-
எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் டாட்டா நனோ கார்கள்
டீமோ Disel and Motor Engineering PLC (DIMO) நிறுவனம் அண்மையில் நனோ மை லேஜ் ரலி (Nano Mileage Rally) ஒன்றை நடாத்தியிருந்தது. எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் அதிசிறந்த காராக டாட்டா நனோ விளங்குகின்றது. என்பதை மீண்டும் ஒரு தடவை உறுதி செய்வதற்கு இந்த நிகழ்வு உதவியுள்ளது. கொழும்பிலிருந்து நீர்கொழும்புக்குச் சென்று திரும்பிய இந்தப் பேரணியில் கிட்டத்தட்ட 50 நனோ உரிமையாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.
-
நான் செய்த உதவிகளை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மறந்துவிட்டார்: பௌசி
நான் செய்த பல உதவிகளை பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மறந்துவிட்டார் என சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காத்தான்குடி அமைப்பாளரும் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான ரவூப்; ஏ மஜீதின் இல்லத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் காத்தான்குடி மத்திய குழு உறுப்பினர்கள் மத்தியில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
-
கட்டாரில் பணிபுரியும் இலங்கை இளைஞன் திடீர் விபத்தில் பலி
கட்டார் பின் மஹமுத் நகரில் பணிபுரிந்து வந்த இலங்கையர் ஒருவர் திடீர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 23 வயதுடைய மொஹமட் மர்சிட் என்ற இலங்கை இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் பணிபுரிந்த வர்த்தக நிலையத்தில் பொருட்களை கொள்வனவு செய்த ஒருவர் பணம் செலுத்தாமல் தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார்.
-
கிழக்கு முதலமைச்சராக மீண்டும் சந்திரகாந்தன் தெரிவாகுவது உறுதி
சந்தேகம் வேண்டாமென்கிறார் செல்வேந்திரன் தமிழர்களின் தேசிய கட்சி அமெரிக்காவின் கைப்பொம்மையாம்! கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு, மீண்டும் அதற்கான தேர்தல் இடம் பெறுமாயின் இன்றைய முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீண்டும் முதலமைச்சராகுவார். இதனையிட்டு எவரும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. காரணம் கிழக்கு மண்ணில் வாழும் மூவின மக்களையும் ஒற்றுமையுடன் கட்டிக் காக்கும் ஆளுமையும், திராணியும் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு உண்டு என்பதை எவரும் மறுதலிக்க முடியாது.
-
முதலமைச்சர் மாறி மாறி நியமிக்கப்பட்டால் தமிழ் – முஸ்லிம் உறவு காத்திரமாகும்
முஸ்லிம் முதலமைச்சர் கோருவதில் என்ன தவறிருக்கிறது எனக்கேட்கிறார் சுபைர் கிழக்கு மாகாணத்துக்கு முஸ்லிம் ஒருவர் முதலமைச் சராக வரவேண்டு மென அந்த மாகாண முஸ்லிம்கள் கோரிக்கை விடுப்பதில் என்ன தவறிருக்கின்றதென்று மாகாண அமைச்சர் எம்.எஸ். சுபைர் கேள்வி எழுப்பியுள்ளார். கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களும் சனத்தொகையில் சுமார் அரைவாசிப் பங்கினராக இருக்கின்றனர். எனவே முதலமைச்சர் நியமனம் மாறி மாறி வருவதே தமிழ், முஸ்லிம் உறவுக்கு காத்திரமாக அமையுமெனச் சுட்டிக்காட்டிய அவர் இனப்பிரச்சினைத் தீர்வில் சிறுபான்மை மக்கள் ஒட்டு மொத்தமாக…
-
‘பர்மாவின் துன்பங்களை உலகம் மறக்கவில்லை’ – ஆங் சான் சூ சி
-BBC/Tamil 1991 இல் தனக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டமை, பர்மாவின் துன்பங்கள் உலகத்தால் மறக்கப்படவில்லை என்ற நம்பிக்கையை தனக்கு கொடுத்ததாக பர்மாவின் ஜனநாயக ஆதரவுத் தலைவியான ஆங் சான் சூ சி கூறியுள்ளார். அப்போது அந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டபோது அதனை வந்து பெறமுடியாத நிலையில் இருந்த ஆங்சான் சூசி அவர்கள், தற்போது நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோ சென்று அங்கு உரையாற்றியுள்ளார்.
