-
இஸ்லாமும் பாடல்களும்
– மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ : மனிதன் உலகத்தில் சுதந்திரமாக வாழ்வதற்கு, சில நிபந்தனைகளுடன் இஸ்லாம் முழு அனுமதியையும் வழங்கி இருக்கின்றது. அதில் ஒன்றுதான் பாடல்களை கேட்டு ரசிப்பது. இஸ்லாத்தில் பாடல்கள் கேட்பதற்கு எந்த தடையுமில்லை, ஆனால் பாடல்கள் மூன்று நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். ஒன்று ஷிர்க்கில்லாத பாடலாக இருக்க வேண்டும், இரண்டாவது தவறான கருத்துக்களில்லாத பாடலாக இருக்க வேண்டும். மூன்றாவது இசை இல்லாத பாடலாக இருக்க வேண்டும்.
-
பள்ளிவாயல் உடைப்புக்கு எதிரான பிரேரணை காத்தான்குடி நகர சபையில் நிராகரிப்பு
தம்புள்ளை பள்ளிவாயல் உடைப்புக்கு எதிராக காத்தான்குடி நகர சபையில் கொண்டுவரப்பட்ட கண்டன பிரேரணை சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக நகர சபை எதிர்க்கட்சி தலைவர் பொறியிலாளர் எம்.எம்.அப்துர் றஹ்மான் தெரிவித்தார். காத்தான்குடி நகர சபையின் மாதார்ந்த அமர்வு இன்று வியாழக்கிழமை தவிசாளர் எஸ்.எச்.அஷ்பர் தலைமையில் நடைபெற்றது.
-
நோக்கம் தவறிய ஹர்த்தால்….
தம்புள்ளை பள்ளிவாயல் இடிப்பு சம்பவத்தைக் கண்டித்து அம்பாறை மாவட்டத்திலும் காத்தான்குடியிலும் இன்று (26-04-2012) அனுஷ்டிக்கப்பட்ட ஹர்த்தால் எதிர்ப்புக் கண்டணம் குறிப்பாக இலங்கை முஸ்லிம்களுக்கு தோல்வியில் முடிவடைந்துள்ளது. வெளிநாட்டிலும் உள்நாட்டிலிருந்தும் இயக்கப்படும் சமூக இணையத்தளங்களின் செய்திகளால் வெளிநாட்டில் வசிக்கும் எமது சகோதர்களுக்கு உள்ளுர் செய்திகளைக்கண்டறிய ஓர் ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் இணையத்தளங்களில் தனது நேரத்தை செலவு செய்து வருகின்றனர். உலக முஸ்லிம்கள் வரை கண்டணம் எழுந்துள்ள தம்புள்ளை பள்ளிவாயல் உடைப்புக்கு இலங்கையில் வாழும் முஸ்லிம் சகோதரர்களைப் பார்க்கிலும் கடல்கடந்து வாழும்…
-
காத்தான்குடி பிரதான வீதி இன்று! (படங்கள் இணைப்பு)
-MTM. ரஸ்லான்
-
தம்புள்ளை பள்ளிவாயல் உடைப்பு: காத்தான்குடியிலும் அம்பாறை மாவட்டத்திலும் ஹர்த்தால்
பொதுமக்கள் கவலை! கடந்த வெள்ளிக்கிழமையன்று சிங்கள பேரினவாதிகளால் உடைக்கப்பட்டு இன்று அதன் இருப்புக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கும் ஓர் ஆபத்தான நிலையைக் கருத்திற்கொண்டு நேற்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் கேட்டுக்கொள்ளப்பட்ட அறிக்கைக்கு இணங்க, இன்று அம்பாறை மாவட்டத்திலும் காத்தான்குடியிலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன.
-
இலங்கையின் பிரதான குடு விநியோக மத்திய நிலையம் முற்றுகை! அறுவர் கைது
இலங்கையில் குடு எனப்படும் போதைப் பொருள் விநியோகிக்கும் பிரதான மத்திய நிலையமொன்று ஸ்ரீ ஜயவர்த்தனபுர பகுதியில் முற்றுகையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு அருகில் உள்ள 2000 பிளாஸா என்ற அதி சொகுசு அடுக்குமாடி வீட்டுத் திட்டத்தில் 10வது மாடியில் உள்ள வீடொன்றை சோதனை செய்தபோது அங்கு குடு விநியோக நடவடிக்கையில் இடம்பெறுவது கண்டறியப்பட்டுள்ளது.
