-
விஞ்ஞானம் விழித்திடுமுன் விந்தை நபியின் விண்வெளிப்பயணம்
– மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ : ரஜப் மாதத்தின் 27ம் இரவை மிஃராஜின் இரவாக கொண்டாடுவது பித்அத்தாகும். காரணம் அது நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த ஒன்றல்ல. ஆகவே! ரஜப் மாதத்தின் 27ம் நாளை சிறப்புக்குரிய நாளாகக் கருதாமல் மற்ற சாதாரண நாட்களைப்போன்றே கருத வேண்டும். இறைமொழியும் நபிமொழியும் : தன் அடியாரை (கஃபாவாகிய) சிறப்பு பள்ளியிலிருந்து (பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு, இரவின் ஒரு பகுதியில் பயணம் செய்வித்தானே அத்தகையவன் மிகவும் பரிசுத்தமானவன், (மஸ்ஜிதுல் அக்ஸாவாகிய)…
-
களனி ஆற்றில் 24 கரட் தங்கம்
சந்தை விலைக்கு தான் கொள்வனவு செய்ததாக கூறுகிறார் தங்க வியாபாரி களனி ஆற்றில் பூகொடை குமாரிமுல்லை ஜம்புத்துறையில் தங்கத் துகள்கள் கண்டறியப்பட்டதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆற்றில் தங்கம் தேடுகின்றனர். நேற்று அப்பகுதிக்கு சென்ற புவியியல் ஆராய்ச்சி நிலைய அதிகாரிகளும் மாணிக்கக் கல் அதிகார சபை உறுப்பினர்களும் தங்கம் தேடுதலில் ஈடுபட்டுள்ளோருடன் உரையாடினர். பின் இவ்வதிகாரிகள் இப்பிரதேச தங்க வியாபாரிகளுடனும் கலந்துரையாடினர்.
-
எகிப்து தேர்தல்: முதலாம் நாள் வாக்களிப்பு நிறைவு
எகிப்தில் தற்பொழுது நடைபெற்றுவரும் ஜனாதிபதித் தேர்தலில் அதிக ஆர்வத்துடன் மக்கள் வாக்களித்து வருகின்றனர். இரண்டு நாட்கள் நடைபெறும் இத்தேர்தலில் முதலாம் நாளான இன்று மக்கள் வாக்களிப்பதைக் காணலாம்.
-
சம்மேளனத்தின் வருடாந்த பொதுச்சபைக் கூட்டம்
சம்மேளனத்தின் வருடாந்த பொதுச்சபைக் கூட்டம் இன்ஸா அல்லாஹ் எதிர்வரும் 27-05-2012 காலை 8.00 மணிக்கு முஹிய்யித்தீன் மெத்தை பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் நடாத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன, இதற்கான அழைப்புக்கள் உரிய பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லீம் நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உரிய அழைப்பு மற்றும் அனுமதி அட்டை கிடைக்காதவர்கள் உடனடியாக சம்மேளனத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்படுகிறீர்கள். -fkmmi.org
-
மைலோ கிண்ண வலைப்பந்தாட்டம்; வடக்கு, கிழக்கு பாடசாலைகள் பங்கேற்பு
இறுதி ஆட்டம் ஜுலை 28, 29 மற்றும் 30ஆம் திகதிகளில் பொலன்னறுவையில் நடைபெறும். இலங்கை பாடசாலை வலைப்பந்தாட்ட சங்கம், நெஸ்லே லங்கா நிறுவனம் மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றின் அனுசரணை யுடன் ஏற்பாடு செய்யும் ‘மைலோ’ கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டித் தொடர் 21வது முறையாக இம்மாதம் நடைபெறவுள்ளது. நாடளாவிய ரீதியாக இடம்பெறும் போட்டிகளில் 350 பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 1000க்கும் மேலான வீராங்கனைகள் பங்கு கொள்கின்றனர்.
-
மீண்டும் மட்டக்களப்பில் தொடரும் சிலை உடைப்பு சம்பவங்கள்…
மட்டக்களப்பு பொது நூலகத்திற்கு முன்பாக நிறுவப்பட்டுள்ள அருட் தந்தை வில்லியம் ஓல்டின் உருவச் சிலை சேதமாக்கப்பட்டுள்ளது என புளியந்தீவு மெதடிஸ்த்த திருச்சபையின் முகாமை குரு அருட் தந்தை எஸ்.எஸ்.டெரன்ஸ் தெரிவித்தார். குறித்த கை மற்றும் கையிலிருந்த விளக்கு ஆகியன இன்று புதன்கிழமை (23.5.2012)சேதப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
-
சம்மேளனத்தின் பாராட்டு விழா 2012 இல் சிறப்பு விருது பெற்றோர்
சம்மேளனத்தின் பாராட்டு விழா 2012 இல் சிறப்பு விருது பெற்றோர் 1. அல்ஹாஜ். ரஊப் A மஜீத் JP (நகர சபை உறுப்பினர்) இவர் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் உருவாக பாடுபட்டமைக்காக விருது வழங்கி கௌளரவிக்கப்பட்டார் 2. அல்ஹாஜ். MTM காலித் JP (முன்னாள் காதி நீதிபதி) இவர் தனது நீண்டகால தொடச்சியான சமூக சேவைக்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்
-
எகிப்து ஜனாதிபதி தேர்தல் இன்று ஆரம்பம்: முபாரக்கின் இடத்திற்கு 13 வேட்பாளர்கள் போட்டி
இஸ்லாமிய மற்றும் மத சார்பற்ற வாக்குகள் சிதற வாய்ப்பு ஹொஸ்னி முபாரக் பதவி விலகியதன் பின்னர் எகிப்தில் முதலாவது ஜனாதிபதி தேர்தல் இன்று ஆரம்பமாகவுள்ளது. இதில் 13 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
-
களனி ஆற்றில் தங்கம்?
களனி ஆற்றில் பூகொடை ஐம்புத்துறை எனும் ஆற்றங்கரையில் தங்கத்துகள்கள் கிடைப்பதனால் மக்கள் தங்கம் தேடுவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். (தினகரன்)
-
கட்டாரில் தொழில் புரியும் இலங்கையர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு!
கட்டாருக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கைக் குழுவினர் நேற்று அந்நாட்டில் வேலைவாய்ப்புக்களில் ஈடுபட்டுள்ள இலங்கையர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.
-
இறுதிப் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்படவில்லை!
போர் குற்றம் தொடர்பிலான எந்தவொரு சர்வதேச விசாரணைக்கும் இலங்கை கட்டாயம் முகங்கொடுக்க வேண்டும் என சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். விடுதலையாகிய ஒரு நாளில் பீபீசி செய்திச் சேவைக்கு அவர் அளித்த செவ்வியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் சில தலைவர்கள் போர் குற்றம் புரிந்தது போல் தங்களுடைய முகங்களை மறைத்துக் கொள்வதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
-
சத்துருக்கொண்டானில் விபத்து இரு ஏறாவூர் சகோதரர்கள் ஸ்தலத்திலேயே பலி!
மட்டக்களப்பு – கொழும்பு வீதியில் உள்ள சத்துருக்கொண்டான் எனும் இடத்தில் இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். ஏறாவூர் சத்தாம் ஹுசைன் கிராம வாசிகளான அப்துல் சமத் வயது 24 மற்றும் அவரது சகோதரர் நாகூர் முஹம்மத் சாலி வயது 34 ஆகியோரே பலியானவர்களாவர்.