-
திருடர்களின் கைவரிசைகளும் கிலி கொள்ளும் பெண்களும்….
-MMS காத்தான்குடியில் அண்மைக்காலமாக திருடர்களின் திருட்டு நடவடிக்கைகளால் குறிப்பாக பெண்களும் சிறுவர்களும் பீதியடைந்து வீட்டுக்குள் ஒழிந்து இருக்கும் பரிதாப நிலைக்கு இன்று தள்ளப்பட்டிருக்கின்றனர். வியாபார நிமித்தம் வெளியூர்களில் தொழில் செய்கின்றவர்களின் வீடுகளும் மற்றும் வெளிநாடுகளில் இருப்போரின் வீடுகளும் அண்மைக்காலத்தில் இவ்வாறான களவு எனும் கொள்ளையில் இலக்கு வைக்கப்பட்டிருந்தது யாவரும் அறிந்ததே. அதுமட்டுமல்லாமல் ஊரிலும் தினமும் தொழிலுக்கும் உத்தியோகத்துக்கும் போய் வருவோரின் வீடுகளும் குறிப்பாக ஆண்கள் இல்லாத வீடுகளும், ஆண்களின் உதவி இல்லாத வீடுகளும் கள்வர்களின் கைவரிசைகளுக்கு இலக்குவைக்கப்பட்டு…
-
2000 மருத்துவ மாதுகளை சேவையில் இணைக்க அரசாங்கம் தீர்மானம்
அரசாங்க சுகாதார சேவையில் புதிதாக இரண்டாயிரம் பேரை மருத்துவ மாதுகளாகச் சேர்த்துக்கொள்ளுவதற்கு சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது. சுகாதார அமைச்சின் இம்முடிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார். அமைச்சரவையின் இந்த அங்கீகாரத்தின் அடிப்படையில் மருத்துவ மாதுகளைச் சேர்த்துக்கொள்வதற்கு விரைவில் விண்ணப்பம் கோரப்படும் எனவும் அவர் கூறினார்.
-
200க்கும் அதிகமான பணிப்பெண்கள் இலங்கை தூதரகத்தில் தஞ்சம்
ஜோர்தான் அரசுடன் இலங்கை நேரடி பேச்சுவார்த்தை உரிய தீர்வின்றேல் பணிப்பெண்களை அனுப்புவதற்கு தடை ஜோர்தானில் பணிபுரியும் இலங்கைப் பணிப் பெண்கள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணப்பது குறித்து அடுத்த வாரம் ஜோர்தானுக்கு சென்று பேச்சு நடத்த உள்ளதாகவும் இதற்கு தீர்வு ஏற்படாவிடின் ஜோர்தானுக்கு பணிப்பெண்கள் அனுப்புவதை தடை செய்ய உள்ளதாகவும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலனோம்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். வாய்மூல விடைக்காக ரஞ்சன் ராம நாயக்க எம்.பி.எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்…
-
இந்தோனேசியாவில் மாயமான ரஷ்ய விமானம்
(மறைந்த விமானத்தில் பயணித்த தனது உறவினரை நினைத்து அழுகையில்…) -MJ நேற்று மாலை 50 பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த ரஷ்யாவின் சுப்பர் ஜெட் விமானம் (Sukhoi Superjet 100) இந்தோனேசியாவின் மலைப்பகுதியில் காணாமல் போயுள்ளதாக அறியப்படுகிறது. இருள் மற்றும் கடும் காற்று காரணமாக வான் மூலமான தேடுதல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் தரைவழியான தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுகின்றன.
-
கிழக்கு மாகாணசபை ஜுன் மாதம் கலைக்கப்படலாம்! தேர்தல் செப்டம்பரில்?
