-
கம்பஹாவில் 18 பாடசாலைகளின் அதிபர்களுக்கு எதிராக வழக்கு
டெங்கு நுளம்பு பெருகுவதற்கு ஏற்ற சூழலை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கம்பஹா மாவட்டத்தில் உள்ள 18 பாடசாலைகளின் அதிபர்களுக்கு எதிராக வழக்குத் தொடருவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. பொரளையிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மே மாதத்தில் டெங்கு நுளம்பு பெருக்கம் தொடர்பாக கம்பஹா மாவட்டத்தில் நடாத்திய ஆய்வின் அடிப்படையிலேயே இப்பாடசாலைகளுக்கு எதிராக வழங்கு தாக்கல் செய்வதற்கு சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது.
-
தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதலாவது வர்ண மாலை நிகழ்வுகள்
-MMS தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் 7வது பொதுப் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை (19) ஒலுவில் வளாகத்தில் வேந்தர் பேராசிரியர் அச்சி எம். இஸாக் தலைமையில் நடைபெற்றது. முதலாவது வர்ண மாலை விளையாட்டுத்துறை உயர் விருது வழங்கும் நிகழ்வுவும் நேற்று சனிக்கிழமை மாலை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
-
கட்டார் சென்ற ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு!
கட்டாருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு கட்டார் நாட்டில் அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. ‘டோஹா பொருளாதார மன்றத்தின் நிகழ்வில் கலந்து கொள்ள சென்றிருக்கும் ஜனாதிபதி அவர்கள் அந்நாட்டு உயரதிகாரிகளுடனும் இலங்கை சிறுவர்களுடனும் காணப்படுகிறார்.
-
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு விழா
முதலாம்நாள் நிகழ்வுகள்- படங்கள் (சனிக்கிழமை) தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு விழா நேற்று சனிக்கிழமை ஒலுவில் வளாக பல்கலைக்கழக பூங்காவில் நடைபெற்றது. வேந்தர் பேராசிரியர் ஏ.எம்.இஸ்ஹாக் தலைமையில், பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் முன்னிலையில் நடைபெற்ற இப்பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
-
விசித்திரமான எரிபொருள் இறக்குமதியும் இழக்கப்படும் பல கோடி ரூபாய்களும்!
‘இந்த எண்ணெய் இறக்குமதியால் நாட்டுக்கு 14 கோடி நட்டம். அமைச்சர் கூறும்படி குறித்த இறக்குமதி நிறுவனத்தில் இருந்து கிடைத்த கழிவின் பின்னரும் 10 கோடி ரூபா நட்டம். கடந்த வருடம் தரமற்ற பெற்றோல் இறக்குமதியால் 49 கோடி ரூபா நட்டம்’ விமானத்திற்கு பயன்படுத்தும் எண்ணெயை கொண்டு குப்பி லாம்பு எரியவைக்கும் அபிவிருத்தி அடைந்த நாடு இலங்கை மாத்திரமே என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. அக்குரஸ்ஸையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர்…
-
UEFA சம்பியன் கிண்ணம்: செல்சி அபார வெற்றி!
-MJ நேற்றிரவு ஜேர்மனியின் மியூனிச் நகரில் இடம்பெற்ற ஐரோப்பா உதைப்பந்தாட்டக் கழகங்களுக்கான (UEFA) சம்பியன் போட்டியின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் ஜெர்மனியின் முன்னணிக் கழகமான பேயன் மியூனிச் மற்றும் இங்கிலாந்தின் முன்னணிக் கழகங்களுள் ஒன்றான செல்சி ஆகிய அணிகள் இறுதிப்போட்டியில் களமிறங்கி இருந்தன.
