-
ஏறாவூர் கடற்கரையில் கரையொதுங்கிய 55 அடி நீளமான திமிங்கிலம்!
ஏறாவூர் கடற்கரையில் சுமார் 55 அடி நீளமான இராட்சத திமிங்கிலம் ஒன்று நேற்று இரவு கரையொதிங்கியிருந்தது. உயிரற்றுக் காணப்படும் இத்திமிங்கிலத்தைக்கான மக்கள் அலையலையாய் வருகை தருகின்றனர். (MMS)
-
கிழக்கு முதலமைச்சர் பதவி அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸிற்கே வழங்கப்பட வேண்டும்: பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா
-MMS எதிர்வரும் கிழக்குமாகாணசபைத் தேர்தலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸிற்கே வழங்கப்பட வேண்டும் எனவும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் எமது கட்சி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்தே போட்டியிடும் எனவும் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கூறியுள்ளார். கடந்த கிழக்கு மாகண சபை தேர்தலிலும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்தே எமது கட்சி போட்டியிட்டமையினால் இம்முறை முதமைச்சர் பதவியினை எமது கட்சிக்கே வழங்க வேண்டும் என…
-
இன்று அதிகாலை வேளையில் பெய்த கடும் மழையைத் தொடர்ந்து கொழும்பில் வெள்ளம்
-MMS நாட்டின் பல பாகங்களிலும்; இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வேளையில் பெய்த கடும் மழையைத் தொடர்ந்து அமரசேகர மாவத்தை, துன்முல்ல, ஹோட்டன் பிளேஸ், ரவுன்கோல் உட்பட கொழும்பிலுள்ள பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். இத்தொடர் கால நிலைமாற்றம் தொடர்ந்தும் சில நாட்கள் நீடிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
-
சர்வதேச இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில் பங்குபற்றுவதற்கான அழைப்பு
கருத்தமைவு பிரிவில் வெற்றிபெறுபவருக்கு 3000 – 5000 சுவிஸ் ஃபிராங்கள் திட்டங்கள் பிரிவில் வெற்றியீட்டுபவருக்கு 5000 – 10000 சுவிஸ் ஃபிராங்கள் ஐக்கிய நாடுகளுக்கான தகவல் தொழில்நுட்ப முகவர் அமைப்பான சர்வதேச தொலைத்தொடர்பாடல் ஒன்றியத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில் பங்குபற்றுவதற்காக இலங்கையின் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட இளம் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப வல்லுநர்களிடமிருந்து விண்ணப்பங்களை இலங்கை கண்டுபிடிப்பாளர்கள் ஆணையம் கோரியுள்ளது.
-
பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதில் அநீதி: சுவரொட்டி மூலம் எதிர்ப்பு
அம்பாறை மாவட்ட பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் விடயத்தில் அரசு அநீதி இழைத்துள்ளதாக தெரிவித்து மாவட்டத்திலுள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்களில் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. பொதுநிர்வாக அமைச்சு பட்டதாரிகளை பயிலுனர்களாக சேர்த்துக் கொள்ளும் பொருட்டு பத்திரிகையில் விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.
-
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திடம் அறிக்கை சமர்ப்பிப்பு
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் நிலைப்பாடு அடங்கிய அறிக்கை ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவிடம் கையளிக்கப்பட்டதாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இந்த அறிக்கையை நேற்றையதினம் சமர்ப்பித்ததாக கொழும்பு ரண்முத்து ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் குறிப்பிட்டார்.
-
பெருந்தலைவர் அஷ்ரப் பெற்றெடுத்த தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை தனது மதிநுட்பத்தால் தேசிய அந்தஸ்துக்கு தலைநிமிரச் செய்த ஸ்தாபக உபவேந்தர் காதர்!
ஏ.எம். ஜெமீல் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ஏழாவது பட்ட மளிப்பு விழாவில் அதன் ஸ்தாபக உபவேந்தரான பேராசிரியர் எம்.எல்.ஏ. காதர் அவர்கள் இலக்கிய கலாநிதி பட்டம் வழங்கி கெளரவிக்கப் பட்டதையிட்டு அப்பல்கலைக் கழகத்தின் ஸ்தாபக முன்னோடிகளுள் ஒருவன் என்ற ரீதியில் நான் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமையும் அடை கின்றேன்.
-
இலங்கையின் முதலாவது செய்மதி தொழில்நுட்ப கம்பனி
சுப்ரீம் சற் நிறுவனத்துடன் முதலீட்டுச் சபை ஒப்பந்தம் சுப்ரீம் சற் பிறைவற் லிமிட்டட் (Supreme Sat (PVT) LTD) ழிஹிளி) முதலீட்டுச் சபையுடன் செய்மதி தொழில் நுட்பம் சம்பந்தமான ஒப்பந்தம் ஒன்றை நேற்று செய்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தின்படி அமைக்கப்படவுள்ள செய்மதி நிறுவனம் இலங்கையின் முதலாவது செய்மதி கம்பனியாக அமையும். 20 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இக் கம்பனி சீனாவின் அரச உரிமையுள்ள சீனா கிறேற் வோல் இன்டர்ஸ்ட்றி கோர்ப்பறேசன் (China…
-
எகிப்து ஜனாதிபதி தேர்தல்: வாக்களிப்பு நிறைவு
எகிப்து ஜனாதிபதித் தேர்தல் இரண்டாம் நாளான இன்று (வியாழக்கிழமை) நிறைவடைகிறது. ‘ஒரு ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இது போன்றதொருநாள் மீண்டும் வராது! நான் ‘அப்துல் பதாஹ்’ அவர்களுக்கு வாக்களித்தேன். இருந்தும் பெரும்பாண்மையை ஏற்றுக்கொள்வேன் என்றும் எகிப்தின் எதிர்காலத்திற்காக நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்’ எனவும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் ‘ரிஹாம் முஸதபா’ எனும் 20 வயதுடைய எகிப்திய பெண்!
-
ஏனைய சமூகங்களை பாதிக்காதவாறு தமிழ் மக்களுக்கான தீர்வு அமைய வேண்டும்: றிசாட்
தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும். எனினும், குறித்த தீர்வு ஏனைய சமூகங்களை பாதிக்காதவாறு அமைய வேண்டும் என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார். அகில அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் ஊடகவியலாளர் மாநாடு இன்று வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
-
தம்புள்ளை பள்ளிவாசல் ஒரு போதும் அகற்றப்படாது :றிசாட்
-MMS தம்புள்ளை பள்ளிவாசல் விடயமாக கருத்துக்களைக் கூறமுடியாமல் எமது முஸ்லிம் அரசியல்வாதிகளின் நிலைமை இருக்கின்றதோ? என இந்நாட்டு முஸ்லிம்கள் யோசிக்கும் ஓர் நிலையில், தம்புள்ளை பள்ளிவாசல் ஒரு போதும் அகற்றப்படாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸிற்கு உறுதிமொழி வழங்கியுள்ளார் என அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
-
தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு இடம்பெறவிருந்த கட்டட தொகுதியில் தீ
மட்டக்களப்பு அரசடி பிரதேசத்திலுள்ள மண்டப கட்டட தொகுதி ஒன்றில் இன்று வியாழக்கிழமை தீ விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள இவ் மண்டபத்தினுள் சிறிய வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், அதனையடுத்து மண்டபத்தினுள் தீப்பிடித்த எரிந்ததாகவும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர். அதனையடுத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பொலிசாரும் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இத் தீவிபத்தினால், மண்டபத்தின் மேடைப்பகுதி திரைச்சீலைகள் என்பன எரிந்து நாசமாகியுள்ளன.