-
சம்மேளனக் காரியாலயத்திற்கு தீ மூட்டி எச்சரிக்கை?
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனக் காரியாலயம் இன்று அதிகாலை இனந்தெரியாதோரால் தீக்கிரைக்குள்ளாக்கப்பட்டு பின்னர் பொதுமக்களினரதும் படையினரதும் உதவியுடன் தீ அணைக்ப்பட்டுள்ளது.
-
தம்புள்ளை பள்ளிவாசலும் கோயிலும் புனித பூமிக்கு வெளியே உள்ளன
3 முஸ்லிம்களின் பெயரிலே இந்தக் காணி உள்ளது தம்புள்ளை முஸ்லிம் பள்ளிவாசலும் கோயிலும் தம்புள்ளை புனித பூமி பிரதேசத்துக்கு வெளியிலே உள்ளன. இந்தப் பள்ளிவாசல் நான் பிறப்பதற்கு முன்பிருந்தே அங்கு இயங்கி வருகிறது. அது சட்ட விரோத கட்டிடமல்ல. மூன்று முஸ்லிம்களின் பெயரிலே பள்ளிவாசல் காணி உள்ளது. மத ஸ்தலம் என்பதால் தம்புள்ளை பள்ளிவாசலுக்கு சோலை வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது என காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
-
தவறான உணர்வுகள், சிந்தனைகளை ஏற்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்
தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசல் விவகாரம் தொடர்பாக திங்கட்கிழமை தன்னால் தெரிவிக்கப்பட்ட கருத்துகளால் ஏதாவது தவறான உணர்வுகள் மற்றும் சிந்தனைகள் ஏற்பட்டிருந்தால் மனம் வருந்துகின்றேன் என பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். குறித்த ஜும்ஆ பள்ளிவாசலுக்கு எந்த சேதமும் விளைவிக்கப்படவில்லை என பிரதியமைச்சர் ஹிஸ் புல்லா கூறியதாக திங்கட்கிழமை செய்திகள் வெளியாகியிருந்தன.
-
முதலைகளும் பாதுகாப்பும்!
நேற்று மட்க்களப்பு மஞ்சந்தொடுவாய் தோணா கால்வாயில் பிடிக்ப்பட்டிருந்த 5 அடி நீளமான முதலை பாதுகாப்பாக வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் அதிகமான இடங்களில் தற்பொழுது முதலைகளின் ஊடுறுவல் அதிகரித்திருப்பதால் பொதுமக்கள் நீர்தேங்கி இருக்கும் பகுதிகளுக்குச் செல்வதிலும் ஆறுகளிலும் ஓடைகளிலும் குளிப்பதிலும் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
-
முஸ்லிம் சமூகத்தை ஹிஸ்புல்லா காட்டிக்கொடுத்து விட்டார் முஜீபுர் ரஹ்மான்
-Tamilmirror தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்டமை தொடர்பில் பொய்யான அறிக்கையினை ஊடகங்களுக்கு வழங்கியதன் மூலம் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா முஸ்லிம் சமூகத்தை காட்டிக்கொடுத்து விட்டார் என மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டினார்.
-
‘ரியல் மெட்ரிட்’ வெளியே! அதிகமான விளையாட்டு இரசிகர்கள் ஏமாற்றம்!
‘பெனால்டி’ உதைகளில் நம்பிக்கை நட்சத்திரங்களான ரொனால்டோ, ககா, ராமோஸ் ஆகியோர் கோல்கள் இடவில்லை! -MJ UEFA கிண்ண இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் ஐரோப்பிய கனவு கழகமாகக் கருதப்படும் ரியல் மெட்ரிட் (Real Madrid) பேயர்ன் மியுனிச் (Bayen Munich) அணியுடன் இன்றிரவு நடைபெற்ற போட்டியில் பெனால்டி உதைகள் மூலமான கோல் அடிப்படையில் தோல்வியைத் தழுவியதன் மூலம் அதிகமான உலக இரசிகர்களின் கனவுகளையும் கலைத்துச் சென்றுள்ளது.