-
மட்டு. போதனா வைத்தியசாலை தாதியர்கள் ஆர்ப்பாட்டம்
-MMS மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்கள் மற்றும் நிறைவு கான் வைத்திய உத்தியோகத்தர்கள் மற்றும் துணை மருத்தவ உத்தியோகத்தர்கள் ஆகியோர் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன் வைத்து இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
சட்டவிரோத மிண் இணைப்பைப் பெற்றவர்களின் தண்டப்பணம் ரூ.35 இலட்சம்
-MMS நாட்டில் சட்டவிரோதமாக மிண் இணைப்பைப் பெற்றவர்களைக் கண்டுபிடிக்கும் திடீர் பரிசோதணைகள் கடந்த சில மாதங்களாக நாட்டில் இடம்பெற்று வந்தன. இந்தவகையில் கடந்த மே மாதத்தில் மட்டும் சட்டவிரோதமாக மின் இணைப்பு பெற்றவர்கள் தொடர்பில் 420 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மின் மாணி மாற்றுவது, பாரியளவான தேவைகளுக்காக மட்டுப்படுத்தப்பட்ட இணைப்பிணை பெறுவது தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
-
உதைப்பந்தாட்டத்தின் மற்றுமொரு திருவிழா ‘EURO CUP-2012’ இன்று ஆரம்பம்
-MJ உலகக்கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டிகளுக்கு அடுத்ததாக உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் மற்றுமொரு உதைப்பந்தாட்ட தொடர்தான் யூரோ கிண்ணப் போட்டிகளாகும்.
-
வாருங்கள், சுவர்க்கத்தை பார்வையிடுவோம் (தொடர்-2)
– மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ : அல்லாஹுத்தஆலாவின் திருப்பொருத்தமே எல்லாவற்றையும் விட மேலானது. நிச்சயமாக அல்லாஹ், சுவர்க்கவாசிகளை நோக்கி, சுவர்க்கவாசிகளே! என்றழைப்பான். அதற்கவர்கள், லப்பைக வஸஃதைக வல்கைரு பியதைக எங்கள் இரட்சகனே!(இதோ)உன் சமுகத்தில்(நாங்கள்) ஆஜராகிவிட்டோம். அனைத்து நன்மைகளும் உன்னுடைய கரங்களிலேயே இருக்கிறது. என்று கூறுவார்கள். பின்னர், அல்லாஹுத்தஆலா அவர்களிடம் உங்களுக்குத் திருப்திதானே! என்று கேட்பான். அதற்கவர்கள், எங்களுடைய இரட்சகனே! நாங்கள் எப்படி திருப்தியடையாமல் இருப்போம்! நிச்சயமாக நீ உன் படைப்புகளில் எவருக்கும் கொடுக்காத அருட்கொடைகளையும் நற்பாக்கியங்களையும் எங்களுக்குக்…
-
வேலையற்ற பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சையும் விண்ணப்பங்களும்
-AKB மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை கடந்த 5,6,7ம் திகதிகளில் மட்டக்களப்பு கச்சேரியில் இடம்பெற்றுவந்தன. இந்நேர்முகப் பரீட்சையில் 1287 பட்டதாரிகள் தோற்றியிருந்தனர். இதுரை விண்ணப்பிக்காதோர் மீண்டும் விண்ணப்பிக்குமாறு கேட்கப்படுகின்றனர். மற்றுமொரு நேர்முகப்பரீட்சை எதிர்வரும் பதினோராம் திகதி திங்கட்கிழமை மட்டக்களப்பு கச்சேரியில் இடம்பெற இருக்கின்றது.
-
பூகொட பாலத்திற்கு கீழ் 24 கரட் தங்கத் துகள்கள்
-MMS பூகொட கனம் பல்ல பாலத் திற்கு கீழுள்ள களனி ஆற்றுப் படுகையில் 24 கரட் தங்கத் துகள்கள் அதிகளவில் கிடைப் பதாக பிரதேச வாசிகள் கூறுகின்றனர். பூகொடை குமாரிமுல்லை பிரதேசத்தில் உள்ள ஜம்புத் துறையிற்கும் கனம்பல்ல பாலத்தின் கீழ் இருக்கும் ஆற்றிற்கும் இடையில் 1 கிலோ மீற்றர் தூரத்திலே இவ்வாறு தங்கத் துகள்களும் மாணிக் கமும் கிடைப்பதாகக் கூறப்படுகின்றது.
