WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஜனாதிபதிக்கு மகஜர் அனுப்ப காத்தான்குடியில் கையெழுத்து வேட்டை

    தம்புள்ள ஜும்-ஆ பள்ளிவாயல் அதே இடத்தில் இருக்க வேண்டுமெனவும் பல்லின பல்சமய நாடான இலங்கையில் சகல சமயத்தவர்களினதும் மத உரிமைகளை பாதுகாக்கக் கோரியும் தம்புள்ள பள்ளிவாயல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மகஜரொன்றை அனுப்புவதற்காக இன்று காத்தான்குடியிலுள்ள ஜும்-ஆ பள்ளிவாயல்களில் பொதுமக்களிடமிருந்து கையெழுத்துக்கள் பெறப்பட்டன. நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ஜனாதிபதிக்கு மேற்படி கோரிக்கைகளை முன்வைத்து அனுப்பவுள்ள இந்த மகஜரில் பொதுமக்கள் ஆர்வத்தோடு கையொப்பங்களை இட்டனர்.

  • இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான ரஷ்ய விமானம்: உடலங்கள் கண்டுபிடிப்பு.

    -MJ ஜகார்த்தா விமான நிலையத்தில்  தன் உறவுகளைப் பிரிந்த கவலையில்.. நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை இந்தோனேசியாவில் மறைந்ததாகத் தெரிவிக்கப்பட்ட ரஷ்யாவின் சுப்பர் ஜெட் விமானம் விபத்துக்குள்ளாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  • போக்குவரத்து அனுமதி பத்திரமின்றி மணல் ஏற்றிச் செல்ல அனுமதி

    காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கொண்டு செல்ல முடியும் போக்குவரத்து அனுமதி பத்திரமின்றி மணல் ஏற்றிச் செல்ல நேற்று முதல் அமுலு க்கு வரும் வகையில் அனுமதி வழங்கப் படுவதாக சுற்றாடல் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதற்கமைய, மணல் அகழ்வு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டவர்கள் காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையான காலப் பகுதிக்குள் மணல் ஏற்றிச்செல்ல முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.…

  • க.பொ.த. உயர்தரம்: தேசிய பாடசாலைகளிடையே மாணவர்கள் மாறிச்செல்ல தடை

    *அமைச்சரவை அங்கீகாரம் * சுற்றுநிருபம் வெளியாகியது *வசதி குறைந்த மாணவருக்கே சந்தர்ப்பம் *மீறினால் அதிபர்கள் மீது நடவடிக்கை க. பொ. த. உயர்தரம் கற்பதற்காக தேசிய பாடசாலைகளுக்கிடையே மாணவர்கள் இடம்மாறிச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன நேற்று தெரிவித்தார். இது தொடர்பாக சுற்றுநிருபம் வெளியிடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

  • கொடுங்கோல் ஆட்சியின் உச்சக்கட்டமே கிழக்கு மாகாணசபை கலைப்புக்கான முயற்சி: இரா.துரைரெத்தினம்

    ‘கிழக்கு மாகாண சபையைக் கலைக்க எடுக்கும் முடிவு பாசிச ஜனநாயக கொடுங்கோல் ஆட்சியின் உச்சக்கட்டமே’ என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஈ.ஆர்.எல்.எப்.முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண சபை விரைவில் கலைக்கப்படுவது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

  • இஸ்ரேலிய தூதரகம் அமைப்புக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கண்டனம்

    -MJ பலஸ்தீன தலைவர் மஹ்மூத் அப்பாஸ் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு அவர் மீண்டும் பலஸ்தீன் சென்ற ஒரு வாரத்துக்குள் இஸ்ரேலிய ஊடுறுவல் இலங்கையில் அதிகரித்து வருகின்ற இந்நிலையில் தற்பொழுது இஸ்ரேலியத் தூதரகத்தை இலங்கையில் அமைப்பதற்கு அரசு முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா தனது அமைப்பின் கண்டணத்தை பகிரங்கமாகத் தெரிவித்திருக்கின்றமை வரவேற்கத்தக்கது.

  • ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதான அபிவிருத்தி: ஓர் பார்வை: (படங்கள்)

    -படங்கள்: MTM. ரஸ்லான் படத்தினைப் பெரிதாகப் பார்ப்பதற்கு படத்தின் மேல் ‘கிளிக்’ செய்யவும் காத்தான்குடியின் மத்தியில் அமைந்திருக்கும் ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானம் சுமார் 30 வருட வரலாற்றைக் கொண்டமைந்த ஓர் மைதானமாகும்.

  • SLIF-UK நடாத்தும் சிறுவர்களுக்கான போட்டி- 2012

    தங்களது சிறுவர்களை போட்டிக்கு பதிவு செய்து கொள்வதற்கான இறுதித்திகதி இன்றாகும் -MJ Srilanka Islamic Forum (SLIF-UK)  ஏற்பாட்டில் ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற இருக்கும் சிறுவர்களுக்கான போட்டிகளுக்கு தங்களது சிறுவர்களைப் பதிவு செய்து கொள்வதற்கான இறுதித் திகதி இன்று  (10-05-2012) ஆகும். எனவே இதுவரைக்கும் தங்களது சிறுவர்களை போட்டிகளுக்கு பதிவு செய்யாதவர்கள் உடனடியாக  http://www.slif.org.uk எனும் இணையத்தளம் ஊடகவோ அல்லது  சகோதரர் ஐமன்  அவர்களை 07807733093 எனும் கைத்தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளுமாரும்…

  • பிறருக்காக துஆச் செய்தல்

    – மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ : பிறருக்காக செய்யும் துஆவின் சிறப்புகள் : எந்த ஒரு முஸ்லிமான அடியார், தம் சகோதரருக்காக மறைவில் (அவர் முன்னிலையில் இல்லாதபொழுது) துஆச் செய்கிறாரோ, அப்பொழுது அவருக்கு ஒரு மலக்கு, நீர் அவருக்காக கேட்ட நலவான விஷயங்கள் போன்றவை உமக்கும் உண்டு என்று கூறுவாரே தவிர வேறில்லை. (முஸ்லிம்) ஒரு முஸ்லிமான மனிதர், தம் சகோதரருக்காக மறைவில் செய்யும் துஆ ஒப்புக் கொள்ளப்பட்டதாகும். துஆச் செய்யும் அம்மனிதரின் சிரசின்(தலை) அருகில் ஒரு…

  • பாகிஸ்தான் T20 அணித்தலைவராக ஹபீஸ்

    -MJ பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் T20 போட்டிகளுக்கு தலைவராக முகம்மட் ஹபீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அண்மைக்காலமாக பாகிஸ்தான் T20 கிரிக்கட் அணிக்கு தலைவராக இருந்துவந்த மிஸ்பாஉல்ஹக் இடை நிறுத்தப்பட்டு இப்பதவி ஹபீஸ் இற்கு வழங்கப்பட்டுள்ளது. மிஸ்பாஉல் ஹக் தொடர்ந்தம் ஒருநாள், மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு தலைவராக இருப்பார் எனவும்  மேற்படி இரு போட்டிகளுக்கும் உப தலைவராக முகம்மட் ஹபீஸ் செயல்படுவார் எனவும் பாகிஸ்தான் கிரிக்கட் சபை அறிவித்துள்ளது. இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் உலகக் கிண்ணத் தொடருக்கு…

  • ரணில் நாளை மட்டக்களப்புக்கு விஜயம்

    நாளை வெள்ளிக்கிழமை  ஐக்கிய தேசிய கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க,  ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவருமான தயா கமகே உட்பட இன்னும் சிலர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்ட ஐ.தே.க. அமைப்பாளர் சசிதரன் இல்லத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல உறுப்பினர்களும் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

  • விலை உயர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

←Previous Page
1 … 1,269 1,270 1,271 1,272 1,273 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar