-
சம்மேளனத்தின் புதிய தலைவராக மர்சூக் அகமட்லெப்பை தெரிவு
காத்தான்குடி பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் புதிய தலைவராக மர்சூக் அகமட்லெப்பை தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளரும் முகைதீன் மெத்தை பெரிய ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவருமாவார். காத்தான்குடி முகைதீன் மெத்தை பள்ளிவாசலில நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சம்மேளனத்தின் பொதுக் கூட்டத்தின் போதே புதிய தலைவராக மர்சூக் அகமட்லெப்பை தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் சம்மேளனத்தின் புதிய செயலாளராக மௌலவி ஏ.எம்.அப்துல் காதரும் பொருளாளராக எம்.பாயிஸும் இதன்போது தெரிவு செய்யப்பட்டனர்.
-
கிழக்கு முதலமைச்சராக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவரே வர வேண்டும்: அதாவுல்லா
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவரே கிழக்கு முதலமைச்சராக வர வேண்டும் என தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார். அத்துடன் ஏம்மை அறிந்தவரே எம்மை ஆள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். கிண்ணியா பிரதேசத்தில் அண்மையில் நடாத்தப்பட்ட கிழக்கு மாகாண அறிவியல் கண்காட்சியில் வெற்றியீட் பாடசாலை மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா கடந்த சனிக்கிழமை கிண்ணியா நகர சபை மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் அதாவுல்லா தொடர்ந்தும் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.…
-
ஆளும்கட்சியிலும் எதிர்க்கட்சியாக மு.கா. இருப்பதன் வெளிப்பாடே கட்சி அலுவலகம் எரிப்பு: ஹக்கீம்
‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் கட்சியிலும் ஒரு எதிர்க்கட்சியாக இருப்பதன் அடையாளமே காத்தான்குடியில் முஸ்லிம் காங்கிரஸின் கிளை அலுவலகத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவமாகும்’ என்று நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார். காத்தான்குடி, ஹிஸ்புல்லா மண்டபத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ‘முஸ்லிம் காங்கிரஸும் அதன் புதிய இலக்கும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
-
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 113 பேர் கைது
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா நோக்கிச் செல்ல முற்பட்ட 113 இலங்கையர்கள் கொழும்பு குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை அவுஸ்திரேலியா அல்லது வேறு நாட்டுக்கு அனுப்பி வைக்க முயற்சித்த ஆறு முகவர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண குறிப்பிட்டார். நீர்கொழும்பு மற்றும் காலி முகத்திடல் ஆகிய பகுதிகயில் வைத்து இன்று (28) அதிகாலை இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
வடக்கு மாலி இஸ்லாமிய நாடாக பிரகடனம்
ஆபிரிக்க நாடான வடக்கு மாலியை கைப்பற்றிய இரு இஸ்லாமிய கிளர்ச்சிக் குழுக்களும் தமது பகுதியை சுதந்திர இஸ்லாமிய நாடாக அறிவித்துள்ளன.
-
பல்கலைக்கழகங்களை புதிதாக ஆரம்பிக்கும் நோக்கம் இல்லை
இருக்கும் பல்கலைக்கழகங்களை மேம்படுத்துவதே அரசின் திட்டம் – பொலன்னறுவையில் ஜனாதிபதி புதிய பல்கலைக்கழகங்கள் திறக்கப்படமாட்டாது. தற்போது இயங்கும் பல்கலைக்கழகங் களின் வசதிகளை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். பல்கலைக்கழகங்களின் வசதிகளை அதிகரித்து அவற்றை மேம்படுத்துவது தொடர்பாக உயர் கல்வி அமைச்சருக்கு வழிகாட்டல்களை வழங்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
-
தமிழரசுக் கட்சி மாநாட்டுக்கு வந்த பஸ் தாக்குதலுக்குள்ளானது: மாநாட்டை குழப்பவும் முயற்சி!
மட்டக்களப்பு ஊறணியில், கடும் பொலிஸ் பாதுகாப்புகளுக்கு மத்தியில் நடைபெறும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாட்டுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து வருகைதந்த பஸ் வண்டி மீது இன்று பகல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-
தம்புள்ளை சம்பவத்தை ஒட்டிய விரும்பத்தகாத சம்பவங்களுக்கு வெளிச்சக்திகள்?
தம்புள்ளை சம்பவத்தை ஒட்டிய விரும்பத்தகாத சம்பவங்கள் இடம்பெறுவதற்கு பின்னால் வெளிச்சக்திகள் செயற்படுகின்றனவா என்ற சந்தேகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார். உடுநுவர பகுதியில் வீதிகளுக்கு காபட் இட்டு நவீனமயப்படுத்தும் வேலைகளின் ஆரம்ப வைபவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை எலமல்தெனியவில் நடைபெற்றது. இதில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
-
காத்தான்குடியில் திறக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் மகளிர் அணி அலுவலகம்
கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முதலாவது மகளிர் கிளை நேற்று சனிக்கிழமை காத்தான்குடியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நிதியமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் திறந்துவைக்கப்பட்டது.
-
தெஹிவளை பள்ளிவாயல் விடயம்: நடப்பது என்ன?
-SHM வெள்ளிக்கிழமைதான் உலகமும் அழியும். இதே போல்தான் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இலங்கை முஸ்லிம்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கவேண்டிய ஓர் நிலையம் இப்போது ஏற்பட்டுள்ளது. அரச பாதுகாப்புக்கள் இருந்தும் நீதி, சுதந்திரம் கடைப்பிடிக்கப்பட்டும் முஸ்லிம்கள் மீதான ஓர் அடக்குமுறையை சிங்கள இனவாதம் தூண்டிவருவது கண்டிக்கத்தக்கதே!
-
பொலநறுவை மாவட்டத்தில் இராணுவ வீரர்களுக்கு 43 வீடுகள் கையளிப்பு!
-MMS நமக்காக நாம் கருத்திட்டத்தின்கீழ் பொலநறுவை மாவட்டத்தில் இராணுவ வீரர்களுக்காக அமைக்கப்பட்ட 43 வீடுகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ நேறறு தெரிவூ செய்யபபட்டவர்களுக்கு கையளித்தார். இத்திட்டத்தை நாடு முழுவதிலும் அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பில் பொலநறுவையில் நடைபெற்ற வைபவத்தில் மாகாண ஆளுநர்கள் – அமைச்சர்கள் உட்டப பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
-
தெஹிவளை பள்ளிவாசல் தொடர்பில் முஸ்லிம்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என கோட்டாபய உறுதி: அமைச்சர் றிசாட்
தெஹிவளை மஸ்ஜித் ரஹ்மான் பள்ளிவாசல் தொடர்பில் சில பெரும்பான்மை சமூகத்தினர் ஆரம்பித்துள்ள அத்துமீறல் சம்பவம் குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் கொண்டுவந்துள்ளார். தற்போது முஸ்லிம்களின் மத வழிபாட்டு தளங்கள் மீதான தாக்குதல் சம்பவம் அதிகரித்து வருவதாகவும் இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய செயலாகும். அத்துடன் இது குறித்து உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.