-
‘கோட்டபாயவின் போர்’ (‘Gota’s War’) எனும் நூல் நாளை வெளியீடு
கோட்டாபயவின் போர் என்ற பெயரில் “தி ஐலன்ட்” பத்திரி கையின் செய்தியாளர் சீ. ஏ. சந்திரபிரேம ஆங்கி லத்தில் எழுதிய நூல் நாளை 14 ஆம் திகதி வெளி யிடப்பட உள்ளது. இந்த நூலில் கோட்டாபயவின் கோணத்தில் விடுதலைப் புலிகளை தோற்கடிக்க மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் குறித்து விபரிக்கப்பட்டுள்ளது. இந்த நூல் வெளியீட்டு வைபவம் நாளை 14 ஆம் திகதி வோட்டர்ஸ் எஜ் (Waters Edge, Battaramulla) விடுதியில் நடைபெறவுள்ளதுடன் இதில் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி மஹிந்த…
-
பதினெட்டு வளைவும் அறியவேண்டிய தகவல்களும்
பெரும்பாலான வாகன ஓட்டுநர்கள் தங்கள் ஓட்டும் திறனை நிரூபிப்பதென்றால் அலாதிப்பிரியம். அவ்வாறானவர்கள் தங்கள் திறமையை நிரூபிப்பதற்குத் தேர்ந்தெடுப்பது 18 கொண்டை ஊசி வளைவுகளை. கண்டியையும் மஹியங்கனையையும் இணைக்கும் 18 கொண்டை ஊசி வளைவு கொண்ட வீதி, அனேக சாரதிகளுக்கு, மிகச் சவாலான அனுபவத்தைத் தந்திருக்கிறது. அனுபவம் இல்லாத சாரதிகள் இப்பாதை வழியாகச் செல்லவே விரும்புவதில்லை. காரணம் அதன் குறுகல் தன்மையும் அங்கிருந்து கீழே நோக்கினால் தெரியும் அதளபாதாளமும்.
-
கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் இம்முறையும் முஸ்லிம் முதலமைச்சர் வேட்பாளரை மையமாகக் கொண்டே களத்தில் இறங்குவதாகவும் இது தொடர்பாக அரச உயர்மட்டத்துடன் தாம் பேச்சு நடத்தியுள்ளோம் என்றும் மாகாண அமைச்சர் எம். எஸ். சுபைர் தெரிவித்தார். கடந்த முறை நாம் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டி யிட்டு கணிசமான பிரதிநிதிகளைப் பெற்றோம். எனினும் அரசுடனான இணக்கப்பாட்டின் பின்னர் பிள்ளையான் முதலமைச்சரானார். மாகாணசபையில் எமக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டது.
-
தன் சமூகத்திற்காக என்றும் குரல் கொடுக்கும் ரிஸாட் பதியுத்தீன்
தம்புள்ள பிக்கு மிகவும் கேவலமான முறையில் நடந்துகொண்டது போல் மன்னார் ஆயரும் நடந்துகொள்வதாகக் அமைச்சர் றிசாத் பதியுதீன் குற்றம் சாட்டியுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
-
மக்கள் எழுச்சியினால் தான் அரசாங்கத்தை மாற்ற முடியும்: மட்டக்களப்பில் ரணில்
மக்கள் எழுச்சியினால் தான் அரசாங்கத்தை மாற்ற முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்கப்பு மாவட்ட பிரதேச முக்கியஸ்த்தர்களுடனான சந்திப்பிபொன்று நேற்று வெள்ளிக்கிழமை மாலை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அரசரட்ணம் சசிதரன் தலைமையில் நடைபெற்றது. இந்த சந்திப்பிலேயே எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
-
குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாடு குறித்து கலந்துரையாடல்
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பெண்களைத் தலைமையாகக் கொணட குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துதல், அவர்களுக்கான தொழில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்திற்கும் கொழும்பு அபேக்சா நம்பிக்கை நிதியத்தினருக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று வெள்ளிக்கிழமை காலை கல்லடியில் நடைபெற்றது. கிழக்கு மாகாண முதலமைச்சரின் முன்னாள் செயலாளர் மாமாங்கராஜாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இச் சந்திப்பில், அபேக்சா நம்பிக்கை நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நில்கான் டி மெல், டிவா ஆனல்ட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-
PMGGயின் கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை பற்றிய அறிவித்தலை ஜும்ஆவின் பின்னர் அறிவிப்பு செய்வதற்கு சம்மேளனத் தலைவர் மறுப்பு
தம்புள்ளை பள்ளிவாயல் விவகாரம் தொடர்பாக PMGG தொடங்கி வைத்துள்ள கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை பற்றிய அறிவிப்புகளைச் ஜும்ஆ தொழுகையின் பின்னர் அறிவிப்பு செய்வதற்கு சம்மேளனத்தின் தலைவர் அனுமதி வழங்க மறுத்துள்ளார்.