-
எதிர்வரும் தேர்தல்கள்: மு.கா. நிபந்தனை!
-MMS எதிர்வரும் தேர்தல்களின் போது அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவது குறித்து கட்சியின் செயற்குழுவே தீர்மானிக்கும் என்று தெரிவித்துள்ள முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அவ்வாறு இணைந்து போட்டியிடுவதாயின் தமது கட்சி அரசாங்கத்திற்கு சில நிபந்தனைகளை விதிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
-
ஐரோப்பா கிண்ணம்: ரஷ்யா, போலந்து வெளியே!
-MJ நேற்றிரவு நடைபெற்று முடிந்த ‘ஏ’ பிரிவு அணிகளுக்கிடையிலான போட்டியில் பல எதிர்பார்ப்புக்களுடன் களமிறங்கிய ரஷ்யா, பலத்த சரிவை எதிர்நோக்கி வந்த 2004 ஐரோப்பா கிண்ண சம்பியனான கிறீஸ் அணியுடன் 1:0 என்ற கோல்வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவி ஐரோப்பா கிண்ணத்திலிருந்து வெளியேறுகிறது.
-
முஸ்லிம்களுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் பதவியை இராஜினாமா செய்யப்போவதாக ரிஷாட் அறிவிப்பு
-MMS அண்மைக்காலமாக தொடர்ந்து இலங்கையில் முஸ்லிம்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணாவிட்டால் தாம் பதவி விலகப்போவதாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் எச்சரித்துள்ளார். தற்போது முஸ்லிம்கள் எதிர்நோக்கி வரும் மத ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வைக்காண ஜனாதிபதி அமைச்சர் மட்டக்குழு ஒன்றை அமைத்துள்ளார். எனினும் இதன்மூலம் உரிய தீர்வு காணப்படாவிட்டால் தாம் பதவி விலகப்போவதாக ரிசாத் குறிப்பிட்டுள்ளார்.
-
பல்கலைக்கழக மாணவர்கள் சகோதர பாசத்தை மறந்து விட்டார்களா?
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் நாட்டில் இரண்டு பல்க லைக்கழகங்களே இருந்தன. இதில் ஒன்று பேராதனைப் பல் கலைக்கழகம். மற்றது கொழும்புப் பல்கலைக்கழகம் ஆகும். அந் தக் காலகட்டத்தில் இவ்விரு பல்கலைக்கழகங்களில் இருந்து பட்டம் பெற்று வெளியேறியவர்கள் சமூகத்தில் உயர் பதவிகளை வகிக்கும் கணவான்களாக இருந்தார்கள். இதனால் தென்கிழக்கு ஆசியாவி லேயே ஆங்கிலத்தில் கற்றறிருந்த சர்வதேச தரத்துக்கு நிகரான கல்வி மான்களை உருவாக்கும் நாடு என்ற புகழ் இலங்கைக்கு இருந்தது.
-
ஐரோப்பா கிண்ணம்: 43 வருடங்களின் பின் சுவீடனை வீழ்த்திய இங்கிலாந்து
-MJ இன்றிரவு நடைபெற்று முடிந்த ஐரோப்பா கிண்ணத்துக்கான முதல் சுற்று போட்டியில் இங்கிலாந்து அணி சுவீடன் அணியை 3:2 எனும் கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்றில் இருந்த தடைகளை அகற்றியுள்ளது.
-
‘ஜேவிபி கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு : இருவர் பலி’
-MMS அம்பாந்தோட்டை பகுதியில் கட்டுவன என்ற இடத்தில் ஜேவிபி என்று அழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். வெள்ளியன்று மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மேலும் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த சந்திரசேகரன் அவர்கள் தெரிவித்தார்.