-
மூக்கை வாய்க்குள் திணிக்க முயன்ற பாடசாலை மாணவர்கள்
தமிழ்ப் பத்திரிகையொன்றின் செய்தியால் வந்த வினை இரண்டு தினங்களுக்கு முன்னர் பத்திரிகையொன்றில் முன்பக்கத்தில் கிட்டத்தட்ட அரைப்பக்கத்தில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. மூக்கை வாய்க்குள் திணித்து தனது முகத்தை அவலட்சணமாக்கியது மட்டுமல்லாது தனது இந்த முயற்சியை எவராவது முறியடிப்பின் பணப்பரிசையும் வழங்குவதாக வெளிநாட்டிலுள்ள வேலையற்ற ஒருவர் தெரிவித்திருந்தார். அதற்குரிய அவலட்சனமான வர்ணப் புகைப்படங்களும் பிரசுரமாகியிருந்தன. எந்த ஊடகங்களுமே கண்டு கொள்ளாத இதை ஏதோ உலக சாதனையாக உள்ளூர் தமிழ் பத்திரிகையொன்று முன்பக்கத்தில் பிரசுரித்திருந்தது.
-
15ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் விளையாட்டு விழா கொழும்பில் நேற்று ஆரம்பம்
இரு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் விளையாட்டு விழா இம்முறை சுகததாச உள்ளக விளை யாட்டரங்கில் நேற்று கோலாகலமாக ஆரம்பமானது. இது எதிர்வரும் 12ம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஆசிய நாடுகளில் உள்ள இளைய மெய்வல்லு நர்களின் ஆற்றல்களை வெளிக்கொண்டு வருவதற்காகவும் அவர்களது ஆற்றல்களை மேன்மையடையச் செய்வதற்காகவும் ஆசிய மெய்வல்லுநர் சங்கம் இப்போட்டிகளை அறிமுகம் செய்தது.
-
இலங்கையில் பௌத்த விகாரைகள் கட்டியெழுப்புவதை யாராலும் தடுக்க முடியாது: கோத்தாபய
இலங்கையில் உள்ள பௌத்த விகாரைகளை கட்டி எழுப்பும் அரசின் செயற்பாடுகளை எவராலும் தடுக்க முடியாது என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார். மாத்தறை, வெஹரஹேன விஹாரையில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் அந்த நிகழ்வில் உரையாற்றுகையில்,
-
யாழில் வழிபாட்டுத்தலங்கள் மாநகரசபையின் அனுமதியுடன் அமைக்கப்படவேண்டும்.
-MMS யாழ் மாநகர சபை எல்லைக்குள் வழிபாட்டுத் தலங்களை நிறுவதற்கு யாழ் மாநகர சபையின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என யாழ் மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா அறிவித்துள்ளார். புதிய மத வழிபாட்டுத் தலங்களை அமைப்பது தொடர்பாக புத்தசாசனம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சினால் 02.09.2012 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி யாழ் மாநகர சபை எல்லைக்குள் புதிய மத வழிபாட்டுத் தலங்களை அமைப்பதற்கு மாநர சபையின் அனுமதி பெறப்படவேண்டும் என யாழ் மாநகர சபை முதல்வர்…
-
12 வயதுக்கு குறைவான மாடுகள் அறுக்கத் தடை
மிருகங்கள் கட்டளை சட்டத்தின் கீழ் 12 வருடங்களுக்குக் குறைந்த மாடுகளை அறுவைக்காக பாவிப்பது குற்றமாகும். அனுமதிப்பத்திரத்துடன் நடத்தப்படும் அறுவை நிலை யங்களிலும் அறுக்கப்படவுள்ள மாட்டுக்கு 12 வருடங்களுக்கு அதிகம் இருக்க வேண்டும் என கால்நடை மருத்துவர் அத்தாட்சிப்படுத்தினாலே ஒழிய அந்த மாட்டை அறுக்க முடியாது. அண்மைக்காலங்களில் கன்றுக்குட்டிகள் இறைச்சிக்காக அறுப்பது தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளன.
