WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • காத்தான்குடியில் விசேட தேவையுடைய மாணவர்களின் விளையாட்டு

    கிழக்கிலக்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பினால் நடாத்தப்படும் காத்தான்குடி ஸாஹிரா விசேட தேவையுடையோர் பாடசாலையின் மாணவர்களின் விளையாட்டுப் போட்டி 2012 மூன்றாம் தவணை ஆரம்பத்தில் நடைபெறவுள்ளதாக அமைப்பின் முகா மையாளர் எஸ். எச். எம். ஏ. இஸ்மாயில் தெரிவித்தார்.

  • லண்டன் ஒலிம்பிக் 2012: தொடக்க விழாவை ‘சட்டப்படி’ செய்துகாட்டியது பிரித்தாணியா! (படங்கள்)

    -MJ நேற்று (வெள்ளிக்கிழமை) ஓர் இனிமையான மாலைப்பொழுதில் லண்டன் நேரப்படி 9 மணிக்கு ஆரம்பமான ‘லண்டன் 2012’ ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா அதிகாலை ஒரு மணிவரை இடம் பெற்றிருந்தது.

  • மூதூர் கடலில் மூழ்கி மூவர் மரணம்

    மூதூர் கொட்டியாரக் குடாக் கடல் களப்பில் குளிக்கச் சென்ற மூவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்கள். இச் சம்பவம் நேற்று முன்தினம் வியாழன் (26) மாலை 5.00 மணியளவில் இடம் பெற்றது. மூவரும் ஒன்றாகக் குளித்துக் கொண்டிருந்த வேளையில் திடீரென ஏற்பட்ட நீர்ச்சுழியில் அகப்பட்டு இவர்கள் உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

  • ஒலிம்பிக்ஸில் விற்போட்டியில் இரண்டு உலக சாதனைகள்

    லண்டன் ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் ஆரம்ப வைபவங்களுக்கு முன்னதாகவே கடுமையான பார்வைக் குறைபாட்டை உடைய தென்கொரிய வீரர் ஒருவர் இரண்டு உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். தனி நபர்களுக்கான விற்போட்டியில் உலக சாதனையை ஏற்படுத்திய இம் டொங்- ஹையுன் என்னும் அந்த வீரர் மற்றுமொரு உலக சாதனையை நிகழ்த்திய தென்கொரிய வில்லாளர் குழுவிலும் அங்கம் வகிக்கிறார்.

  • பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்!

    பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஹினா ரப்பானி காஹர் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொணடு எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி புதன்கிழமை இலங்கை வரவுள்ளார் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

  • வடபுல முஸ்லீம்களுக்காக இன்று காத்தான்குடியில் இடம்பெற்ற அமைதிப்பேரணி (படங்கள்)

    -MBM றிப்தி வடக்கு முஸ்லீம்களுக்கு அண்மைக்காலமாக திட்டமிட்டு இழைக்கப்பட்டுவரும் அநீதிகளுக்கு தீர்வுவேண்டி நாட்டின் பல பாகங்களிலும் உள்ள முஸ்லீம்கள் இன்றைய ஜூம்ஆ தொழுகையின் பின்னர் அமைதிப்பேரணிகளை அவ்வப்பகுதிகளில் ஏற்பாடு செய்திருந்தனர்.

  • லண்டன் ஓலிம்பிக் 2012

    பல்சுவைத் தகவல் (படங்களுடன்) –MJ இன்று வெள்ளிக்கிழமை  லண்டன் நேரப்படி இரவு 9 மணிக்கு 30வது ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப நிகழ்வுகள் லண்டன் நகரில் உள்ள ‘ஒலிம்பிக் பார்க்’ இல் கோலாகலமாக இடம்பெற இருக்கின்றது. ஆரம்ப விழாவுக்கான ஒத்திகைகள் நேற்று இரவு நடைபெற்றன. ஆயிரக்கணக்கான மக்கள் ஒத்திகை நிகழ்வைக்காண திரண்டிருந்தனர்.

  • மின்வெட்டு இன்றுடன் நிறைவு!

    -MMS இவ்வாரம் நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்பட்டுவந்த மின்வெட்டு இன்றுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவுக்கு வருவதாக இலங்கை மின்சாரசபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. புத்தளம் அனல் மின் நிலைய இயந்திரக் கோளாறு திருத்தப்பட்டு நேற்று நள்ளிரவு முதல் 300 மெகாவோல்ட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.இரு பிரதான மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட கோளாறினால் நாடு  முழுவதிலும் கடந்த சில தினங்களாக 3 மணி நேர மின்வெட்டு இடம்பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

  • வட பகுதி முஸ்லிம்கள் மீள் குடியேற திரைமறைவில் சதித்திட்டங்கள்:ஜும் ஆ தொழுகையின் பின் அமைதிப் பேரணி நடத்தி பிரார்த்திக்குமாறு உலமா சபை, முஸ்லிம் கவுன்ஸில் வேண்டுகோள்

    இடம்பெயர்ந்த வடபகுதி முஸ்லிம்களை மீண்டும் தாயக மண்ணில் மீளக் குடியமர்த்துவதற்கான பணிகளை முன்னெடுக்கும் அரசியல் நிலைமைகளின் பணிகளுக்கு திட்டமிட்ட வகையில் போடப்பட்டு வரும் தடைகளைக் கண்டிக்க முஸ்லிம்கள் முன்வர வேண்டுமென அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் மன்னார்க் கிளை வேண்டுகோள் விடுத்துள்ளது.

  • பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி வழங்க ஜனாதிபதி உத்தரவு!

    -அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தகவல்- இசெட் புள்ளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்தார்.

  • கிழக்கு மாகாண தேர்தல்: மட். வேட்பாளர்களுக்கு விசேட அறிவுறுத்தல் கூட்டம்

    எதிர்வரும் 2012 கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழு வேட்பாளர்களுக்கு தேர்தல் விதி முறைகளைத் தெளிவுபடுத்தும் விசேட கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.

  • இரவு தொழுகைகளில் ஈடுபடுவோருக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை

    பாதுகாப்பு செயலருடன் பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா பேச்சு நோன்பு காலத்தில் இரவு நேரங்களில் தொழுகைகளில் ஈடுபடும் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். பாதுகாப்புச் செயலாளரிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகப் பிரதியமைச்சர் தினகரனுக்குத் தெரிவித்தார்.

←Previous Page
1 … 1,232 1,233 1,234 1,235 1,236 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar