-
உலமா சபையின் கோரிக்கைக்கிணங்க வைத்தியர்களுக்கான பரீட்சை நேரத்தில் மாற்றம்
வெளிநாடுகளில் மருத்துவ கற்கைகளை நிறைவு செய்து உள்நாட்டில் பணிபுரிய விரும்பும் வைத்தியர்களுக்கான பரீட்சை நேரத்தில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவ கவுன்ஸில் அறிவித்துள்ளது. இப்பரீட்சையின் எதிர்வரும் மே 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் இப்பரீட்சை நேரத்தில் முஸ்லிம்களின் வாராந்த ஜும்ஆ தொழுகை உள்ளமையினால் பரீட்சை நேரத்தில் மாற்றம் மேற்கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை கடிதம் மூலம் இலங்கை மருத்துவ கவுன்ஸிலிற்கு வேண்டுகோள் விடுத்திருந்தது.
-
பொது நூல் நிலையம் மூடப்பட்டமையால் மாணவர்கள் பாதிப்பு
அம்பாரை மாவட்ட நாவிதன்வெளி பிரதேச சபைக்குட்பட்ட சாளம்பைக்கேணி கிராமத்தில் இயங்கி வந்த அன்வர் இஸ்மாயில் பொது நூல் நிலையம் கடந்த பல மாதங்களாக மூடப்பட்டுள்ளதன் காரணமாக அப்பிரதேசத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் தமது கல்வித் தேவையையும், பொது மக்கள் தினசரி பத்திரிகைகள் வாசித்தல் போன்ற தேவையையும் நிறைவு செய்ய முடியாதுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
-
இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தமைக்கான பின்னணி அம்பலம்
இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தமைக்கான பின்னணி அம்பலமாகியுள்ளது என திவயின செய்தி வெளியிட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் உலை உருவாக்குவதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுமதியளித்தமையே இதற்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
-
10 ரூபா, 2000 ரூபா நாணயத்தாள்கள் அச்சிடப்படமாட்டா!- மத்திய வங்கி ஆளுநர்
10 ரூபா மற்றும் 2,000 ரூபா நாணயத்தாள்கள் இனிமேல் அச்சடிக்கப்படமாட்டாதென மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நேற்று தெரிவித்துள்ளார். 10 ரூபா நாணயக்குற்றியொன்று வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
-
இலங்கை, இஸ்ரேல் பொருளாதார உறவை வளப்படுத்த நேரடி விமான சேவை
மோதலுக்குப்பின் இலங்கையில் சமூகங்களிடையே நல்லுறவு இஸ்ரேல் தூதுவர் கூறுகிறார் இலங்கையில் 30 வருட காலமாக நிலவி வந்த யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப் பட்டதையடுத்து, சமூக மற்றும் பொருளாதார ரீதியில் வரவேற்கத் தக்க பாரிய முன்னேற்றங்கள் ஏற் பட்டுள்ளன. இனங்களிடையே நல் லிணக்கம் காணப்படுவதுடன், அனைத்து மக்களும் ஒற்றுமையாகவும் சுதந்திர மாகவும் இருப்பதனை நேரடியாக காணமுடிந்ததையிட்டு இலங்கையின் நட்பு நாட்டின் பிரதிநிதியென்ற வகை யில் நான் பெருமகிழ்ச்சியடைகின் றேன் என இலங்கை மற்றும் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதுவர் அஸ்மன்…
-
இடி, மின்னல் வேளையில் உயிரை பாதுகாப்பது எவ்வாறு?
நாட்டில் இடி, மின்னல் தாக்கம் சமீப காலங்களில் மிக மோசமாக உள்ளது. பலர் உயிரிழந்தும் உள்ளனர். மின்னலில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமெனக் குறிப்பிட்ட அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ஏ.எம். சியாத், மின்னல் பாதுகாப்புக்கான உபாயங்களையும் எடுத் துரைத்தார். “இடி, மின்னல் தாக்கம் மாலை 4 மணிக்குப் பின்னரே அதிகமாக இருக்கும். மின்னல் வேளையில் வாக னங்களில் பயணம் செய்வது ஆபத்தானது.
