-
மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற பிரமாண்டமான இரத்ததான நிகழ்வு
இன்று உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் இன்று சர்வதேச செஞ்சிலுவை தினமாகும். இதனை முன்னிட்டு “மனித நேயத்துக்காக ஒன்றிணைவோம்” என்னும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
-
ஹபரணை-பொலன்னறுவை பாதையில் இன்று இடம்பெற்ற கொடூரமான விபத்து
ஹபரண – பொலன்னறுவை பிரதான வீதியில் 32ம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வான் விபத்தில் ஒருவர் பலியானதோடு மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்களுள் ஒரு ஆண், 6 பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் அடங்குவதுடன் அவர்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
நோயாளிகளை காப்பாற்றுவதற்காக போலி டாக்டர்களை சட்டபூர்வமாக தண்டிக்க வேண்டும்
இலங்கையில் நோய், நொடியற்ற ஆரோக்கியமான சமுதாயம் ஒன்றை அமைக்க வேண்டுமாயின் நல்ல அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழ கங்களில் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டுமன்றி, போதியளவு சுகாதார வசதிகளும், மருந்துகளுக்கான தட்டுப்பாடும் இல்லாதிருப்பது மிகவும் அவசியமாகும். இத்தகைய சகல வசதிகளும் சுகாதாரத்துறையில் இருந்தாலும் கூட சில சமூக விரோதிகள் டாக்டர்களின் சோதனைக் குழாய்களை தங்கள் கழு த்தில் தொங்கவிட்டுக் கொண்டு, டாக்டர்களைப் போன்று மக்களை ஏமா ற்றும் சட்டவிரோத செயற்பாட்டை தடுத்துவிடுவது மிகவும் அவசிய மாகும்.
-
முச்சக்கரவண்டி விபத்து
அக்கரைப்பற்றிலிருந்து கல்முனை நோக்கி நேற்று (07) அதிவேகமாக சென்ற முச்சக்கர வண்டியொன்று கட்டுப்பாட்டை இழந்து அட்டப்பள்ளம் பிரதான வீதி ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த கால்வாய்த் தூணில் மோதுண்டு விபத்திற்குள்ளாகிக் கிடப்பதை படத்தில் காணலாம். (தினகரன்)
-
பாடசாலையை மாற்ற முற்பட்டால் நியமனம் இரத்து
புதிதாக நியமனம் பெறும் ஆசிரியர்களுக்கான பாடசாலைகளை கல்வி அமைச்சே தீர்மானிக்கும் 1000 பாடசாலை அபிவிருத்தித் திட்டம் -தினகரன் தெரிவு செய்யப்படும் பட்டதாரி ஆசிரியர்கள் கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்படும் பாடசாலைகளில் கடமையாற்ற தயாராகவிருக்க வேண்டும். இல்லையேல் அவர்களுக்கான நியமனம் இரத்துச் செய்யப்படுமென கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தினகரனுக்குத் தெரிவித்தார். ஆயிரம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக இம்மாத இறுதிக்குள் ஆயிரம் தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
-
ஒலிம்பிக் ஆடைகள்: இலங்கை தொழிற்சாலை மீது குற்றச்சாட்டு
பிரிட்டனில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப விழாவின் போது பிரிட்டன் விளையாட்டு வீரர்கள் அணியவுள்ள ஆடைகள் இலங்கையில் அடிப்படை தொழிலாளர் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் தயாரிக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ஒலிம்பிக் ஆரம்ப விழாவில் பிரிட்டன் அணிக்கான அதிகாரபூர்வ ஆடைகளை பிரிட்டனிலுள்ள நெக்ஸ்ட் ஆடை விற்பனை நிறுவனம் வெளியிட்டு சில நாட்களுக்குள் இந்தக் குற்றச்சாட்டுக்கள் லண்டனிலிருந்து வெளியாகும் தி இன்டிபெண்டன் நாளிதழில் வெளியாகியுள்ளன.
