-
முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்திற்கு நேரில் சென்று நடவடிக்கை
-வீரகேசரி நாட்டிலுள்ள பள்ளிவாசல்களின் விபரங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் கோரியுள்ளனர். புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் கீழுள்ள முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்துக்கு நேற்று வெள்ளிக்கிழமை சென்ற குற்றப் புலனாய்வுப்பிரிவுப் பொலிஸார் இந்த விபரங்களைச் சேகரித்துச் சென்றுள்ளனர். நாட்டிலுள்ள பள்ளிவாசல்களின் ௭ண்ணிக்கை, அவற்றின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ள காலம் உள்ளிட்ட பல தகவல்களை குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்திடம் பெற்றுள்ளதாக நம்பகரமாக தெரியவருகிறது. இந்தத் தரவுகள் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுக்காகவே…
-
தம்புள்ளையில் விபத்து: காத்தான்குடியைச் சேர்ந்த இருவர் மரணம்
-MMS காத்தான்குடியிலிருந்து புறப்பட்ட வேன் இன்று சனிக்கிழமை அதிகாலை விபத்திற்குள்ளானதில் அவ்வேனில் பயணித்த இருவரும் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர். தம்புள்ளை பிரதான வீதியில் குறித்த வேன் லொறியொன்றுடன் மோதியே இவ்விபத்து சம்பவித்தது. காத்தான்குடியைச் சேர்ந்தவர்களான வேனின் சாரதி எம்.ஏ.லத்தீப், எம்.நிப்றாஸ் ஆகியோரே பலியானதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் சடலங்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
-
கிராம சேவையாளர் நியமனம்: வயதெல்லையை 40 ஆக அதிகரிக்க பொது நிர்வாக அமைச்சு திட்டம்
புதிய நியமனங்களில் ஆண்களுக்கு 80% பெண்களுக்கு 20% வாய்ப்பு கிராம சேவகர்களாக நியமிக்கப்படுவோரின் வயதெல்லையை 21 முதல் 40 வயது வரை அதிகரிப்பதற் குப் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ளத் தீர்மானித்துள்ளதுடன் அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார். அத்துடன் புதிதாக கிராம சேவகர்களை நியமிக்கும் போது ஆண்களுக்கு 80 வீத வாய்ப்பையும் பெண்களுக்கு 20 வீத வாய்ப்பையும் வழங்க உத்தேசித்துள்ளதாகவும் அமைச்சர்…
-
நாடாளுமன்றம் வர மதகுருமாருக்கு தடை விதிப்பதற்கான நகர்வு
இலங்கை நாடாமன்றத்துக்கான தேர்தல்களில் மதகுருமார் போட்டியிடுவதை அரசியல் அமைப்பு ரீதியாக தடை செய்வதற்கான நகர்வு ஒன்றினை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருமான விஜயதாஸ ராஜபக்ஷ முன்னெடுத்துள்ளார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு பேசியுள்ள அவர் இது குறித்த தனது முயற்சிகள் வெற்றிபெறுமாயின் அது 19 வது அரசியலமைப்பு திருத்தமாக அமையும் என்றும் கூறியுள்ளார்.
-
மீரா பாலிகா தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள்
படங்கள் இணைப்பு –தகவல்: MBNS காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வுகள் இப்பாடசாலையின் அதிபர் M.M. இஸ்மா லெவ்வை தலைமையில் 25-05-2012 வெள்ளிக்கிழமை மாலை பாடசாலை ஹிஸ்புல்லாஹ் கூடைப்பந்தாட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
-
பள்ளிவாசல்களின் விபரங்கள் குற்றப்புலனாய்வு பிரிவினரால் சேகரிப்பு
-Tamilmirror முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள பள்ளிவாசல்களின் விபரங்களை குற்றப்புலனாய்வு பிரிவு கோரியுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் கீழுள்ள முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்திலேயே பள்ளிவாசல்களை பதிவு செய்ய வேண்டும். அனுமதியற்ற வழிபாட்டு தலங்கள் முறியடித்தல் மற்றும் மத ரீதியான மோதல்களை தடுப்பதல் ஆகிய நோக்கங்களுடன் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
-
ஹம்பாந்தோட்டை விபத்தில் கரு ஜயசூரிய மற்றும் மனைவிக்கு காயம்
ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரியவும் அவரது மனைவியும் காயமடைந்துள்ளனர். சிறு காயங்களுக்குள்ளான இருவரும் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. -adaderana
-
அரசியல்வாதிகளின் விருப்பத்தின்படி நியமனங்கள் வழங்கப்படுமானால் போராட்டம் வெடிக்கும்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் ஆண்டுகளின் அடிப்படையில் வழங்கவேண்டும். அதனைவிடுத்து அரசியல்வாதிகளின் அட்டவணைகளின் படி நியமனங்கள் வழங்கப்படுமானால் அதற்கெதிராக சாத்வீக ரீதியிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு, விவேகானந்தா கல்வி நிலையத்தில் இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் கூட்டத்தில் அச்சங்கத்தின் தலைவர் வை.பிரதீபன் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
-
பிரித்தானியாவிலிருந்து இலங்கை அகதிகள் நாடு திரும்பினர்
பிரித்தானியாவில் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கை அகதிகள் 36 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இவர்கள் இன்று காலை விசேட விமானம் மூலம் இலங்கை வந்தடைந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். பிரித்தானியா 70 முதல் 80 வரையான இலங்கை அகதிகளை நாடு கடத்த திட்டமிட்டு இருந்ததாகவும் அதில் 40 பேரை நாடு கடத்துவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
-
40 மில். டொலர் செலவில் தாதியர் பயிற்சிக் கல்லூரி
மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நிலவும் தாதியர் வெற்றிடங்களுக்கு இலங்கையிலிருந்து தாதியர்களை அனுப்பும் பொருட்டு அவர்களுக்குத் தேவையான நவீன பயிற்சியினை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் தாதியர் பயிற்சிக் கல்லூரி ஒன்றினையும் மருத்துவமனை ஒன்றினையும் நிர்மாணிப்பதற்காக சவூதி அரேபிய நிறுவனம் ஒன்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
-
இலங்கைக்கு எதிராக செயற்படும் எட்டு இணையத்தளங்களின் உரிமையாளர் ஒருவரே: தாய்லாந்தில் மஹிந்த தெரிவிப்பு
இலங்கைக்கு எதிராக செய்திகளை வெளியிடும் பல இணையத்தளங்களை நடத்தி வரும் நபர் ஒருவரே என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தாய்லாந்தில் உள்ள இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றிய மஹிந்த இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
-
புகலிடம் மறுக்கப்பட்டவர்கள் நாளை இலங்கை வருகை!
பிரித்தானியாவில் புகலிடம் மறுக்கப்பட்டு இன்று திருப்பி அனுப்பப்படவிருந்த இலங்கையர்கள் இன்று நாட்டை வந்தடைவார்கள் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இவர்களை ஏற்றிய விமானம் இன்று காலை ஏழு மணியளவில் இலங்கையை வந்தடையவுள்ளது.