-
முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது அதற்கெதிராக குரல் கொடுத்தவன் நான்
மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் மன்னார் மாவட்டத்தில் அரசாங்க காணிகளை சிலர் ஆக்கிரமிப்பதையே நான் எதிர்க்கின்றேன். முஸ் லிம்கள் தமது சொந்தக் காணிகளில் மீள்குடியேறுவதை நான் எதிர்க்கவில்லை. முஸ்லிம்கள் வடக்கிலிருந்து புலிகளால் வெளியேற்றப்பட்ட போது அதற்கு எதிராக குரல் கொடுத்தவனும் நானே என்று மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார். மன்னார் மாந்தை மேற்குப் பிரிவைச் சேர்ந்த விடத்தல் தீவு முஸ்லிம்கள் அரச அங்கீகார மின்றி சன்னார் கிராமத்திலுள்ள காணிகளை தமது சொந்தப் பாவனைக்கெனக் கூறி ஆக்கி…
-
கிழக்கு மாகாண சபை தேர்தலும் தமிழ் பேசும் தமிழ்-முஸ்லிம் மக்களும்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெகு விரை வில் அதற்கான அறிவிப்பு உத்தியோக பூர்வமாக விடுக்கப்படவுள்ளது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்படலாம் என்னும் செய்தி செவி வழியாகப் பரவியதுமே அரசியல் கட் சிகள் பலவும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்து விட்டன. இப்போது அது ஓரளவு உறுதியாகிவிட்டதால் ஏற்பாடுகள், பேச்சுவார்த்தைகள், கூட்டு முயற்சிகள் என்று தேர்தல் சூடு பிடித்துள்ளதைக் காண முடிகிறது. கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் அது மூவின மக்களும் வாழும் ஒரு…
-
யுத்த வெற்றியின் 3வது வருட நிகழ்வு:
-MMS இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கான யுத்தம் நிறைவடைந்து மூன்றாம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று சனிக்கிழமை காலை 8 மணிக்கு கொழும்பு, காலி முகத்திடலில் இடம்பெற்றது. இதன்போது முப்படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்பு படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் அணிவகுப்பும் இடம்பெறவுள்ளது. அத்துடன், வெற்றிக்கான 21 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
-
முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளிவாசல் நிர்வாக சபைத் தெரிவு மீண்டும் குழப்பத்தில் முடிவு!!
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் கருத்துக்கமைய முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நவவியும் செயற்பட்டதாகக் குற்றச்சாட்டு! ஜமாஅத்தார் சங்கம் நீதிமன்றம் சென்று நியாயம் கேட்கப் போவதாகவும் அறிவிப்பு!!! காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளிவாசல் நிர்வாகிகளைத் தெரிவு செய்வதற்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திpணைக்களத்தினால் இன்று 18ம் திகதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்த வாக்கெடுப்பு அறிவிக்கப்பட்டவாறு நடைபெறவில்லை. இன்றும் குழப்பமே முடிவாக அமைந்தது.
-
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 20,000 வீடுகள்
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கென இவ்வருட இறுதிக்குள் 20,000 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமல் பெரேரா தெரி வித்தார். மஹிந்த சிந்தனை எதிர்காலத் திட்டம் கருத்திட்டத்தின் கீழ் தற்போது 20 சிறிய நகரங்கள் அபி விருத்தி செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், கொம்ப னித்தெருவில் உடைக்கப்பட்ட வீடுகளுக்குப் பதிலாக 436 வீடு கள் நிர்மாணிக்கப்பட்டு வழங் கப்படுமெனவும் தெரிவித்தார்.
-
இன்று யுத்த வெற்றிவிழா: ஜனாதிபதி தலைமை
13,680 வீரர்கள் பங்கேற்பு முப்படை வீரர்கள், பொலிஸார் அணிவகுப்பு விமானப்படை, கடற்படை போர் கலங்கள் சாகசம் யுத்த வெற்றியின் மூன்றாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெற்றி விழா அணிவகுப்பு மற்றும் தேசிய படை வீரர்கள் நினைவு தின நிகழ்வு வைபவங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று கொழும்பில் கோலாகலமாக நடைபெறுகிறது.