-
கட்டார் ‘பேர்ள்’ நிறுவனத்தில் ஜனாதிபதி
கட்டார் நாட்டில் நிர்மானத்துறையில் மிகப்பிரபல்யம் வாயந்த நிறுவனமான பேர்ள் நிறுவனக் கட்டடத் தொகுதிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று விஜயம் செய்து பார்வையிட்டார். இங்கு காணப்பட்ட பல புதிய தொழில் நுட்பங்கள் குறித்து அங்கிருந்த நிபுணர்களுடன் ஜனாதிபதி அலவலாவினார். ஏ.எச்.எம்.பௌசி பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ். ரவூப் ஹகீம் ரிஷாரட் பதியதீன் பைஸர் முஸ்தபா ஜனாதிபதி செயலாளர் மற்றும் கட்டாருக்கான இலங்கைத் தூதுவர் உட்படப் பலர் ஜனாதிபதியூடன் கலந்துகொண்டனர்.
-
தமிழ் மொழி தினப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் முதலாமிடம்
கிழக்கு மாகாண தமிழ் மொழி தினப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் 158 புள்ளிகளை பெற்று முதலிடத்தினை பெற்றள்ளது. அத்துடன் 136 புள்ளிகளை பெற்று திருகோணமலை மாவட்டம் இரண்டாமிடத்தையும் 130 புள்ளிகளை பெற்று கல்முனை கல்வி மாவட்டம் மூன்றாமிடத்தையம் பெற்றுள்ளது. கிழக்கு மாகாண தமிழ் மொழி தினப்போட்டி 20, 21 திகதிகளில் திருகோணமலை உவர் மலை விவேகானந்தர் கல்லூரியில் நடைபெற்றது.
-
மும்மொழி வலயங்களாக 30 இடங்கள் அடையாளம்
‘குறிப்பாக புகையிரத நிலையங்களில் மேற்கொள்ளப்படும் அறிவித்தல்களை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் மேற்கொள்வதற்கும், பொலிஸ் நிலையங்களில் தமிழ் தெரிந்த அதிகாரிகள் அல்லது தமிழ் பேசக்கூடிய சிங்கள அதிகாரிகளை பணிக்கு அமர்த்துவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம்’. சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து மாவட்டங் களிலும் மொழிப் பிரச்சினை களைக் கையாள்வதற்கு சமூக மேம்பாட்டு உதவுனர்கள் நியமிக்கப்படவிருப்பதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணய கார தெரிவித்தார். கூடிய விரைவில் அனைத்து…
-
சரத்பொன்சேகா தனது குடும்பத்துடன்
-MMS நேற்று விடுதலையான முன்னால் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா அவர்கள் சுமார் 3 வருடங்களின் பின் கொழும்பிலுள்ள தனது வீட்டில் தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக உணவு பரிமாரும் ஓர் காட்சி.
-
கடந்தகால பரீட்சைகளின் வினா விடைகள் அடங்கிய நூல் வெளியீடு
இதன் தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலத்தினாலான புத்தகங்கள் அடுத்தவாரம் வெளியீடு! இதுவரையில் 60 ஆயிரம் தொடக்கம் ஒரு இலட்சம் வரையிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. புத்தகங்களின் சிறப்பு தன்மை, குறைவான விலை மற்றும் அதன் மீது மாணவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை ஆகியன காரணமாக இவற்றை அநேகமானோர் விரும்பி வாங்குவதனை காணக் கூடியதாகவுள்ளது. கல்வியமைச்சு நடந்து முடிந்த க. பொ. த. சாதாரணதரம் மற்றும் உயர்தர பரீட்சை வினாத்தாள்களை விடைகளுடன் புத்தகங்களாக அச்சிட்டு விற்பனைக்கு வைத்துள்ளது. இப்புத்தகங்களை…
-
நிபந்தனையற்ற முறையில் இலங்கைக்கு கட்டார் உதவி புரியும்!
