-
இந்திய உயர் ஸ்தானிகர் கல்முனைக்கு விஜயம்
கல்முனை மாநகர பிரதிமேயர் நிஸாம் காரியப்பரின் அழைப்பின் பேரில் நேற்று கல்முனைக்கு விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே காந்தாவிற்கு பிரதி மேயர் நினைவு சின்னம் வழங்குவதனையும் பாராளுமன்ற உறுப்பினர். என். ரீ. ஹஸன் அலி அருகில் நிற்பதனையும் படத்தில் காணலாம்.(தினகரன்)
-
சம்மேளனம்-தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திப்பு
த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை காத்தான்குடிக்கு வருமாறு அழைப்பு -MMS காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் 26-05-2012 நேற்று பி.ப 5.00 மணிக்கு மட்டக்களப்பில் வைத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை சந்தித்தது. இச் சந்திப்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சிரேஸ்ட பாரளுமன்ற உறுப்பினர்களான திரு.இரா.சம்பந்தன், திரு.மாவை சேனாதிராஜா, திரு. பொன் செல்வராஸா, திரு. அரியனேந்திரன் ஆகியோரும் சம்மேளன தலைவர்,செயலாளர்,பிரதிச்செயலாளர்கள் உட்பட சம்மேளனத்தின் சிரேஸ்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
-
சிரிய படையின் மிலேட்சத்தனம்! 32 சிறுவர்கள் உட்பட 92 பேர் பலி!
-MMS சிரியாவில் தொடரும் உள்ளுர் வண்முறைகளில் கண்கலங்கச் செய்யும் ஓர் காட்சி. நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சிரிய இராணுவத்தால் ‘ஹவ்லா’ எனும் நகரில் ஏவப்பட்ட மிருகத்தனமான ஆட்டிலரித் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 92 பேர் பலியானார்கள். பலியானவர்களுள் 32 பேர் சிறுவர்கள் என்பதும் மற்றுமொரு வேதனை. எங்கே செல்கிறது முஸ்லிம் சமூகம்? இவ்வாறான ஜனாஸாக்கள் வரிசைகளைப் பார்க்கும்போது எங்கள் கடந்தகாலங்களும் எங்களை நினைவூட்டிச் செல்கின்றன!
-
மன்னிப்பு கேட்குமாறு கோரிய செல்வம் எம்.பி.யும் – எதற்கு மன்னிப்பு எனக் கேட்ட அமைச்சர் ரிசாத்தும்
மன்னார் ஆயர் தொடர்பான கருத்து மோதல் விவகாரம்: -எம். சுஐப் மரியாதைக்குரிய மன்னார் ஆயர் குறித்து என்னால் சொல்லப்பட்ட உண்மையான ஆதாரபூர்வமான தகவல்களுக்காக மன்னிப்பு கோருமாறு தமிழ் கூட்டமைப்பினர் அறிக்கைவிட்டு வருகின்றனர். நான் ஏன் மன்னிப்புக் கோர வேண்டும். மதிப்புக்குரிய ஆயர் அவர்களின் மத விவகாரங்களிலோ அல்லது தனிப்பட்ட விடயங்கள் குறித்தோ நான் எதுவும் பிரஸ்தாபிக்கவில்லை. மாற்றமாக முஸ்லிம் சமூகத்தின் உரிமை சார்ந்த விடயங்களில் அவர் தலையிட முற்பட்ட போதுதான் நான் எமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினேன். பாராளுமன்றத்தில்…
-
பக்தாத் மாநாடு: ஈரானை இணங்க வைக்கும் இறுதி முயற்சி?
ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் வேலைகள் எட்ட முடியாத எல்லைகளைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கையில் மூக்கணாங்கயிறு போடப்பட்டு பின்னுக்கு இழுக்கப்படும் காலமிது. ஐரோப்பிய நாடுகளின் எச்சரிக்கைகள், ஐ.நாவின் காலக்கேடுகள், அமெரிக்காவின் அச்சுறுத்தல்களையும் தாண்டி தனது போக்கில் சென்று கொண்டிருந்த ஈரானின் பயணம் சென்ற வாரம் ஈராக் தலைநகர் பக்தாத் பேச்சுக்களூடாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் பிரான்ஸ், ரஷ்யா, சீனா, ஜேர்மன் ஆகிய நாடுகளின் முக்கியஸ்தர்கள் சர்வதேச அணுமுகவர் நிலையத்தின் தலைவர், ஐரோப்பிய நாடுகளின் வெளிநாட்டுக் கொள்கை வகுப்பாளர் உள்ளிட்ட…
-
தாக்கப்பட்ட கல் விகாரை வீதி பள்ளிவாசல் தொடர்பாக தெஹிவளை மாநகர சபையில் இன்று விசேட கூட்டம்
தெஹிவளை, கல் விகாரை வீதியிலுள்ள பள்ளிவாசல் தொடர்பிலான விசேட கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை தெஹிவளை – கல்கிஸ்சை மேயர் தனசிறி அமரதுங்க தலைமையில் மாநகர சபையில் இடம்பெறவுள்ளது.
