-
உங்களையும் எங்களையும் வாழ விடுங்கள்: மட்டக்களப்பில் புகைத்தல் ஒழிப்பு வாரம்!
சர்வதேச புகைத்தல் ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் பல்வேறு நிகழ்வுகள் இன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
-
வாருங்கள், சுவர்க்கத்தை பார்வையிடுவோம் (தொடர்-1)
– மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ : மறுமையை நம்புவது ஈமானின் அடிப்படைகளில் ஒன்றாகும், மறுமையை நம்புவதென்பது மரணத்திற்கு பின் மறுமை என்னும் வாழ்வு இருக்கின்றது என்பதாகும், மறுமையில் அல்லாஹ் நல்லடியார்களுக்கு சுவர்க்கத்தையும், இறை நிராகரிப்பாளர்களுக்கு நரகத்தையும் ஏற்பாடு செய்து வைத்திருக்கின்றான். சுவர்க்கம் என்றால் என்ன, அதில் கிடைக்கும் இன்பங்கள் என்ன என்பதை கூறி, அதன் பக்கம் மக்களை ஆர்வம் காட்ட வைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். அல்லாஹ் நம் அனைவருக்கும் அச்சுவர்க்த்திற்கு செல்லக்கூடிய வாய்ப்பையும் அதற்குரிய அமல்கள் செய்யும்…
-
நாளை ஆரம்பமாகும் இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான T20 போட்டி: தொடரில் கலக்கப்போவது யார்?
-MJ நாளை வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு ஹம்பாந்தோட்டை-மஹிந்த ராஜபக் ஷ சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இலங்கை-பாகிஸ்தான் அணிகள் தமது தொடரின் முதலாவது இருபது20 சர்வதேச போட்டியில் மோத இருக்கின்றன.
-
வடக்கில் இராணுவ முகாம்களை அகற்ற கோருவது சாதாரண மக்கள் அல்ல
அநுராதபுரம், பொலன்னறுவை மாவட்டங்களிலும் முகாம்கள் உள்ளன வடக்கில் இருந்து இராணுவ முகாம்களை அகற்றக் கோருவது அங்கு வாழும் சாதாரண மக்கள் அல்லர். வடக்கின் அரசியல் அதிகாரத்திலிருந்து சரிந்து செல்லும் தமிழ்க் கூட்டமைப்பு போன்ற அமைப்புகளே இவ்வாறு கோருகின்றன. கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களைப் பார்க்கிலும் அநுராதபுரம் – பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் இராணுவ முகாம்கள் அமைந்துள்ளதை அந்த அமைப்புக்களுக்கு சுட்டிக்காட்ட தாம் விரும்புவதாக பாதுகாப்பு, செயலர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
-
கிழக்கில் வீடுகள் கையளிப்பு !
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆயித்தியமலை தெற்கு கிராமத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேறியுள்ள வர்களுக்கு எஹெட் கரிதாஸ் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட 45 வீடுகள் கையளிக்கப்பட்டன. இரண்டு கோடியே 25 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இவ்வீடுகளில் மழை நீர் சேகரிப்பு தாங்கிகளும் வழங்கப்பட்டுள்ளன.
-
ஒரு அநாதைச் சிறுவனுக்கு உதவியதை இருட்டடிப்புச் செய்து- இதனை ஓர் கடத்தலாக சித்தரிக்கும் தமிழ் ஊடகங்கள்!
பிரபல்யமான தமிழ் இணையத்தள ஊடகமொன்றில் இன்று வெளியான உண்மைக்குப் புறம்பான செய்தியை இங்கு தருகின்றோம். மானிப்பாய் சிறுவன் கடத்தல்: சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு யாழ். மானிப்பாய் பகுதியிலுள்ள சிறுவனைக் கடத்தி மதமாற்றம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட சந்தேக நபர்கள் மூவரை எதிர்வரும் ஜூன் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் கெ. ஜீவராணி இன்று உத்தரவிட்டுள்ளார்.
-
கிழக்கு பட்டதாரிகளுக்கு அரச நியமனம்: அடுத்த வாரம் நேர்முகப் பரீட்சை
மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களிலுள்ள பட்டதாரிகளின் அரச நியமனம் தொடர்பான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் மட்டக்களப்பு கச்சேரியில் நடைபெறவுள்ளது. இதில் அனைத்து பட்டதாரிகளும் கலந்து கொள்ள வேண்டும் என மீள்குடியேற்ற பிரதி அமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவருமான வி.முரளிதரன் தெரிவித்தார்.
