-
பகிஸ்கரிப்பு போராட்டம் நிறைவு
கிழக்கு பல்கலைகழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர்கள் கடந்த 15 நாட்களாக மேற்கொண்ட வகுப்பு பகிஸ்கரிப்பு போராட்டம் நிறைவுபெற்றுள்ளதாக பல்கலைகழக மாணவர் சங்க தலைவர் எஸ்.சிவா தெரிவித்தார். உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்காவுடன் நேற்று கொழும்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து போராட்டம் நிறைவுபெற்றதாக அவர் தெரிவித்தார்.
-
கடந்த 14ம் திகதி ஆரம்பமான ஒத்திகை இன்றுடன் நிறைவு: யுத்த வெற்றி விழா கொண்டாட்டம் நாளை
அணி வகுப்பில் இராணுவம், கடற்படை, விமானப் படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த 13,680 வீரர்கள் பங்கேற்பு! -MMS இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியின் மூன்றாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெற்றி விழா அணிவகுப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் கொழும்பு காலி முகத்திடலில் சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு கோலாகலமாக இடம்பெறவுள்ளது.
-
நேற்று மரணமான இலங்கை ரக்பி வீரர் வஸீம் தாஜுதீன்
-MMS கொழும்பு – 06, வெள்ளவத்தை, முருகன் வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய மொஹமட் வஸீம் தாஜுதீனின் எனும் இலங்கை தேசிய ரக்பி அணியின் வீரர் நேற்று நாரஹன்பிட்டியவில் இடம்பெற்ற விபத்தில் கருகிய நிலையில் சடலமாக மீட்டெடுக்கப்பட் டுள்ளார். சாலிகா மைதானத்திற்கு அருகிலுள்ள பார்க் வீதியில் நேற்று அதிகாலை 12.50 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. சென்தோமஸ் கல்லூரியின் முதல் நிலை ரக்பி அணிக்காக விளையாடிய தாஜுதீன் 2003 ஆம் ஆண்டில் கல்லூரி அணியின் உப…
-
ஹஜ் யாத்திரை காலத்தில் விசேட விமான சேவை
இம்முறை ஹஜ் யாத்தி ரையை மேற் கொள்ளும் இலங்கை முஸ்லிம்களின் நலன்களைக் கருத்திற் கொண்டு ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் ஐந்து அல்லது ஏழு விமானங்களை விஷேட சேவையில் ஈடுபடுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன, ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரதம அலுவலர் ஜி. பி. ஜயசேன ஆகியோருடன் நடாத்திய பேச்சுவார்த் தைகளின் அடிப்படையில் இந்த இணக்கப்பாடு காணப்பட்டிருப்பதாக அரச ஹஜ் குழுவின் இணைத்தலைவரும், பதிலமைச்சருமான ஏ.ஆர்.எம். அப்துல்…
-
மட்டக்களப்பு கோட்டையை கலாசார நிலையமாக மாற்றுவது குறித்து ஆராய்வு
மட்டக்களப்பு கோட்டையை பாதுகாத்து சுற்றுலா துறைக்கு பயன்படும் வகையில் கலாசார நிலையமாக மாற்றுதல் தொடர்பான ஆலோசனை கலந்தரையாடல் ஒன்று இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு வாவி சுற்றாடல் கற்கை நிலையத்தில் நடைபெற்றது. பாலமீன்மடுவில் உள்ள இக்கற்கை நிலைய கேட்போர்கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலை நகர திட்டமிடல் கற்கை நிலையத்தினருடன் சுற்றாடல் திட்டமிடல் சேவைகள் நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
-
அர்ஷின் கீழ் நிழல் பெறும் அந்த ஏழு கூட்டத்தினர்
– மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ : அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலுமே இல்லாத நாளில் அல்லாஹ் ஏழு கூட்டத்தாருக்கு மட்டும் அர்ஷின் நிழலில் நிழல் கொடுப்பான். நீதியான அரசன், அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்த (ஊரி திளைத்த) வாலிபன், பள்ளியோடு உள்ளம் தொடர்புள்ள மனிதன், இருவர் அல்லாஹ்விற்காக நேசித்து ஒன்றிணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள், நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபச்சாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகின்றேன் என்று கூறிய(ஒதுங்கிக் கொண்ட)வர், வலது கரம் கொடுக்கும்…
-
சரத் பொன்சேகாவின் விடுதலைச் செய்திகேட்டு தெற்கில் மக்கள் மகிழ்ச்சி!
சுமார் 3 வருடங்களாக சிறையிலிருக்கும் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதான செய்தியை அடுத்து தெற்கின் பல பகுதிகளிலும் பொதுமக்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அம்பலாங்கொடை, பட்டபொல, எத்கந்துர உள்ளிட்ட பல பகுதிகளிலுமுள்ள பொதுமக்களே இவ்வாறு பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியுள்ளதாக அறியப்படுகிறது.
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் கைத்தொழிற்துறையை தேசியமயமாக்கும் திட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கைத்தொழில்துறையை தேசிய மயப்படுத்துவதற்காகவும் மாவட்டத்தில் உள்ள கைத்தொழிலாளர்கள் சிறந்த தொழிற்துறையினை மேற்கொள்வதற்குமான வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்குமான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் சம்மேளனமும் கிழக்குப்பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடமும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டன.
-
இரட்டைப் பிரஜா உரிமை!
-அமைச்சரவை தீர்மானம் வெளிநாடுகளில் வசிப்பதன் மூலம் இலங்கை பிரஜா உரிமையை இழந்தவர்களுக்கு கடல் கடந்த இலங்கையர்கள் என்ற அடிப்படையில் இரட்டைப் பிரஜா உரிமையை வழங்கவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அரச பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமர்பித்த அமைச்சரைவப் பத்திரத்திற்கு ஏற்ப இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
-
பாடசாலை மாணவர்களுக்கான விசேட தகவல் தொழில்நுட்ப திட்டம்
நாட்டின் அனை த்து பாடசாலை மாணவர்களுக்கும் சிறந்த தகவல் தொழில்நுட்ப அறி வினை பெற்றுக் கொடுக்கும் வகையில் விசேட பாடசாலை தகவல் தொழில்நுட்ப திட்டமொன்று இவ்வருடம் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் வருடமொன்றுக்கு ஒரு பில்லியன் ரூபா செலவில் 10 ஆயிரத்துக்கு அதிகமான கணினிகள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.
-
ஹோமியோபதி வைத்தியத்துறை: இந்திய பல்கலைக்கழகங்களில் இலங்கை மாணவருக்கு பட்டப்படிப்பு
இந்தியாவில் ஆயுர்வேதம், யூனானி, சித்த வைத்தியம் மற்றும் ஹோமியோபதி வைத்தியத் துறைகளில் பட்டப்படிப்பு, பட்டபின் படிப்பு மற்றும் கலாநிதி பட் டப்படிப்புகளை புலமைப்பரிசில் அடிப்படையில் பெறுவதற்கு இலங்கை மாணவ, மாணவியரிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 2012-2013ம் கல்வி ஆண்டிற்கு இந்த மாணவர்கள் சேர்த்து கொள்ளப்படுவார்கள். இந்திய அரசாங்கம் இவ்விதம் 10 புலமைப் பரிசில்களை மாத்திரம் வழங்க உள்ளது. திறமை, கல்வித்தகைமை அடிப்படையிலேயே மேற்படி 10 பேர் தெரிவு செய்யப்பட வுள்ளனர். இந்த மாணவர்களை தெரிவு செய்யும் பணியை…