-
அமைச்சர் ரிசாத்தின் வாக்கு வங்கியை உடைக்கும் சதியே மத ரீதியான குற்றச்சாட்டு
* இன, மத, மொழி வேறுபாடின்றி சேவையாற்றிவரும் அமைச்சர் ரிசாத் * ஐக்கிய முஸ்லிம் உம்மாஹ் அறிக்கை இன, மத, மொழி வேறுபாடின்றி மக்களுக்கு சேவையாற்றி வரும் அமைச்சர் ரிசாத் பதியுதீனை வீழ்த்துவதற்கும் அவருக்குள்ள வாக்கு வங்கியை உடைப்பதற்குமே திட்டமிட்டு அவர் மீது மத ரீதியான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. வன்னியில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் இன ஒற்றுமையுடன் ஒன்றுபட்டு வாழ்வதே அவரது இலட்சியமும் இலக்குமாகுமென ஐக்கிய முஸ்லிம் உம்மாஹ் அமைப்பு தெரிவித்துள்ளது.
-
ஊடகவியலாளர்கள் மீதான அரசியல்வாதிகளின் கைவேட்டை:தாக்கியவர்களை சட்டத்தின்முன் நிறுத்துங்கள்
யுத்தகாலம் தொட்டு இன்றுவரை இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு விடுக்கப்பட்டுவரும் மிரட்டல்கள், அரசியல் கைவரிசை, அழுத்தங்கள் மற்றும் மிரட்டல்கள் போன்றன இன்னும் குறைந்தபாடில்லை. இந்தவகையில்அட்டாளைச்சேனையில் ஊடகவியலாளர் ஒருவர் கடமையின்போது அரசியல்வாதி ஒருவரினால் தாக்கப்பட்ட சம்பவமும் கொழும்பில் ஊடகவியலாளர் இரண்டுபேரை அவர்களது கடமைகளை செய்யவிடாது பொலிஸார் தடுத்தமையும் ஊடக ஜனநாயக உரிமை மீறல் என இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
-
உன்னிச்சை பாலத்தின் கீழ் துருப்பிடித்த ஆயுதங்கள் மீட்பு
-MMS உன்னிச்சைஅணைக்கட்டு பாலத்துக்கீழ் மறைத்துவைத்ததாக நம்பப்படும் சில ஆயுதங்கள் துருப்பிடித்த நிலையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டன. மீன் பிடிக்க சென்ற இளைஞர் ஒருவர் ஆயித்தியமலை பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பேரிலேயே மேற்படி ஆயுதங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. இவ் ஆயுதங்கள் யுத்தகாலங்களில் விடுதலைப்புலிகளால் மறைத்து வைக்கப்பட்டவையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. (படம்: தமிழ்மிரர்)
-
சர்வதேச பரீட்சையில் பாத்திமா நுஸ்லா முதலிடம்
பிஸ்னஸ் எக்ஸ்கவிடிவ் அசோசியசினால் (BEA) நடத்தப்பட்ட சர்வதேச பரீட்சையில் இஸ்லாமிய நிதி மற்றும் இஸ்லாமிய பொருளாதார பாடத்தில் முதலிடத்தைப் பெற்று சர்வதேச பரிசினை இம்மாணவி பெற்றுள்ளார். தெஹிவளையைச் சேர்ந்த செல்வி பாத்திமா நுஸ்லா கப்பார் தெஹிவளை ஐ. பி. எல். வளாகத்தில் கற்று வருகின்றார். இவர் 2012 ஆம் ஆண்டு இஸ்லாமிய நிதித் துறையில் பட்டப் பின் பரீட்சைக்ககும் தோற்றவிருக்கிறார். இல்மா சர்வதேச பாடசாலையின் பழைய மாணவியான இவர் அக்கல்லூரியில் சிரேஷ்ட மாணவத் தலைவியாகவும் பணிபுரிந்தார். இவர்…
-
இலங்கை கிரிக்கெட் ஒப்பந்தம்: கைச்சாத்திட வீரர்கள் தயக்கம்!
புதிய ஒப்பந்தத்திற்கு முன்னர் நிலுவை தொகையை தரும்படி கோரிக்கை ‘இலங்கை வீரர்களுக்கான ஒப்பந்தத்தின் படி வீரர் ஒருவர் டெஸ்ட் போட்டி ஒன்றில் விளையாடினால் 5000 டொலர்களும் ஒரு நாள் போட்டிக்கு 3500 டொலரும் இருபது – 20 போட்டிக்கு 3000 டொலரும் மேலதிக கொடுப்பனவாக வழங்கப்படும். அதேபோன்று தேசிய வீரர் ஒருவர் உள்நாட்டு போட்டியில் விளையாடுவதற்கு 50 வீத போட்டிக்கட்டணம் வழங்கப்படும்’. இலங்கை கிரிக்கெட் ஒப்பந்தத்தில் வீரர்கள் கைச்சாத்திடுவதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.
-
தெற்காசிய ஆசிரியர் பயிற்சி நிலையம் இலங்கையில் நிறுவப்படவுள்ளது!