-
மீண்டும் நில அதிர்வு
-MMS நாட்டின் சில பாகங்களில் நேற்று இரவு 9.52 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. நுவரெலியா, ஹட்டன், இரத்தினபுரி, பதுளை மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களிலேயே நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. நாட்டின் சில பகுதிகளில் தொடர்மழையும் வெள்ளமும் ஏற்பட்டிருக்கும் இந்நிலையில் மக்கள் மீண்டும் அச்சமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
-
மீண்டும் அரங்கேறும் காடைத்தனம்
-SHM கருத்தை கருத்துக்களால் வெல்லமுடியாதவர்கள், எமது முஸ்லிம் சமூகம் பற்றிய அக்கரையற்ற முதுகெலும்பு அற்றவர்கள், போன்றோரின் காடைத்தனம் இன்றுமட்டுமல்ல காத்தான்குடியின் அரசியல் வரலாற்றில் ஒவ்வொருமுறையும் அரங்கேறி வருவது சுட்டிக்காட்டத்தக்கது. வீடு உடைப்பு, மிரட்டல்கள், கடையெறிப்புக்கள், தர்மஅடி… இப்படியே சுடுகாடாக ஒவ்வொரு தேர்தலின்போதும் அரங்கேறிவருவது கண்டிக்கத்தக்கதே! எமது முஸ்லிம் சமூகத்துக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டிய காத்தான்குடி சமூகம், சில காடையர்களால் அவ்வப்போது மன உளைச்சல்களையும் கெட்ட பெயர்களையும் தாங்கவேண்டிய சூழ்நிலைக்கு காத்தான்குடி மக்கள் உள்ளவாங்கப்படுவது வேதனைக்குரியது. இந்தவகையில்
-
ஜனாதிபதி அளித்த சுதந்திரத்தை சரத்பொன்சேகா துஷ்பிரயோகம் செய்கிறார்
வடக்கில் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினர் தலையிடுவதாகவும் படை முகாம்கள் அங்கிருந்து அகற்றப்பட வேண்டும் என்றும் சமீபத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அளித்த மன்னிப்பின் கீழ் சிறையில் இருந்து விடுதலை பெற்றிருக்கும் சரத் பொன்சேகா ஒரு தமிழ் தினசரிக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் தெரிவித்திருக்கிறார். பதில் ஊடக, தகவல் துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன இது பற்றி கருத்துத் தெரிவிக்கையில், நேற்று நடத்திய ஊடகவியலாளர் மகாநா ட்டில், ஜனாதிபதி அவர்கள் நல்லெண்ணத்துடன் சரத் பொன்சேகாவை சிறையில்…
-
எகிப்து ஜனாதிபதித் தேர்தல்: மொர்சி முன்னிலையில்
-MMS எகிப்திய ஜனாதிபதித் தேர்தலின் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் 26 வீதமான வாக்குகளைப்பெற்று முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் முகம்மட் மொர்சி (இடம்) முன்னிலை வகிக்கிறார். 23 வீதமான வாக்குகளைப் பெற்ற முன்னால் எகிப்தின் பிரதமர் அகமட் சபிக் (வலம்) இரண்டாம் இடத்தில் இருக்கிறார். இன்னும் சில மணி நேரங்களில் இறுதி முடிவு வெளியாகவுள்ளதாக எகிப்தின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இத்தேர்தலில் 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் ஒருவரும் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளை பெறாத…
-
ஸ்கொட்லாந்து தனிநாடு பிரச்சாரம் உத்தியோகபூர்வ ஆரம்பம்
ஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்து பிரிந்து ஸ்கொட்ந்து தனி நாடாக செல்ல வேண்டுமா வேண்டாமா என்று அப்பகுதி மக்களிடம் கேட்டு நடத்தப்படக்கூடிய கருத்தறியும் வாக்கெடுப்பில் தனி நாடாக பிரிவதற்கு ஆதரவாக மக்கள் வாக்களிக்கமென்கிற பிரச்சாரத்தை ஸ்காட்லாந்தின் முதன்மை அமைச்சரான அலெக்ஸ் சல்மண்ட் ஆரம்பித்துவைத்துள்ளார். ஸ்கொட்டிஷ் தேசியக் கட்சியின் தலைவராக இருக்கின்ற முதன்மை அமைச்சர் சல்மண்ட், ஸ்கொட்லாந்தின் எதிர்காலம் பற்றி முடிவெடுக்கக்கூடிய நல்ல நிலையில் தற்போது ஸ்கொட்லாந்து மக்கள் இருக்கிறார்கள் எனக் கூறினார்.
-
முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி முன்னிலையில்
எகிப்து ஜனாதிபதித் தேர்தல் வாக்குகள் தற்பொழுது எண்ணப்பட்டுவரும் இந்நிலையில், இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின்படி எகிப்து முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி முன்னிலையில் திகழ்வதாக செய்தி ஊடகங்கள் அறிவித்திருக்கின்றன. (MMS)