இலங்கை துரிதமாக அபிவிருத்தி அடைவதைக் காண்பதே கட்டார் ராஜ்ஜியத்தின் இலக்கு என்று அந்நாட்டு அமீர் ஷெய்க் ஹமாத் பின் கலீபா அல் தானி மற்றும் அந்நாட்டு பிரதமர் ஹமாத் பின் ஜாசிம் பின் ஜாபர் அல்தானி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இலங்கையின் துரித அபிவிருத்திக்காக ஒப்பந்தங்கள் மற்றும் நிபந்தனைகள் இன்றி தேவையான சகல ஒத்துழைப்புகளையும் வழங்குவதற்கு கட்டார் தயாராக இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் நேற்று முன்தினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே இவர்கள் மேற்கண்டவாறு…
-
இன்னும் 10 வருடங்கள் சிறை வைத்திருந்தாலும் தைரியம் இழந்திருக்க மாட்டேன்: பொன்சேகா
அரசியல் பழிவாங்கள் நிமித்தம் சிறை சென்ற என்னை, இன்னும் 10 வருடங்கள் தடுத்து வைத்திருந்தாலும் என்னுடைய தைரியம் ஒருபோதும் சிதறியிருக்க மாட்டாது’ என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார். சற்று முன்னர் சிறைச்சாலையிலிருந்து விடுதலை பெற்ற அவர் மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய சரத் பொன்சேகா,
-
சிறையில் தனக்கு ஏற்பட்ட வேதனைகள் ஏனையோருக்கும் ஏற்பட இடமளிக்காத தலைவர்
மனித சுதந்திரத்துக்கும் ஜனநாயகத்துக்கும் மதிப்பளிக்கும் ஓர் உன்னத தலைவராக விளங்கிவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ கடந்த காலத்தில் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வந்தார். ஜே.ஆர். ஜெயவர்தன ஜனாதிபதியாக இருந்த காலகட்டத் தில் இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அன்றைய அரசாங் கத்தினால் மனிதாபிமானமற்ற முறையில் பல்வேறு துன்பங்களுக்கு இலக்கானார். தான் செய்யாத ஒரு குற்றத்திற்காக மஹிந்த ராஜபக்ஷ அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் சிறை வைக்கப்பட்டார். ஒரு சிறிய அறையில் அவர் தனியாக தடுத்து…
-
மட்டக்களப்பில் இடம்பெறும் அபிவிருத்திகளை பார்வையிட கிழக்குமாகாண பணிப்பாளர் விஜயம்
-MMS மட்டக்களப்பு மாவட்டத்தில் பொருளாதார அபிவிருத்தியமைச்சினால் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைகளை பொருளாதார அபிவிருத்தியமைச்சின் கிழக்கு மாகாண பணிப்பாளர் எஸ்.லியனகே நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்று பார்வையிட்டார்.
-
யாழ். பல்கலைக்கழகத்தின் மாபெரும் மருத்துவக் கண்காட்சி
யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தினால் மாபெரும் மருத்துவக் கண்காட்சி ஒன்று இன்று (21) திங்கட்கிழமை யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் போராசிரியர் வசந்தி அரசரெட்ணத்தினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இன்று திங்கள் 21ஆம் திகதி முதல் 26ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியினை பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள், மருத்துவத்துறை சார்ந்தவர்கள், ஏனைய மாவட்ட மாணவர்கள் எனப் பலரும் பார்வையிடலாம் என யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடம் அறிவித்துள்ளது.
-
மிக விரைவில் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம்
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மிக விரைவில் பொறியியல் பீடம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் 7வது பொதுப் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை (19) ஒலுவில் வளாகத்தில் வேந்தர் பேராசிரியர் அச்சி எம். இஸாக் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் திஸாநாயக்க மேற் கண்டவாறு கூறினார். அமைச்சர் திஸாநாயக்க அங்கு தொடர்ந்து தனதுரையில்; 1995ல் பல்கலைக்கழகக் கல்லூரியாக மறைந்த ஸ்ரீ லங்கா…