-
சம்மேளனத்தின் 2012/2013ஆம் ஆண்டிற்கான முதலாவது நிர்வாக சபைக்கூட்டம்.
சம்மேளனத்தின் 2012/2013ஆம் ஆண்டிற்கான முதலாவது நிர்வாக சபைக்கூட்டம். இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 10-06-2012 ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 மணிக்கு நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்புக்கள் சம்மேளனத்தில் அங்கத்துவம் வகிக்கும் பள்ளிவாயல்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. -fkmmi.org
-
பிரித்தாணியாவில் தொடர்ந்தும் மோசமான காலநிலை தொடர்கிறது.
-MJ பிரித்தாணியாவிலும் அதனைச்சூழவுள்ள ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் மோசமான காலநிலை தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. சுழற்காற்றும், தொடர்மழையும் தொடர்ந்தும் இருந்துவருகின்றன. இதன்காரணமாக இங்கிலாந்து-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 3வது டெஸ்ட் போட்டி, 2 நாட்கள் ஆடமுடியாத மோசமான நிலைக்கு கால நிலை இருந்தது.
-
2013ம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் பதிவு ஆரம்பம்
பன்மைப் பதிவுள்ளோரின் ஏனைய இடங்கள் ரத்து 2013ம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் பதிவு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்தது. எதிர்வரும் மூன்று வாரங்களுக்கு இந்த நடவடிக்கைகள் தொடரும் எனவும் ஜூலை 15ம் திகதி வரை வாக்காளர்கள் தம்மைப் பதிவு செய்துகொள்ளலாம் என பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொகமட் தெரிவித்தார்.
-
வாழைச்சேனையில் பாதணிக்கடை தீக்கிரை!
-MMS வாழைச்சேனையின் பிரதான வீதியில் அமைந்துள்ள வாழைச்சேனையை சேர்ந்த நாசர் என்பவரின் பிரபல தனியார் பாதணி விற்பனைக்கடையொன்று வியாழக்கிழமை (07) இரவு 7.30மணியளவில் தீப்பிடித்து எரிந்துள்ளது.
-
லண்டனில் மகிந்தவுக்கெதிராக ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்தவர்கள் யார்?- புலனாய்வு பிரிவு தகவல்
-Tamilwin பிரித்தானியாவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்தவர்கள் யார் என்பதை புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைவர் போதகர் இம்மானுவேல், சுரேன் சுரேந்திரன், மயன் கந்தையா ஆகிய விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களே இந்தப் போராட்டத்தை முன்நின்று ஒழுங்கு செய்துள்ளனர் எனப் புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளதாக அப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
ரோம் வெசாக் விழாவில் ஜனாதிபதி !
-MMS ரோம் நகரிலுள்ள உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் தலைமையகத்தில் நேற்று (07) நடைபெற்ற இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை இலங்கைத் தூதரகம் மேற்கொண்டிருந்தது. ஜனாதிபதி பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இவ்விழவில் உலக உணவூ மற்றும் விவசாய அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஜோஸ் கிரேசியானோ டி சில்வா இலங்கை அமைச்சர்கள் பௌத்த மத குருக்கள் உற்பட பெரும் திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
-
மும்மொழித் திட்டம் இனப்பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு அடித்தளமாக அமைந்துள்ளது
தேசிய மொழி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசு தேவ நாணயக்கார, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்க ளின் மும்மொழித் திட்டத்தை நாடெங்கிலும் வெற்றிகரமாக நிறைவேற்றும் பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார். தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகங்களுக்கு ஆங்கில மொழி அறிவு முக்கியத் துவம் பெறுகிறது. இன்றைய நவீன உலகில் ஆங்கில மொழியில் தேர்ச்சி இல்லாதவர்களு க்கு நல்ல வேலைவாய்ப்பையோ அல்லது ஒரு சிறந்த வளமான எதிர் காலத்தையோ எதிர்பார்க்க முடியாது என்ற உண்மையை உணர்ந்தி ருப்பதனால்,…