப்பாடுகளும் எட்டாத இழுபறி நிலையில் இருந்த பள்ளிவாசல் விவகாரம் நேற்று சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் ஹிஸ்புல்ழாஹ் அவர்களின் துரித முயட்சினால் தம்புள்ள மகா நாயக்க தேரர் அவர்களோடு பல மணி நேர பேச்சுவார்த்தைகள் தம்புள்ள விகாரயில் இடம்பெற்றது.
-
கொமர்ஷல் வங்கியின் இஸ்லாமிய வங்கிச் சேவை
தனியார் வங்கி முன்னோடிகளில் ஒன்றான கொமர்ஷல் வங்கி அல் அதாலாஹ் எனும் ஷரிஆ இஸ்லாமிய வங்கிச் சேவையை தனது வாடிக்கையாளர்களுக்கு முன்வைத்துள்ளது. ‘வதியாத்தமான்’ நடைமுறைக் கணக்குகள், முதாரபாஹ் சேமிப்புக் கணக்குகள் மற்றும் தவணை முதலீடுகள் முராபஹா, முஷாரகா, டிமினிசிங் முஷாரகா, இஜாரா லீசிங் மற்றும் இறக்குமதிக்கான நிதிச் சேவைகள் என்பனவே வங்கி இஸ்லாமிய வங்கிச் சேவை மூலம் வழங்கும் சேவைகளாகும்.
-
தம்புள்ள பள்ளிவாசல் விவகாரத்தை கலந்துரையாடல் மூலம் தீர்க்கலாம்
இன மற்றும் மத ரீதியான பிரச்சினைகள் எழும்போது கலந்துரையாடல்களின் மூலம் ஒரு தீர்வுக்கு வருவதே அதனைத் தீர்ப்பதற்குரிய பொருத்தமான வழிமுறையென பிரதமர் தி. மு. ஜயரத்ன அவர்கள் வலியுறுத்தினார். சிறு சிறு கருத்து வேறுபாடுகளை பூதாகர மாக மாற்றுவதற்கு இடமளிக்கக்கூடாது எனவும் அவ்வாறான பிரச்சினைகளின்போது சகல தரப்பி னர்களினதும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு தீர்வொன்றிற்குச் செல்லவேண்டும் எனவும் பிரதமர் அவர்கள் சுட்டிக் காட்டினார்.
-
30,000 மணி (20 வருடங்கள்) நேரம் பயன்படுத்த கூடிய மின்குமிழ் அறிமுகம்
L.E.D- Light-Emitting Diodes (ஒளி உமிழும் இருமுனையங்கள்) இருபது வருடங்கள் அல்லது 30,000 மணித்தி யாலங்கள் பயன்படுத்தக் கூடிய மின்சாரத்தை சிக்கனமாக மீதப்படுத்தும் எல். ஈ. டீ. (L.E.D) மின்குமிழ் ஒன்றை உலகிற்கு அறிமுகம் செய்வதற்கு அமெரிக்க கம்பனி ஒன்று தயாராகி வருகிறது. அமெரிக்காவின் வலு திணைக்களத்தினால் அண்மையில் நடாத்தப்பட்ட போட்டியிலும் 10 வோட் அளவினைக் கொண்ட எல்.ஈ.டீ. மின்குமிழுக்கே முதலிடம் கிடைத்துள்ளது.