-
காத்தான்குடி பிரதான வீதியின் ஓர் அழகிய தோற்றம் (படங்கள்)
படங்கள்: MTM. ரஸ்லான் படங்களைப் பெரிதாகப் பார்ப்பதற்கு படத்தின்மேல் ‘கிளிக்’ செய்யவும்.
-
வாயிற்கதவில் கழுத்து இறுகி வீட்டுக் காவலர் பலி
தூர இயக்கு கருவி (Remote Controll) மூலம் இயக்கப்படும் வாயிற்கதவில் (Entrance Gate) கழுத்து இறுகி வீட்டுக் காவலர் ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று கனேமுல்ல, புலுகஹகொட பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.
-
‘கோல் பேஸ்’ சதுக்கத்தில் பிரமாண்ட இராணுவ அணிவகுப்பு ஒத்திகை நடைபெறுகிறது.
எதிர்வரும் மே 19ஆம் திகதி காலி முகத்திடலில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கலந்து கொண்டு பிரமாண்ட அணிவகுப்பைப் பார்வையிடுவார். இதற்கான பிரமாண்டமான இராணுவ மற்றும் இராணுவத்தளபாட அணிவகுப்பு ஒத்திகைகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன.
-
பல்கலைக்கழக மாணவர் தெரிவு முறையை மீள்பரிசீலனை செய்ய குழு
பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை அனுமதிக்கும் விடயம் தொடர்பாக தற்போதைய முறையை மீள் பரிசீலனை செய்வதற்காக குழு ஒன்று நியமிக்கப்படும். இது தொடர்பாக ஜனாதிபதியின் பணிப்புக்கு ஏற்ப, ஆலோசிப்பதாக உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்கா தெரிவித்துள்ளார். அமைச்சர் விசேட அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்.
-
நேபாளத்தில் விமான விபத்து: 15 பேர் பலி
நேபாளத்தின் வடக்கே விமானநிலையமொன்றில் தரையிறங்க முற்பட்ட விமானமொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 21 பேரில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உயிர்தப்பிய 6 பேரும் போக்கரா நகர மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களில் பலர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கல்முனையில் ஆர்ப்பாட்டம்
கடந்த இரண்டு மாதங்களின் பின்னர் சுகயீன விடுமுறையில் இருந்து இன்று திங்கட்கிழமை வைத்தியசாலைக்கு கடமைக்குத் திரும்பிய நிலையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலை கணக்காளருக்கு எதிராக வைத்தியர்கள் தாதியர்கள்ள் மற்றும் ஊழியர்கள் காலை 10:15 மணியளவில் வைத்தியசாலையின் முன்னால் ஒன்று திரண்டு கணக்காளரை இடமாற்றுமாறு சுலோகங்களை தாங்கியவாறு பல கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-
“தமிழ் மெகா சீரியல்களுக்கு மலேசியா தடைவிதிக்க வேண்டும்”
(BBC Tamil இணையத்தளத்தில் வெளியாகி இருக்கும் இவ் ஆக்கம் உண்மையில் வரவேற்கத்தக்கது. மலேசிய மக்கள் சிந்திக்கிறார்கள். இலங்கை முஸ்லீம்கள் சிந்திப்பார்களா?) -BBC-Tamil செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளில் வரும் தமிழ் நெடுந்தொடர்கள் மலேசிய தமிழ் சமூகத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம், இத்தொடர்கள் ஒளிபரப்பப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி மலேசிய அரசாங்கத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது. நெடுந்தொடர்களில் வரும் காட்சிகளும் கதையும் பலவிதமான கலாச்சார சீரழிவிற்கு காரணமாக அமைந்துள்ளது என்று தாங்கள் தமிழ் மக்களிடையே…
-
1000 பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டம்
