-
இலங்கையின் சனத்தொகை 2 கோடி 8 இலட்சத்து 69 ஆயிரம்
புதிய குடிசன மதிப்பீட்டில் தகவல் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட குடிசன மதிப்பீட்டின் பிரகாரம் இலங்கையின் மொத்த சனத்தொகை 2 கோடி 8 இலட்சத்து 69,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாட்டில் 36,807 கிராமங்கள் உள்ளதோடு ஒவ்வொரு கிராமத்திலும் சராசரியாக 123 குடும்பங்கள் வாழ்வதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கீதாஞ்சன குணவர்தன தெரிவித்தார்.
-
92 பொலிஸாரின் தமிழ் மொழிப்பயிற்சி நிறைவு!
மட்டக்களப்பு பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் தமிழ் மொழிப்பயிற்சியை நிறைவு செய்த 92 பொலிஸாரின் பயிற்சி நிறைவு நிகழ்வு இன்று காலை கல்லடியிலுள்ள பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் பொலிஸ் பயிற்சிக் கல்லூரி பொறுப்பதிகாரி ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
-
பிரார்த்தனை செய்யும் முறை
– மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ : பிரார்த்தனை ஒரு வணக்கம் என்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள், நாம் எல்லா உதவிகளையும் அல்லாஹுவிடத்திலிருந்தே பெற்றுக்கொள்ள வேண்டும். உரியமுறையில் நாம் அல்லாஹுவிடம் பிரார்த்திக்கும் போது நம் பிரார்த்தனைகளை அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான், குர்ஆனில் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான். இன்னும் உங்களுடைய இரட்சகன் கூறுகிறான் நீங்கள் என்னையே அழை(த்துப் பிரார்த்தி)யுங்கள் நான் உங்களு(டைய பிரார்த்தனை)க்கு பதிலளிப்பேன். (அல்குர்ஆன் 40:60). – ஆகவே, நாம் செய்யும் பிரார்த்தனைகளை நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்த வகையில் செய்வோமாக, …
-
கோல் எல்லை தொழிநுட்பமும் விமர்சனங்களும்
-MJ உதைப்பந்தாட்டப் போட்டிகள் எவ்வளவுதான் தொழிநுட்ப முன்னேற்றங்களுக்கு மத்தியில் நடாத்தப்பட்டாலும் சில போட்டிகள் விமர்சனங்களில் முடிவடைகின்றன. அதேபோல் போட்டியின் முடிவுகளும் மாறிவிடுவதும் வேதனைக்குரியதாகும்.
-
நாளை சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை!
–MMS நாட்டில் கரையோர மாவட்டங்கள் சிலவற்றில் நாளை வெள்ளிக்கிழமை (22) மலை 3 மணியளவில் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை இடம்பெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த ஒத்திகையின் போது சுனாமி எச்சரிக்கை கோபுரத்தில் இருந்து சத்தம் எழுப்பப்படும் எனவும் அதனால் பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது
-
கோமா நிலையில் ஹொஸ்னி முபாரக்
-MMS நேற்று முன்தினம் இரவு கெய்ரோவிலுள்ள இராணுவ மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட ஹொஸ்னி முபாரக் ஒருசில மணி நேரங்களில் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன. எனினும் இச்செய்தியை மறுத்த எகிப்திய இராணுவப் பிரிவு, முபாரக் கோமா நிலையிலேயே தற்பொழுதும் இருந்து வருவதை உறுதிப்படுத்தி இருக்கின்றது.
-
கடிதத்தில் எழுதிய வார்த்தைகளை அனுபவிக்கும் சுகம் மின்னஞ்சலில் வருமா?
உலகம், இரண்டு விஞ்ஞான கண்டுபிடிப்புகளால் மிகவேக வளர்ச்சி அடைந்தது. ஒன்று மின்சாரம். இரண்டு தகவல் தொடர்பு. இவை இரண்டும் இல்லாத இன்றைய உலகத்தை கற்பனையிலும் கணிக்கமுடியவில்லை. தகவல் தொடர்பு வளர்ச்சியால் இன்று சில நிமிடங்களில் தகவல் பரிமாற்றங்கள் நடந்து விடுகின்றன. இதனால் மனித உறவுகளுக்கு நன்மை எனினும், சில இழப்புகளும் உண்டு. அரசர்கள் காலத்தில் தகவல் தொடர்புகள், புறாக்கள் மூலமும் ஒற்றர்கள் வாயிலாகவும் நடைபெற்றது.
-
காரைநகர் வல்லுறவு சம்பவத்தில் மகளிர் அமைப்புக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் முஸ்லிம் அமைப்புக்கள்
யாழ். காரைநகரில் இரும்பு வாங்கச் சென்ற முஸ்லிம்கள், வலுவிழந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவம் தொடர்பாக குரல் கொடுத்து வந்த மகளிர் அமைப்புகளை அச்சுறுத்தும் நடவடிக்கையில் முஸ்லிம் அமைப்புகள் ஈடுபடுபட்டு வருவதாக தெரியவருகின்றது.
-
மட்டு. இளைஞர், யுவதிகளுக்கு ஜோர்தானில் வேலைவாய்ப்பு: சனியன்று நேர்முகப்பரீட்சை
மட்டக்களப்பு மாவடத்திலுள்ள வேலையற்ற இளைஞர் யுவதிகளின் நன்மை கருதி ஜோர்தானுக்கு வேலைவாய்ப்பு வங்குவதற்கான நேர்முகப்பரீட்சை எதிர்வரும் சனிக்கிழமை மட்டக்களப்பு தாண்டவன் வெளியில் நடைபெறவுள்ளது. தாண்டவன்வெளி திருமலை வீதி இலக்கம் 204ல் காணிக்கை மாதா ஆலயத்தின் முன்பாக இவ் நேர்முகப்பரீட்சைகள் நடைபெறும்.
-
காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா கண்ணியமிக்க உலமாக்களுக்கு விடுக்கும் முக்கிய அறிவித்தல்.
-அஷ்செய்ஹ்: CMM. அமானி அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹூ அகில அலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச்சபைக்கூட்டம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 24.06.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணியளவில் கண்டி மஸ்ஜிதுல் கபீர் லய்ன் ஜூம்ஆப் பள்ளிவாயலில் நடைபெறவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். இக்கூட்டத்திற்கு செல்வதற்கான ஒழுங்குகளை காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா மேற்கொள்ளவுள்ளது. எனவே, இக்கூட்டத்தில் கலந்து கொள்ள அகில அலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள உலமாக்கள் எதிர்வரும் புதன் வியாழன் ஆகிய தினங்களில் ஜம்இய்யா…
-
ஏறாவூரில் தூக்கில் தொங்கப்பட்ட நிலையில் இளைஞரின் சடலம்!மக்கள் சந்தேகம்?
-MMS ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயங்கேணி பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். ஏறாவூர், ஜின்னா குறுக்கு வீதியை சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தந்தையான அபூபக்கர் அன்ஸார்(26வயது) என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
-
ஐரோப்பா கிண்ணம்: குழு ‘டி’ – கால் இறுதிக்கு பிரான்ஸ், இங்கிலாந்து தெரிவு
-MJ பல புதிய முன்னேற்றங்களுடன் தினம் தினம் உலக உதைப்பந்தாட்ட இரசிகர்களை மகிழ்வித்துச் செல்லும் ஐரோப்பா கிண்ணத்தின் முதலாவது ‘லீக்’ சுற்று நேற்று இரவுடன் நிறைவுபெறுகிறது.