-
மட்டு கிரானில் வீசிய மினி சூறாவளி: மக்கள் வியப்பு!
-MJ இன்று (திங்கள்) மாலை மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் வீசிய மினி சூறாவளியினால் அதிகமான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். குடிசைகளும் தகர வேலிகளும் குடைசாய்ந்ததால் சுமார் 75 குடும்பங்கள் தற்போது வரை இடம் பெயர்ந்து பொது இடங்களில் முகாமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து சுட்டெரிக்கும் ஓர் வெயில் காலத்தில் இவ்வாறான மினி சூறாவளி ஏற்பட்டிருப்பது இப்பிரதேச மக்களால் வியப்புடன் நோக்கப்படுகிறது.
-
மட்டக்களப்பில் இடம்பெற்ற வெசாக் கொண்டாட்டம்: இலட்சக்கணக்கான மக்கள் கண்டுகளிப்பு:
படங்கள் இணைப்பு -M.T.M. ரஸ்லான் காத்தான்குடியில் இருந்தும் அதிகமானோர் குடும்ப சகிதம் சென்றுவரவு! வெசாக் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் இடம்பெற்ற வெசாக் கூடுகள் அலங்கார கண்காட்சியை இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் பார்த்து மகிழ்ந்தனர். மட்டக்களப்பு மங்களாராம விகாரையிலும் அதனைச் சுற்றிலும் வெசாக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-
காலியிலும் சிங்கள பேரினவாத ஆரப்பாட்டம்: பொலிசார் உசார் நிலையில்.
ஏற்கனவே அறிவித்தபடி இன்று காலியில் சிங்கள இனவாதக் குழுக்கள் முஸ்லிம்களுக்கு எதிராகவும் தம்புள்ளை பள்ளிவாயலுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை. பொலிசார் நேற்று இரவு தொடக்கம் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பொலிசார் சிரமத்தின் மத்தியில் ஆர்ப்பாட்டக் காரர்களை கட்டுப்படுத்தினர்.
-
சவூதியில் ரிஸ்வி முப்தி
மஸ்ஜிதுல் ஹைரிய்யா-தம்புள்ளை பள்ளிவாயல் விடயம் சுமுகமாகத் தீர்க்கப்படும் தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்டதையடுத்து ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை சுமுகமாக ரீதியாக தீர்ப்பதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சித்து வருகின்றது என சவூதி அரேபியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் இஸ்லாமிய அறிஞரான அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி தெரிவித்தார். குறித்த விவகாரம் தொடர்பில் அரசாங்கத்தின் முயற்சியினால் ஒரு திருப்பதியான தீர்வினை விரைவில் பெற முடியும் என நம்புவதாக அகில இலங்கை ஜம்இயதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி; குறிப்பிட்டார். உலக…
-
78 தேசிய பாடசாலைளில் அதிபர் ஆசனம் காலி
விண்ணப்பங்கள் கோரப்பட்ட போதும் தேசிய பாடசாலைகள் 78 இல் அதிபர் வெற்றிடங்கள் நிரப்பப்படவில்லை என அகில இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2011 டிசம்பர் 2ம் திகதி தேசிய பத்திரிகைகளில் வெளியான விளம்பரத்தில் 78 தேசிய பாடசாலைகளுக்கு அதிபர் வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
-
ஓய்வூதியத்திற்கு விருப்பம் தெரிவிக்கும் கால எல்லை டிசம்பர் 31 வரை நீடிப்பு
விதவைகள், தபுதாரர்கள் மற்றும் அநாதைகள் ஓய்வூதியத்திற்கு விருப்புரிமை தெரிவிக்கும் கால எல்லை டிசம்பர் 31ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தலின்படி பெப்ரவரி 29ம் திகதியே விருப்புரிமை தெரிவிப்பதற்கான இறுதித் திகதியாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் வசதி கருதி இதற்கான கால எல்லை டிசம்பர் வரை நீடிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட செயலகங்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.