-
பணிப்பெண்களுக்கு தொழில் வழங்குவோர் ஆயிரம் டொலர்கள் வைப்பிலிட வேண்டும்
தனிப்பட்ட முறையில் பணிப்பெண்களாக வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக செல்லும் இலங்கை பெண்களுக்கு அந்நாட்டின் தொழில் வழங்குநர் 1000 அமெரிக்க டொலர்களை வைப்பிலிட வேண்டும். இந்நடைமுறை ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் விதத்தில் உடனடியாக நடைமுறைப்படுத்துவதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தலைவர் அமல் சேனா லங்காதீர அறிவித்துள்ளார். தொழில் வழங்குநரால் 1000 அமெரிக்க டொலர்கள் வைப்பிலிடப்படாமல் எவரும் தனிப்பட்ட முறையில் இனி மேல் வேலை வாய்ப்புக்காக செல்ல முடியாது. இது தொடர்பாக…
-
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வாகன இறக்குமதி
புதிதாக நிறுவப்பட்ட ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஸ துறைமுகத்தில நேற்று இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் படங்கள் இவை.
-
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியேற்ற வேண்டும்: கிழக்கு மாகாண சபையில் பிரேரணை
-MMS 1990 ஆம் ஆண்டு விடுதலை புலிகளினால் வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியேற்ற வேண்டுமென்ற பிரேரணையொன்று கிழக்கு மாகாண சபையில் இன்று வியாழக்கிழமை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியேற்ற அரசாங்கம், அரச அதிகாரிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட அரசியல் கட்சிகள், மத தலைவர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் உட்பட அனைவரும் நடடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறித்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மாகாண அமைச்சர் சுபைர் தெரிவித்தார்.
-
டேவிட் கெமரூனைச் சந்தித்த ஜனாதிபதி: பாப்பரசரைச் சந்திக்க ரோம் பயணம்
-MJ பிரித்தாணிய எலிசபத் மகாராணியின் வைரவிழாக் கொண்டாட்டங்களுக்காக லண்டன் பயணித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள், பிரித்தாணிய பிரதமரான டேவிட் கமரூனைச் சந்தித்து இலங்கையின் சமகால, எதிர்கால திட்டங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் பிரித்தாணிய ஊடகங்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றன.
-
வேரோடு சாய்ந்த காட்டுத்தேங்காய் மரம் (படங்கள்)
-படங்கள்-MBM. றிப்தி காத்தான்குடி 3, முகைதீன் மெத்தை பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் வளாகத்தில் பல வருடங்களாக திடகாத்திரமாக நிழல்கொடுத்துவந்த காட்டுத்தேங்காய் மரம் நேற்றிரவு வேரோடு சாய்ந்தது. இம்மரத்திற்கு வயது தெரியாதிருந்தும், நாம் அறிந்தகாலம் தொட்டு இம்மரம் மெத்தைப்பள்ளி முன்றலில் திடகாத்திரமாக நின்று நிழல் கொடுத்துவந்ததை மறக்கக முடியாது! இம்மரங்கள் போன்று பல வருட வரலாற்றைக் கொண்டிருந்த காத்தான்குடி 1, பெரியமௌலான கபுறடி முன்றலில் திடகாத்திரமாக நின்ற ஆலமரமும் குறிப்பிடத்தக்கது. இதேபோல் ஜாமியுழ்ழாபிரீனுக்குச் சொந்தமான காத்தான்குடி 6 ,…
-
இலங்கை-பாகிஸ்தான் ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி இன்று
-MJ இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 5 கோட்டிகளைக் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கட் தொடரின் முதலாவது போட்டி இன்று இலங்கை நேரப்படி பிற்பகல் 2:30 மணிக்கு கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இடம்பெற இருக்கின்றது. இதற்கு முன்னர் ஹம்பாந்தோட்டை, மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற்ற இரு அணிகளுக்குமிடையிலான இருபது20 போட்டிகளுக்கு நிறைவான இரசிகர்களைக் காணமுடியாமல் இருந்தது பல சந்தேகங்களைத் தோற்றுவித்திருந்தது. எனினும் கண்டியில் நடைபெறும் இப்போட்டிக்கு அதிகளவிலான இரசிகர்கள்…