-
பள்ளிவாசல் விவகாரம்: நாளை இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
இலங்கையில் மசூதி இடிக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை நாளை ஏப்ரல் 30-ம் திகதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
-
மே 7, பொதுவிடுமுறை தினம்
வெசாக் விடுமுறை தினங்கள் மே மாதம் 5ம் திகதி சனிக்கிழமையும் 6ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் வருவதால் 7ம் திகதி திங்கட்கிழமை பொது விடுமுறை தினமாக பொது நிர்வாக உள்நாட்டு அலவல்கள் அமைச்சு பிரகடணப்படுத்தியுள்ளது.
-
சென்னையில் ஆர்ப்பாட்டம்
தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினையை கண்டித்து சென்னையில் இலங்கை ஜனாதிபதியின் கொடும்பாவியை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
-
என்னைத் தவிர எவராவது முயற்சித்தால் அது வெறும் பகற் கனவாகுமென்கிறார் பிள்ளையான்
கிழக்கு மாகாண சபைக்கான முதலமைச்சர் பதவிப் போட்டி? கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றால் அடுத்த முதலமைச்சரும் தானே எனவும் அதில் எவருடைய கனவும் பலிக்காது எனவும் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்திருக்கிறார். தனது பதவிக் காலத்தில்தான் மக்களுக்குச் சேவை செய்து வருவதை மக்கள் இலகுவில் மறந்துவிட மாட்டார்கள். தான் ஒருபோதும் மக்களை விட்டு விலகிச் சென்றது கிடையாது.
-
பிரித்தாணியாவில் தொடரும் காலநிலை மாற்றம்!
பிரித்தாணியாவில் கடந்த 3 வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதாகவும், மழையுடன் கூடிய காற்றும் வீசுவதாகவும் பிரித்தாணிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குளிர்காலம் நிறைவடைந்து இலைதுளிர் காலத்தில் இவ்வாறான தொடர் மழை காலநிலை என்றும் இருந்ததில்லை. வெயில் ஆரம்பித்து இலைகள் துளிர்க்கும் இக்காலத்தில் தொடர்மழை விசித்திரமாக நோக்கப்படுவதாகவும் ஊடகங்கள் கருத்துத் தெரிவித்துள்ளன.
-
தம்புள்ளையில் நடந்தது என்ன?
தம்புள்ளை மஸ்ஜிதுல் ஹைரிய்யா பள்ளிவாயல் சம்பந்தமான நாம் அறியாத பல உண்மைகளும் மற்றும் பள்ளிவாயல் உடைப்பு ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் இடம்பெற்ற நிகழ்வுகள் பற்றியும், இப்பள்ளிவாயல் விடயமாக எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றியும் மிகத் தெளிவாக ‘சுஐப் எம். காசிம்’ என்பவரால் எழுதப்பட்ட இக்கட்டுரை இன்றைய தினகரன் பத்திரிகையில் வெளிவந்துள்ளது. எமது அபிமான வாசகர்களுக்காக அவற்றை இங்கு பிரசுரிக்கின்றோம்.
-
காய்க்கத்தொடங்கும் பேரீத்தம் மரங்கள்
காத்தான்குடி பிரதான வீதியில் நடப்பட்டுள்ள பேரீத்த மரங்கள் தற்பொழுது காய்க்கத் தொடங்கி வருகின்றன. வெயில் காலம் தற்பொழுது நிலவி வருவதால் பேரீத்தம் காய்கள் கொண்டதாக சகல மரங்களும் காணப்பட்டு வருகின்றன.
-
அமைதியான தீர்வு வேண்டி நாடெங்கிலும் முஸ்லிம்கள் துஆ
தம்புள்ளை முஸ்லிம் பள்ளிவாசல் விவகாரத்திற்கு அமைதியான தீர்வு கிடைக்க வேண்டும் என வேண்டி நேற்று ஜும்ஆ தொழுகையின் பின்னர் நாடு பூராவும் உள்ள சகல பள்ளிவாசல்களிலும் அமைதியான துஆப் பிரார்த்தனைகள் இடம்பெற்றன. இதில் ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.
-
தனது போதனைக்கு எதிரான செயல்களைக் கண்டு புத்தர் இரத்தக் கண்ணீர் வடித்திருப்பார்: யோகேஸ்வரன் எம்.பி
‘ஏனெனில் சிங்கள பேரினவாத இவ் அரசாங்கம் உங்களை தேவைக்கு பயன்படுத்திவிட்டு தேவை முடிந்ததும் தூக்கி எறிந்து விடும் சிறுபான்மை இன மக்களான நாம் இவ்வேளையில் எம் அடிப்படை உரிமையை பாதுகாத்துக் கொள்வதும் அவசியமானதாகும்’. “தம்புள்ளை பகுதி புனித பிரதேசம் என்ற வகையில் ஒரு சிறுபான்மை இன மக்களான இஸ்லாமிய மக்களின் பள்ளிவாசலை தங்கள் சுயநலம் கருதி பௌத்த மதகுருமார்களும், ஹெல உறுமயவும், பௌத்த தீவிரவாதிகளும் அகற்ற முற்படுவதை தமிழ் பேசும் சமூகம் என்ற வகையிலும், சிறுபான்மை இனம்…
-
கொழும்பிலும் நாட்டின் பல பாகங்களிலும் கண்டண ஆர்ப்பாட்டம்! தம்புள்ளை பள்ளிவாயலில் மீண்டும் ஜும்ஆ தொழுகை:
காத்தான்குடியில் கண்டண ஆர்ப்பாட்டமில்லை! அமைதிப்பிரார்த்தனை! காத்தான்குடியில் ஆர்ப்பாட் உணர்வுகளோ கண்டணங்களோ மக்கள் மத்தியில் இன்று காணப்படவில்லை. துஆப்பிரார்த்தணை மாத்திரம் நடைபெற்றது. இருந்தும் அதிகமான இளைஞர்களும் பொதுமக்களும் ஊர்த்தலைமை, ஊர் அரசியல் தலைவர்கள் விடயத்தில் அதிருப்தியையும் விசனத்தையும் தெரிவித்திருந்தனர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. (படங்கள் இணைப்பு)
-
பொறுமை காத்து துஆ பிரார்த்தனையில் ஈடுபடுமாறு முஸ்லிம் தலைவர்கள் வேண்டுகோள்
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் வழிகாட்டலுக்கு அமைய முஸ்லிம்கள் பொறுமை காத்து துஆப் பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டுமென முஸ்லிம் அமைச்சர்களும், பிரதியமைச்சர்களும், எம்.பிக்களும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். துஆ பிரார்த்தனை தவிர்ந்த வேறு எதுவித ஆட்சேபனை நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.