-MMS தெற்காசிய ஆசிரியர் பயிற்சி நிலையம் வெகுவிரைவில் இலங்கையில் ஸ்தாபிக்கப்படவுள்ளதுடன் அதற்காக 587 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தெற்காசிய நாடுகளில் ஆசிரியர் பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி நிலையம் முதன் முதலில் இலங்கையில் ஸ்தாபிக்கப்படவுள்ளது. யுனெஸ்கோ அமைப்பின் கீழ் வரையறுக்கப்பட்டிருக்கும் ஆசிரியர் பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி நிலையமாக இது இயங்குமெனவு கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
-
கட்டாரில் நேற்று இடம்பெற்ற தீ விபத்து: 2 தீயணைப்புப் படையினரும் பலி!
-MMS கட்டாரில் பிரபல்யமான ‘விலாஜியா மோல்’ எனப்படும் சுற்றுவட்டாரத்தில் நேற்று இடம்பெற்ற தீ விபத்தில் 13 சிறுவர்கள் உட்பட 19 பேர் பலியானார்கள். இவ்விடத்திலுள்ள சர்வதேச பாடசாலையொன்றிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் போது 4 ஆசிரியர்களும் , 2 தீயணைப்புப் படையினரும் கொல்லப்பட்டிருப்தாகவும் மற்றும் பலர் காயமடைந்திருப்பதாகவும் கட்டார் அமைச்சு அறிவித்துள்ளது.
-
KKYகுறுந்தகவல் (KKY SMS) சேவையின் ஒரு வருட நிறைவு:
இன்று இலங்கையின் தமிழ் பேசும் மக்கள் அனைவரிடத்திலும் பிரபல்யமாகி நன்மதிப்பையும் பெற்றுவரும் KKY குறுந்தகவல் சேவை (KKY SMS), தற்பொழுது தங்களது சேவையின் ஒரு வருட நிறைவைப் பெற்றிருக்கின்றது. சமூக நல நோக்கில் ஒரு வருடமாக நடப்பு செய்திகள், மார்க்க விடயங்கள், வினா-விடைப் போட்டிகள், விளையாட்டுச் செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்கள், போன்ற பல சேவைகளை உடனுக்குடன் வழங்கி, காத்தான்குடி வாழ் மக்களும் வெளியூர் மக்களும் அறிந்து கொள்ள உதவி வருவதை மறக்க முடியாது. KKY SMS இன் சமூகப் பணி…
-
உலகை கண்கலங்கச் செய்த சிரியா படையின் மிருகத்தனமான தாக்குதல் – படங்கள்
கடந்த வெள்ளிக்கிழமை சிரியா படையின் மிலேச்சத்தனமான ஆட்டிலரி – செல் தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்கள் 108 பேர் கொல்லப்பட்டனர். இவர்களுள் 49 சிறுவர்களும் 34 பெண்களும் உள்ளடங்குவர். இத்தாக்குதலை உலக நாடுகள் வண்மையாகக் கண்டித்திருக்கின்றன. இத்தாக்குதல் சம்பவத்தின் உலக மக்களின் கண்களை குளமாக்கிச் சென்ற சில காட்சிகள் இங்கு பதிவேற்றப்படுகிறது. தயவு செய்து பலவீனமானவர்கள் இப்படங்களைப் பார்ப்பதைத் தவிர்த்துக் கொள்ளவும்.நன்றி
-
கல்விக் கல்லூரிகளின் கற்கை காலத்தினை 4 வருடங்களாக அதிகரிக்கலாம்! ஹக்கீம்
கல்விக் கல்லூரிகளின் தற்போதைய மூன்று வருட டிப்ளோமா பாடநெறியினை கற்கை காலத்தினை நான்கு வருடங்களாக அதிகரித்து பட்டதாரிகளாக ஆக்குவதற்கான யோசனையொன்றினை நாடாளுமன்றத்தினால் நியமிக்கப்பட்டுள்ள விசேட கல்வி ஆணைக்குழுவுக்கு முன்வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
-
கால அவகாசம் கொடுத்தும் அரசு கணக்கெடுக்கவில்லை! நாடு இருளில் சூழும் அபாயம்?
அரசாங்கம் எவ்வாறான அழுத்தங்களை கொடுத்தாலும் இன்று (செவ்வாய்க்கிழமை) (29) பகல் 12 மணியுடன் ஒட்டுமொத்த மின் சேவையாளர்களும் வீதிக்கு இறங்குவர் என இலங்கை மின் சேவையாளர் சங்க பிரதான செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார். கால அவகாசம் கொடுத்தும் அரசாங்கம் தமது கோரிக்கைகளை கண்டுகொள்ளாதிருப்பதால் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளத் தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டார்.
-
அதிசங்கைக்குரிய ஞானபிதா செய்கு நாயகம் அவர்களின் தாயார் மரணம்.
எங்களின் கண்ணியமிக்க ஷெய்கு நாயகம், அஸ்ஸெய்குல் காமில் ஷெய்குத் தரீகதில் காதிரிய்யத்தி வர் ரிப்பாய்யியத்தி வன் நக்ஷபந்திய்யதி அஷ் ஷெய்க் அல் ஆலிமுல் வாஸில் அப்துர் றஊப் மிஸ்பாஹி காத்தானி அவர்களின் கண்ணியமிக்க தாயார் ஸஹ்ரஹ் உம்மா அவர்கள் இன்று இலங்கை நேரப்படி சுமார் 7.10 மணியளவில் காலமானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.