-
5 ரூபா நாணயத்தில் சங்கிலி தயாரிப்பது குற்றம்
தகவல் தருமாறு பொலிஸார் கோரிக்கை ஐந்து ரூபா நாணயக் குற்றிகளைப் பயன்படுத்தி தங்கச் சங்கிலிக்குச் சமனான சங்கிலிகளைத் தயாரிப்பது தொடர்பான தகவல்கள் அறிந்திருப்பின், உடனடியாக பொலிஸ் திணைக்களத் தின் போலி நாணயம் தொடர்பான விசேட பிரிவுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். கொழும்பு பஸ்தரிப்பு நிலையங்கள் முதல், நடைபாதைவரையில் 5 ரூபா நாணயக் குற்றிகளில் தயாரிக்கப்பட்ட சங்கிலிகள் எனக் கூவியவாறு வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். கண்டி பல்லேகல பகுதியில் இந்தச் சங்கிலிகள் தயாரிக்கப்படுவதாகக் கூறுவதுடன், இவை கறுப்பதில்லை.
-
விளையாட்டு போட்டியில் மீராபாலிகா முதலிடம்
-MFS இவ்வாண்டுக்கான (2012) வலய மட்ட விளையாட்டுப் போட்டியில் காத்தான்குடி மட்/ மீரா பாலிகா தேசிய பாடசாலை அதிகூடிய புள்ளிகளைப் பெற்று பெண்கள் பாடசாலைகளில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளது. இதனை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற சாதனையாளர்களைக் கெளரவிக்கும் விழா நேற்று (10) காத்தான்குடி மீரா பாலிகா மண்டபத்தில் வித்தியாலய அதிபர் எம். எம். இஸ்மா லெப்பை தலைமையில் நடைபெற்றது. மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ். ஏ. நஸீரா சம்பியன்…
-
மட்டக்களப்பில் ரணில் வந்த வளாகத்தில் வெடிகுண்டு
மட்டக்களப்பு நகரில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வெள்ளிக் கிழமை மாலை கலந்து கொள்ளும் நிகழ்வோன்று ஏற்பாடு செய்யப்பட்ட கட்டிடத் தொகுதியில் குண்டொன்று கண்டு பிடிக்கப்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சி கூறுகின்றது. மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்ட ரணில் விக்கிரமசிங்க தனது கட்சி பிரதிநிதிகளையும் சிவில் சமூக பிரதிநிதிகளையும் தனித் தனியாக சந்தித்து மாவட்டத்தின் தற்போதைய நிலைமை குறித்து கேட்டறிந்தார்.
-
அமெரிக்க இராணுவப் பயிற்சிப் பள்ளியின் இஸ்லாம் பாடம் மீது விமர்சனம்
அமெரிக்காவின் மிக உயரிய இராணுவப் பயிற்சிப் பள்ளி ஒன்றில் இஸ்லாம் தொடர்பில் பயிற்றுவிக்கப்பட்டுவதந்த ஒரு பாடத் திட்டத்தை அமெரிக்காவின் மிக மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் கண்டித்துள்ளார். மாணவர் விரும்பினால் தானாகத் தேர்ந்தெடுத்து படிக்கும் வகையிலான இந்தப் பாடத் திட்டம் முற்றிலும் ஆட்சேபத்திற்குரியது என்றும், மத சுதந்திரம், கலாச்சார ரீதியான விழிப்புணர்வு போன்ற அமரிக்க விழுமியங்களுக்கு முற்றிலும் முரணானதாக அமைந்துள்ளது என்றும் இராணுவ ஊழியர்களுடைய கூட்டுத் தலைமையகத்தின் தலைவரான ஜெனரல் மார்ட்டின் டெம்ப்ஸி கூறினார்.
-
தகவல் தொழில்நுட்ப அறிவை பெருக்குவதற்கு அரசு நடவடிக்கை
இலங்கையை பொருளாதாரத் துறையிலும் கல்வித் துறையிலும் முன் னணிக்குக் கொண்டுவர வேண்டுமாயின் நம் நாட்டு மக்களின் தக வல் தொழில்நுட்ப அறிவை பெருக்குவது அவசியமாகும். தகவல் தொழில்நுட்பத்தின் அவசியத்தை பாமர மக்களிடையேயும் படிப்பறிவு டைய நகரப்புற மக்களிடையேயும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் இப்போது தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. 2016 ஆம் ஆண்டளவில் இலங்கையை ஆசியாவின் விந்தைக்குரிய நாடாக உயர்த்துவதற்கு தகவல் தொழில்நுட்ப அறிவு அவசியம் என் பதை உணர்ந்திருக்கும் அரசாங்கம், அந்த இலட்சியக் கனவை நிறை…