-
மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள்
தேசிய போக்குவரத்துச் சபையினரால் மட்டக்களப்பு மாவட்டத்தில் போக்குவரத்து வசதியற்ற மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன. இது தொடர்பான நிகழ்வு நேற்று ஆரையம்பதியில் நடந்தது. இதில் தனியார் போக்குவரத்து அமைச்சர் சி. பி. ரத்நாயக்க மாணவ, மாணவியருக்கான துவிச்சக்கர வண்டி யினை வழங்குகிறார். (தினகரன்).
-
‘கோல் பேஸ்’ இல் தொடரும் இராணுவ ஒத்திகை நிகழ்வுகள் (படங்கள்)
தமிழீழ விடுதலைப்புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இம்மாதம் 18ஆம் திகதியுடன் மூன்று வருடங்களாகின்றன. இதற்கான வெற்றிக் கொண்டாட்ட ஏற்பாடுகளை அரசாங்கம் தற்போது மேற்கொண்டு வருகின்றது.
-
சவூதி அரேபிய வாகன விபத்தில் இலங்கையர் பலி
-Tamilmirror சவூதி அரேபியாவின் றியாத் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற இவ்விபத்தில், அட்டாளைச்சேனை கோணாவத்தையைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான சுலைமாலெப்பை அப்துல் காதர் (வயது 52) என்பவரே உயிரிழந்தார்.
-
இறந்த கோழிகள் மற்றும் பழுதடைந்த உணவுகளை விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை
இன்று காலை ஏறாவூரில் சுகாதார உத்தியோகத்தர்களின் திடீர் பரிசோதனை ஒன்று மேற்கொள்ளப்பட்டது. ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.எம். தாரிக்கின் ஆலோசனையின் பேரில் இடம்பெற்ற இத் திடீர் சுற்றிவளைப்பில் மேற்பார்வைச் சுகாதாரப் பரிசோதகர் எம்.எச்.எம். பழீல் சுகாதாரப் பரிசோதகர்களான எஸ். சந்திரசிறி, யூ.எல். முஹம்மட் ஜின்னா ஆகியோரும் பங்கெடுத்திருந்தனர். உணவகங்கள், பலசரக்குக் கடைகள், பூட் சிற்றிகள், இறைச்சி விற்பனை நிலையங்கள் என்பனவற்றில் இந்தத் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது மனிதப்பாவினைக்கு உதவாத பழுதுபட்டுப்போன சோறு, இடியப்பம், பராட்டா,…
-
முஸ்லிம்கள் தாக்கப்பட்ட வேளைகளிலெல்லாம் கூட்டமைப்பும் கருணாநிதியும் கண்டிக்காதது ஏன்?
மீள்குடியேற்ற செயற்பாடுகள் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி மாவை சேனாதிராஜா பாராளுமன்றத்தில் முன் வைத்த ஒத்திவைப்பு வேளை பிரேரணை க்கு பதிலளித்து ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி. ஆற்றிய உரை. கெளரவ தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே, எமது அன்புக்குரிய நண்பர் Senior Member மாவை சேனாதிராஜா அவர்கள் இச்சபையில் முன்வைத்துள்ள பிரேரணையின் ஆரம்பத்திலே, “சொல்லப்பட்ட ஆயுதப் போராட்டம் நடைபெற்ற பொழுது” எனக் குறிப்பிட்டார். அவர்கள் ஆயுதப் போராட்டம் நடைபெற்றது. தாம் ஆயுதம் தூக்கி னார்கள் என்பதை…
-
ஜனாஸாக்களுக்கான கபன் வங்கி கொழும்பில்
ஜனாஸாக்களுக்கான கபன் வங்கி கொழும்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இது தொடர்பான நிகழ்வில் பிரதி அமைச்சர் பசீர் சேகுதாவூத் சங்கத்தின் தலைவர் எம். அஷ்ரப் உசைனுக்கு கபன் சீலைகளை கையளிக்கிறார்.(தினகரன்)
-
யாழ்-பலாலி ஆசிரியர் கலாசாலை மூடப்படுகிறது.
