-
அட்டாளைச்சேனையில் “சீ பிளேன்’’ இறங்கு தளம்
அட்டாளைச் சேனை கோண வத்தை ஆற்றில் நீரியல் விமான இறங்குதுறை (Sea plane yard) நிர்மாணிப்பதற்கான இடத்தினை சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தொழில்நுட்ப உயரதிகாரிகள் குழு பார்வையிட்டுச் சென்றுள்ளது. கிழக்கு மாகாண நீர்ப்பாசன, வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையின் அழைப்பை ஏற்று வெள்ளிக்கிழமை (08) விஜயம் செய்த குழுவினர் நீரியல் விமான இறங்குதுறை அமையவுள்ள இடத்தினை நேரடியாகச் சென்று பார்வை யிட்டனர்.
-
தமிழ் மொழி மூல பட்டதாரிகளுக்கு இன்று ஆசிரிய நியமனம்
மேல் மாகாண தமிழ் மொழி மூல பட்டதாரிகள் சுமார் 250 பேருக்கு இன்று ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படுகின்றன. கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இன்று காலை 9.30 மணிக்கு இந் நியமனங்கள் வழங்கி வைக்கப்படும்.
-
ஐஸ்கிறீம் உட்கொண்ட 50 பேர் வைத்தியசாலையில் அனுமதி
-MMS இரு வெவ்வேறு விழாக்களிற்காக ஒரே இடத்தில் கொள்வனவு செய்யப்பட்ட ஐஸ்கிறீமை உட்கொண்டதன் காரணமாக கல்முனை, பான்டிருப்பு பிரதேசத்தில் இடம்பெற்ற பிறந்தநாள் மற்றும் திருமண வைபவத்தில் ஐஸ்கிறீம் உட்கொண்ட 50 பேருக்கும் மேற்பட்டோர் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
இன்ரபோல் தரவு தளத்துடன் குடிவரவு, எல்லை கட்டுப்பாட்டு முறைமை இணைப்பு
இலங்கை எல்லை பாதுகாப்பு முறைமையுடன் இன்ரபோல் தரவு சேவையை ஒன்றிணைத்தமையால் இலங்கையின் எல்லைப் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று கூறினார். இந்த செயற்றிட்டத்துக்கு நிதியளித்த கனடா அரசாங்கத்துக்கு அவர் நன்றி தெரிவிப்பதாகவும் இத்திட்டத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றிய அவர் கூறினார்.
-
வாழைச்சேனை நகரின் பாதுகாப்பு தொடர்பாக கலந்துரையாடல்
வாழைச்சேனை நகரின் பாதுகாப்பு தொடர்பாக வாழைச்சேனை வர்த்தக சங்கத்திற்கும் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை மாலை வாழைச்சேனை மக்கள் வங்கிக்கு முன்னாள் இடம்பெற்றது. வாழைச்சேனை பஸாரில் கடந்த சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்த கடை மற்றும் நகரின் பாதுகாப்பு தொடர்பாக இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.
-
ஜோர்தானில் ஏமாற்றப்பட்ட 300 பெண்களை அழைத்து வருமாறு அரசிற்கு வேண்டுகோள்
ஜோர்தானில் வேலைவாய்ப்பு தேடிச் சென்று ஏமாற்றப்பட்ட நிலையில் அங்கிருக்கும் இலங்கைப் பெண்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
இலங்கையில் திமிங்கிளம் டொல்பின்களை கண்டு களிக்க வாய்ப்பு
-MMS சுற்றுலாத் துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் திமிங்கிளம் மற்றும் டொல்பின்களை கண்டு களிக்க வாய்ப்பளிப்பதற்காக புதிய கப்பல் சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மனிதாபிமான நடவடிக்கையின் போது வடக்கிற்கு படை வீரர்களைக் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட Princess of Lanka கப்பல் தற்பொது இப்புதிய சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
-
சம்மேளனத்தின் இரண்டாம் மாடியில் மகாநாட்டு மண்டபம் அமைப்பதற்பான நிதி ஒதுக்கீடு.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் இரண்டாம் மாடியில் மகா நாட்டு மண்டபம் ஒன்றினை அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு ஒன்றினை மேற்கொள்ளுமாறு கூட்டுறவு அபிவருத்தி மற்றும் உள்நாட்டு வர்த்தக பிரதி அமைச்சர் கௌரவ அல்ஹாஜ். பஷீர் சேகு தாவுத் அவர்களிடம் கேட்டுக்கொண்டதற்கமைய,
-
கிழக்கு மாகாண சபை இம்மாதம் 26 ஆம் திகதி கலைக்கப்படலாம்!
MMS கடந்த இரு மாதங்களாக எதிர்பார்க்கப்பட்டுவரும் கிழக்குமாகாணசபை கலைப்பு இம்மாதம் 26ம் திகதி இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் பிரதிநிதிகளின் கணிப்பின்படி இத்தகவல் இன்று வெளியாகியுள்ளன. உத்தியோகபூர்வமாக ஒருசில தினங்களில் அறிவிக்கப்படலாம் எனவும் தெரியவருகிறது.
-
அடுத்தாண்டில் தலா வருமானம் 3000 அமெரிக்க டொலரை எட்டுமென எதிர்பார்க்கப்படுகிறது
இலங்கையரின் தலா வருமானம் அடுத்தாண்டில் 3000 அமெரிக்க டொலரை எட்டுமென அரசு கருதுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிக்கின்றார். 2006 ல் 1400 அமெரிக்க டொலராக காணப்பட்ட தலா வருமாம் இவ்வாண்டில் 2836 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். அனுராதபுர புதிய நகரில் மக்கள் வாணிப நிதிக் கம்பனிக் கிளையொன்றைத் திறந்துவைத்தபின் அவர் உரையாற்றும் போதே இத்தகவல்களை வெளியிட்டார்.
-
நாலாயிரம் பேருக்கு ஆசிரியர் நியமனம்
29ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் வைபவம் * 1000 தொழில் நுட்பப் பட்டதாரிகள் * 3000 கல்வியியல் டிப்ளோமாதாரிகள் இம்மாத இறுதிக்குள் 4 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தினகரனுக்குத் தெரிவித்தார்.
-
விடுதலைப் புலிகளைத் தடைசெய்துள்ள நாட்டில் புலிக் கொடிகளுடன் ஆர்ப்பாட்டம்
புலிகளை தடை செய்யப்பட்ட அமைப்பாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ள பிரித்தானியாவில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மற்றும் இடையூறுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவலையடைவதாக ஊட கத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இது தொடர்பில் குறித்த நாடு உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் என்றே நாங்கள் கருதுகின்றோம். எனவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறெனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் ஆதரவாளர்கள் மத்தியில் வந்து உரையாற்றியமை முக்கியத்துவம் வாய்ந்த விடய மாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.