-
ஊடக சுதந்திர தினம் : சிரமத்தில் இலங்கை செய்தியாளர்கள்
-BBC Tamil இருபதாவது தடவையாக அனுட்டிக்கப்படும் உலக தகவல் சுதந்திர தினத்தில் தாம் எதிர்கொள்ளும் கட்டுப்பாடுகளை, சிரமங்களை பிரதிபலிப்பவர்களில் இலங்கை செய்தியாளர்களும் அடங்குகிறார்கள். ஒரு நீண்ட ஜனநாயக வரலாற்றை கொண்டிருக்கின்ற போதிலும், தசாப்தகால உள்நாட்டுப் போரை எதிர்கொண்ட இலங்கைத் தீவு, எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பினால் பட்டியலிடப்பட்ட பட்டியலில் அடியில் இருக்கும் இறுதி இருபது நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது.
-
இறக்குமதி செய்யப்படும் பால்மாவுகளுக்கு 92 ரூபாய் அதிகரிப்பு!
அத்தியவசியப் பொருட்களுள் ஒன்றாக இருக்கும் இறக்குமதி செய்யப்படும் பால்மாவுகளுக்கு 15% வரி அல்லது 92 ரூபாவினை அதிகரிக்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான பால்மா இறக்குமதியில் இந்த அதிகரிப்பு தற்போதைக்கு இல்லையெனவும் நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
-
விருந்தோம்பல்
– அபூ அப்துல்லாஹ் : மேலும், அ(வ்விறை)வின் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள். (76:8) ”அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காகவே நாங்கள் உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து கூலியையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை” என்றும் கூறுவார்கள். (76:9) யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் தன் விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும். அபூஹுரைரா(ரலி) : புகாரி, முஸ்லிம்.
-
மு.கா. தொடர்ந்தும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கும்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு முழுமை யான ஒத்துழைப்பு நல்கும் என அக்கட்சியின் தலை வரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று முன்தினம் தெரிவித்தார். நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் மேற்கொண்டுவரும் பேச்சுவார்த்தைகள் மூலம் அவர்களைப் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்குக் கொண்டுவர முடியும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
-
உதிரத்தையே பாலாக்கி உயிரூட்டும் சக்தியான தாய்ப்பாலை விட மேலானதொன்றும் இல்லை
‘தங்கள் உடலை கட்டாக வைத்து, வசீகரமாக காட்சியளிக்க வேண்டு மாயின், தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் ஓரிரு மாதங்களில் கைவிடப்பட வேண்டும் என்று இன்றைய நவீன உலகின் தாய்மார் அசையாத நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். அவர்கள் தாய்ப் பாலை கொடுப்பதற்கு பதில் தங்கள் குழந்தைகளுக்கு வெளிநாடு களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாவை கரைத்து போத்தல்களின் மூலம் பிள்ளைகளுக்கு ஊட்டுகிறார்கள்’.
-
பால் பண்ணையாளர்களின் விசித்திரமான ஆர்ப்பாட்டம்
MJ நேற்று (02-05-2012) ஹட்டன் நகரில் பால் உற்பத்தியாளர்கள் அரசுக்கு எதிராக ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பசுமாடுகளையும், களஞ்சியப்படுத்தி வைத்திருந்த நூற்றுக்கணக்கான லீற்றர் பாலையும் வீதியில் கொண்டு வந்து பாலால் குளித்து, வீதியில் வீசி விசித்திரமான எதிர்ப்பையும் அதிருப்தியையும் பால் பண்ணையாளர்கள் வெளிப்படுத்தியிருந்தனர். தனியார் நிறுவனங்களிடம் இதுவரை பால் விற்றுவந்த பண்ணையாளர்களிடமிருந்து பாலை கொள்வனவு செய்ய அரச நிறுவனமான மில்கோ மறுத்துவருவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.