இலங்கையின் கல்வி வரலாற்றில் ஓர் மைல்கல்லாக இருந்த யாழ். பலாலியில் 50 வருடங்களாக இயங்கி வந்த பலாலி ஆசிரியர் கலாசாலை முற்றாகப் மூடப்பட்டுள்ளது. தமிழ் கல்விச் சமூகத்திற்கு அளப்பரிய சேவையாற்றிய பலாலி ஆசிரிய கலாசாலை மூடப்பட்டமையானது தமிழ் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டில் பாதிப்புக்களை ஏற்படுத்துமென கல்விச் சமூகம் கவலை வெளியிட்டுள்ளது. கடந்தகால அனர்த்தங்களினால் சொந்த இடத்திலிருந்து இடம் பெயர்ந்து பல்வேறு இடங்களில் இயங்கி இறுதியாக தற்போது திருநெல்வேலியில் தற்காலிகமாக இயங்கி வந்தது.
-
திண்மக்கழிவகற்றலுக்காக மேற்கொள்ளப்பட்ட வசூல்: வரவு செலவு விபரம்
காத்தன்குடியின் திண்மக்கழிவு அகற்றும் முகாமைத்துவத் திட்டத்திற்கான, நிலக் கொள்வனவுக்காக பொதுமக்கள் தங்களது பள்ளவாயல் ரீதியாக ஒவ்வொரு குடும்பங்களில் இருந்தும் தலா ரூபா 500.00 காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்துக் கொடுத்து வந்தமை யாவரும் அறிவோம். பொதுமக்களால் வசூலிக்கப்பட் இப்பணம் பள்ளிவாயல் ரீதியாக சம்மேளனத்துக் கையளிக்கப்பட்டிருந்தது. அதன் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.
-
“கோட்டாவின் யுத்தம்“ (Gota’s War) நூல் வெளியீடு
சி.ஏ.சந்திரபிரேமவினால் எழுதப்பட்ட “கோட்டாவின் யுத்தம்“ (Gota’s War) என்ற நூல் “இலங்கையில் புலிப் பயங்கரவாதிகளின் பிழிவு“ என்னும் அடைமொழியுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று மாலை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் படை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
-
டுபாயில் தங்கம், பணம் திருடிய இலங்கை பெண்ணுக்கு 6 மாத சிறை
டுபாயில் தான் பணிபுரியும் வீட்டில் பொருள் கொள்ளையில் ஈடுபட்ட இலங்கை பணிப்பெண் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. வழங்கப்பட்டுள்ள 6 மாத கால சிறை தண்டனை முடிந்ததும் குறித்த இலங்கைப் பெண் நாடு கடத்தப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் 15 நாட்களுக்குக்குள் தன்மீதான சிறை தண்டனையை எதிர்த்து மேன்முறையீடு செய்ய குறித்தப் பெண்ணுக்கு வாய்ப்புள்ளதென டுபாய் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
நாடெங்கிலும் தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம்
நாடெங்கிலும் தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் நேற்று முதல் இம் மாதம் 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை தீவிரமாக அமுலாக்கப்படுகிறது. நுளம்பினால் ஏற்படும் டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்கள் இன்று நாடெங்கிலும் பரவி மக்க ளுக்கு பேராபத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பதனால் இந்த நுளம் புத் தொல்லைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டு மென்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தனது அதிகாரி களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நுளம்பு ஒழிப்பு சட்ட நடவடிக்கைகளை கடுமையாக நடைமுறைப்…
-
இலங்கையர்களுக்கு மேலும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள்
இலங்கையர்களுக்கு தொடர்ந்தும் அதிக வேலை வாய்ப்புக்களை வழங்க இத்தாலி, ஈராக், குவைத் மற்றும் தென் கொரிய அரசாங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளனவென வெளிநாட்டு வேலைவாய்ப்பு நலனோம்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். இதற்கென, மேற்படி நாடுகளுடன் செய்து கொள்ளப்பட்டிருக்கும் ஒப்பந்தங்கள் நீடிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் டிலான் சுட்டிக்காட்டினார். இதேவேளை இலங்கை ஆண்களுக் கென அதிக வேலை வாய்ப்பினை பெற்றுக் கொள்ளவும் அதிக சம்பளத்துடன் கூடிய தொழில்களுக்கு இலங்கையர்களை அமர்த்துவது தொடர்பிலும் அந்நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சு நடத்தவிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.