வறிய மாணவர்களுக்கு விசேட புலமைப்பரிசில் -கல்வி அமைச்சர்: ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்படும் 50 மாணவர்களுக்கு விசேட புலமைப்பரிசில் திட்டமொன்றை அறிமுகப்ப டுத்துவது தொடர்பில் யோசனைகள் முன்வைக்கப்ப ட்டிருப்பதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன கூறினார். வறுமையான குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இப்புலமைப் பரிசில்களை வழங்கவென பல புண்ணியவான்கள் முன்வந்துள்ளார்களெனவும் அமைச்சர் கூறினார். இப்புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படும் மாணவர்கள் தனவந்தர்களால் முழுமையான கல்வி நடவடிக்கைகளுக்குமென பொறுப்பேற்கப்படுவர். இம்மாணவர்கள் ஆயிரம்…
-
இங்கிலாந்து பிரிமியர் லீக்: 44 வருடங்களின் பின் மன்செஸ்டர் சிட்டி சம்பியன்
சமபுள்ளிகளைப் பெற்றும் மன்செஸ்டர் யுனைடட் 2ம் இடம்: லிவர்பூல், செல்சி பின்னடைவு: நியூகாஸ்டில் முன்னேற்றம் -MJ இங்கிலாந்து மக்களையும் உலக இரசிகர்களையும் உதைப்பந்தாட்டத்தால் வருடந்தோரும் மகிழ்ச்சிப்படுத்திவரும் இங்கிலாந்தின் பிரிமியர் லீக் (EPL – BARCLAYS PREMIER LEAGUE) நேற்று 13-05-2012 ஞாயிறுடன் இவ்வருடத்துக்கான சுற்று (2011-2012) முடிவுக்கு வருகின்றது.
-
‘Z’ புள்ளி அளவீட்டு முறையில் மீண்டும் மாற்றம்
சென்றவருடம் இரு வேறு வகையான பாடத்திட்டங்களின் கீழ் க.பொ.த. உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான இஸட் (Z) புள்ளியை கணிப்பதற்கான அளவீட்டு முறைமையை மீண்டும் மாற்றுவதற்கு உயர் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதனால் அடுத்த வருட பல்கலைக்கழக கல்வியாண்டுக்கு மாணவர் அனுமதி மேலும் தாமதமாகலாம் என கருதப்படுகிறது. புதிய பாடத்திட்டத்தின் கீழும் மற்றும் பழைய பாடத்திட்டத்தின் கீழும் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு அனுமதிப்பதற்கு பொதுவான கணிப்பு முறைமையனெர்றை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உருவாக்கியது. எனினும் இதற்கு…
-
வாழைச்சேனையில் சிறுவனைக் கடத்தியவர்கள் கைது
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சச்சியார் வீதியில் 14 வயது சிறுவன் ஒருவரை கடத்திய நால்வர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் சிலாபத்தைச் சேர்ந்த இரண்டு சிங்களவர்களும் வழைச்சேனை கல்குடா பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு தமிழர்களுமே இக்கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்.
-
துபாயிலிருந்து கொழும்புக்கான உல்லாச பயணக் கப்பற் சேவை
டீத்தெம் டிரவல்ஸ் ஸ்ரீலங்கா மற்றும் ஜேர்மனியின் முன்னணி உல்லாசப் பயண நிறுவனமான FTI குழுமம் ஆகியன இணைந்து எதிர்வரும் குளிர்காலத்தில் மஸ்கட், மும்பாய், கோவா மற்றும் கொச்சி இடைத்தங்கல்களுடன், துபாய் மற்றும் கொழும்புக்கிடையிலான உல்லாசப்பயண கப்பற் போக்குவரத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளன. இதன் மூலம் நான்கு மாத காலத்தில் கொழும்பு துறைமுகத்துக்கு ஆஸ்திரியா, ஜேர்மன் மற்றும் சுவிஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 4000 உயர் வாடிக்கையாளர்களை தொடர்ச்சியாக கொண்டு வரும் முதலாவது உல்லாசப் பயண கப்பற் சேவையாக பிஹியி…