-MJ கிழக்கு மாகாணசபை எதிர்வரும் ஜூன் மாதத்தில் எந்நேரமும் கலைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறியிருக்கின்றனர். இன்று அலரிமாளிகையில் கிழக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் இடம்பெற்றுள்ளது. முதலில் மாவட்ட ரீதியாகவும் பின்னர் மூன்று மாவட்டங்களையும் இணைத்து இக்கூட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
-
மர்ஹூம் அல்ஹாஜ் அபூபக்கர் மௌலவி அவர்கள்
-MJ மபாஸ் ஹஜ் நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல சமூக சேவையாளருமான அல்ஹாஜ் எம்.ஐ.எம் அபூபக்கர் மௌலவி அவர்கள் இன்று எம்மை விட்டும் மறைந்துவிட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். ஆரம்ப காலங்களில் கொழும்பில் இருக்கும் ஹஜ் முகவர்கள் ஊடாக காத்தான்குடியில் இருந்து ஹாஜிகளை புனித ஹஜ் யாத்திரைக்கும் உம்ராவுக்கும் அனுப்பி வந்தார். காத்தான்குடியில் இருந்து ஹஜ்ஜூக்கும் உம்ராவுக்கும் செல்லும் யாத்திரிகளுக்காக காத்தான்குடியில் முதன் முதலாக மபாஸ் ஹஜ் ட்ரவல்ஸ் என்ற பெயரில் குறுகிய வளத்துடன் தனது இல்லத்தில்…
-
தன்னம்பிக்கையும் கர்வமும்
(இன்றைய தினகரன் பத்திரிகையில் வெளிவந்துள்ள இந்த ஆக்கம் காலத்தின் தேவை கருதி இங்கு பிரசுரிக்கப்படுகிறது). தன்னம்பிக்கைக்கும் கர்வத் திற்கும் இடையே வித்தியாசம் நிறைய பேருக்குத் தெரிவ தில்லை. இரண்டுக்கும் இடையே நூலிழை வித்தியாசம் தான் இருப்பது போலத் தோன்றினாலும் அவை தரும் விளைவுகளில் மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள வித்தியாசம் இருக்கிறது. “என்னால் முடியும்” என்று நினைப்பது தன்னம்பிக்கை ‘என்னால் மட்டுமே முடியும்’ என்று நினைப்பது கர்வம். தன்னம்பிக்கை எல்லா சாதனைகளுக்கும் மூல காரணமாக உள்ளது. கர்வம்…
-
உலக சமாதானம் வேண்டி இலங்கையில் ஆசீர்வாத பெருவிழா
* ஆயிரம் பெளத்த பிக்குகள் பங்கேற்பு * சமாதானம் பற்றிய பெளத்த கோட்பாடுகள் உலக நாடுகளுக்கு அனுப்பிவைப்பு 2600 ஸ்ரீ சம்புத்தத்வ ஜயந்தி நிறைவை யொட்டி உலக பெளத்த சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள உலக சமாதானத்திற்கான ஆசிர்வாத பெருவிழா நேற்று கொழும்பில் ஆரம்பமானது. நேற்று 8ம் திகதி முதல் 11ம் திகதி வரை இலங்கையில் நடைபெறவுள்ள இவ்விழா நிகழ்வுகளில் 30 சர்வதேச நாடுகளின் பெளத்த மதத் தலைவர்கள் 500 பேரும் இலங்கையிலிருந்து ஆயிரம் பெளத்த பிக்குகளும் பங்கேற்கவுள்ளனர்.
-
பாசிக்குடா அபிவிருத்திப் பணிகளை டிசம்பருக்குள் பூர்த்தி செய்ய கோரிக்கை
கிழக்கு மாகாணத்தில் பிரசித்திபெற்ற பாசிக்குடா கடல் பிரதேசத்தின் உல்லாசத்துறையை அபிவிருத்தி செய்யும் அழகுபடுத்தல் செயற்திட்டம் இவ்வாண்டு டிசெம்பர் மாதம் முடிவிற்குள் பூரணப்படுத்தப்பட வேண்மென அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன முதலீட்டாளர்களைக் கேட்டுள்ளார். பாசிக்குடா கடல் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆராயும் விசேட மாநாடு இன்று செவ்வாய்கிழமை பாசிக்குடா உல்லாச விடுதியில் நடைபெற்றது.
-
அபூபக்கர் மௌலவி அவர்கள் காலமானார்கள்
அலி அக்பர் மொலவி என அழைக்கப்படும் மபாஸ் ஹஜ் நிறுவனத்தின் உரிமையாளரான அல்ஹாஜ் அபூபக்கர் மௌலவி அவர்கள் இன்று பிற்பகல் காலமானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். காத்தான்குடி இல் முதன் முறையாக தனது ஹஜ் நிறுவனத்தை ஆரம்பித்து ஊர் ஹாஜிகளுக்கு இலகுவாக ஹஜ் செய்வதற்கு வழி சமைத்தார். இவர் அப்போதைய united விளையாட்டு கழகத்தின் ஆரம்ப கால உறுப்பினராகவும் தலைவராகவும் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. அன்னாருக்கு அல்லாஹ் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்க அருள்…
-
காவத்தமுனை அல் – அமீன் வித்தியாலய மாணவர்கள் வகுப்புக்களை பகிஷ்கரித்து ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஓட்டமாவடி கல்வி கோட்டத்திலுள்ள காவத்தமுனை அல் – அமீன் வித்தியாலய மாணவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை வகுப்புக்களை பகிஷ்கரித்து; ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். இப்பாடசாலையில் காணப்படும் ஆசிரிய ஆளணி பற்றாக்குறை நிவர்த்தி செய்ய கோரியே மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பாடசாலை அதிபர் எம்.யூ.எம்.நசீர் தெரிவித்தார்.
-
ஶ்ரீலங்கா பிறீமியர் லீக் (SLPL) ஓகஸ்ட் 10ஆம் திகதி ஆரம்பிக்கிறது
இந்தியாவின் இந்தியன் பிறீமியர் லீக் போட்டிகள் போன்று வெளிநாட்டு வீரர்களை உள்ளடக்கிய டுவென்டி டுவென்டி தொடரொன்றை நடாத்த இலங்கைக் கிரிக்கெட் சபை தீர்மானித்திருந்தது. இதன்படி சிங்கப்பூரை மையமாகக் கொண்ட சமர்செட் பொழுதுபோக்கு நிறுவனத்துடன் இது தொடர்பான ஒப்பந்தத்தை இலங்கைக் கிரிக்கெட் சபை மேற்கொண்டிருந்தது.