-
‘யாழில் கடத்தப்பட்டு மதம் மாற்றபட்ட சிறுவன்’ : வெளிவருகிறது நிஜங்கள்
-lankamuslim.org அண்மையில் யாழ்ப்பாணத்திலிருந்து சிறுவன் ஒருவன் முஸ்லிம்களால் கடத்தப்பட்டு காத்தான்குடிக்கு கொண்டு சென்று கொடுமைப்படுத்தப்பட்டதாக பல இணைய தளங்களிலும், பத்திரிகைகளிலும் வெளியான செய்தி முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்செய்தி தொடர்பில் ஏற்கனவே எமது இணைய தளத்தில் செய்தியொன்றை வெளியிட்டிருந்தோம்.
-
காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதான அபிவிருத்தி துரிதகதியில்: ஹிஸ்புல்லாஹ் பார்வையிட்டார்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள தேசிய உதைப்பந்தாட்ட போட்டிகளை முன்னிட்டு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானம் துரிதகதியில் அபிவிருத்தி செய்யப்பட்டு செப்பனிடப்பட்டு வருகின்றது. இம்மைதான அபிவிருத்தியை பிரதி அமைச்சர் அல்ஹாஜ் MLAM. ஹிஸ்புல்லாஹ் (பா.உ) அவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை இம்மைதான அபிவிருத்தியை நேரடியாகச் சென்று பார்வையிட்டார். இவ்வருட தேசிய உதைப்பந்தாட்டப் போட்டிகள் காத்தான்குடியில் இம்மைதானத்தில் நடைபெற இருக்கின்றமை விசேட அம்சமாகும். இம்மமைதான அபிவிருத்தியுடன் மைதானத்தைச் சூழவுள்ள வீதிகளும் மீள் நிர்மாணம் செய்யப்படவிருப்பதும் குறிப்பிடத்தக்கது. (Pic: facebook/friends)
-
‘தம்புள்ளை பள்ளிவாசல் தாக்குதல் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தாமை ஆச்சரியமளிக்கின்றது’
தம்புள்ளை பள்ளிவாசல் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்த விசாரணைகள் நடத்தப்பட்டு இன்னும் குற்றவாளிகள் சட்டத்தின் முன நிறுத்தப்படாமையையிட்டு நான் ஆச்சரியப்படுகிறேன் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி பொது செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்தார். குறித்த பள்ளிசாவல் நிறுவகத்தினரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் விசாரணைகள் மந்த கதியில் இடம்பெறுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
பட்டதாரிகள் குறித்து கதைக்க கிழக்கு முதல்வருக்கு தகுதி இல்லை!
கடந்த 25-05-2012 அன்று அரச பத்திரிகையில், கிழக்கு மாகாண முதலமைச்சரால் மட்டு. வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையில் இடம்பெற்ற மகாபொல புலமைப்பரிசில் வழங்கும் விழாவில் ஆற்றப்பட்ட உரை தொடர்பான செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது. இச்செய்தியில் பட்டதாரிகளை அவமானப்படுத்தும் வகையில் தரக்குறைவாக கருத்து வெளியாகியுள்ளது. அது வேலையற்ற பட்டதாரிகள் போட்டிப் பரீட்சையில் 40 புள்ளிகளுக்கும் குறைவாக எடுப்பதாகவும் வேலையற்ற பட்டதாரிகள் ஆசிரியர் நியமனங்களை மட்டுமே கோருவதாகவும், பட்டதாரிகளுக்கு தொழல்நுட்ப அறிவு, பொது அறிவு இல்லை என்றும் பட்டதாரிகள் அரச நியமனம்…
-
ஐ.சி.சி செயற்குழு இன்று கூடுகிறது
சர்வதேசக் கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் செயற்குழு இன்று புதன் கிழமை லண்டனில் சந்தித்து முக்கிய விடயங்கள் தொடர்பாக ஆராயவுள்ளது. இரண்டு நாட்கள் இடம்பெறவுள்ள இந்தச் சந்திப்பு லண்டனில் லோர்ட்ஸில் இடம் பெறவுள்ளது. மேற்கிந்தியத்தீவுகளின் முன்னாள் தலைவர் கிளைவ் லொயிட் தலைமையில் இடம்பெறவுள்ள இந்தச் சந்திப்பு கிரிக்கெட்டின் முன்னேற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பாகவும், கிரிக்கெட்டில் தற்போது காணப்படும் சவால்கள் தொடர்பாகவும் கிரிக்கெட்டின் மூன்று வகையான போட்டிகளுக்கி டையிலான சமநிலை குறித்துக் கலந்துரையாடப்படவுள்ளது.