WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • பாடசாலை சீருடை துணி விநியோகம்!

    அடுத்த வருடத்துக்கான பாடசாலை மாணவர்களுக்கான சீருடைக்காக தரமான துணிவகைகளை வழங்குவதற்காக இலங்கை சலுசலா நிறுவனம் கல்வி அமைச்சுக்கு கேள்வி மனுக்களை சமர்ப்பித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவிக்கிறது. 2013ஆம் ஆண்டுக்காக பாடசாலை சீருடைக்கான துணிகளை கொள்வனவு செய்ய கல்வி அமைச்சு மூலம் விலை மனுக்கள் கோரப்பட்டிருந்தன.

  • யார் இந்த மர்மப்பெண்?

    -MJ பலத்த பாதுகாப்பு சவால்களைச் சந்தித்து, பல பில்லியன் பவுண்ஸ்களைச் செலவிட்டு அபாரமாக நடாத்திக்காட்டிய ‘லண்டன் ஒலிம்பிக் 2012’ ஆரம்ப நிகழ்வில் பிரித்தாணியா பாதுகாப்புக்கும் ஒலிம்பிக் உத்தியோகத்தர்களுக்கும் ஒரு சவால் மிக்க கேள்வி இன்று எழுந்திருக்கின்றது.

  • லண்டன் ஒலிம்பிக் 2012: தற்பொழுது முன்னணியில் நிற்கும் நாடுகளின் விபரம்

    – MJ லண்டனில் நடைபெற்றுவரும் 2012 ஒலிம்பிக் போட்டிகளில் 29-07-2012 முடிவடைந்த ஞாயிற்றுக்கிழமையின் படி தங்கப்பதக்கங்களைப் பெற்று முன்னணியில் இருக்கும் 7 நாடுகளின் விபரங்கள் கீழே நிரற்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை சார்பாக எந்த வெற்றிகளும் இதுவரை பெறப்படவில்லை! Rank Country Total 1 China 6 4 2 12 2 United States 3 5 3 11 3 Italy 2 3 2 7 4 South Korea 2 1 2 5…

  • மன்னார் சம்பவம் தொடர்பில் பக்குவமாக அணுகி உரிய தீர்வை பெற உதவுவேன்: அமைச்சர் ஹக்கீம்

    நீதித் துறையின் சுயாதிபத்தியம், சட்டத்தின் ஆட்சி என்பவற்றை அனுசரித்து நடந்துகொள்ள வேண்டிய கடப்பாடு நாட்டின் நீதி அமைச்சர் என்ற முறையில் எனக்குண்டு. அதேவேளையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் என்ற முறையிலும், அரசியல்வாதி என்ற முறையிலும் சமூகத்தைப் பற்றிய கரிசனையும் என்னிடம் காணப்பட வேண்டும்.

  • கிரிக்கெட் அரங்குகளில் ஊதுகுழல்களுக்கு தடை

    போட்டிகள் நடைபெறும் அரங்குகளுக்கு ஊதுகுழல்களை எடுத்துச்செல்வதை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தடைசெய்துள்ளது. அரங்கிலுள்ள பார்வையாளர்களின் சௌகரியத்தையும் பாதுகாப்பையும் கருத்திற்கொண்டு இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் விடுத்த அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாண்ட் இசைக்கருவிகளுக்கு இத்தடை விதிக்கப்படவில்லை எனவும் இவ்விதிகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் அமுல்படுத்தப்படும் எனவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

  • கி.மா. தேர்தலில் அப்துர் றவூப் மௌலவி தரப்பின் ஆதரவு சிப்லிக்கா? ஆஸாத் சாலிக்கா??

    -வாரஉரைகல் எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளரான பொறியியலாளர் எம்.எப்.எம். சிப்லி அவர்களுக்கு அப்துர் றவூப் மௌலவி தரப்பினர் ஆதரவு வழங்குவார்களா? என்பதில் சந்தேகம் நிலவுவதாக அறியப்படுகின்றது.

  • இன, மத, பிரதேசவாதம் பேசுவதற்கு எவருக்குமே இடமளிக்க கூடாது

    – இன்றைய தினகரன் வா.ம. ஆசிரியர் தலைப்பு  நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலானது இந்நாட்டிலுள்ள சிறுபான்மையினங்களான தமிழ்மொழி பேசும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே பாரியதும் நிரந்தரமானதுமான பிளவை ஏற்படுத்திவிடுமோ எனும் அச்சம் தற்போது எழுந்து வருகின்றது. குறுங் கட்சிகளினாலும், அக்கட்சிகளினது வேட்பாளர்களினாலும் எழுப்பப்பட்டுவரும் இனத் துவேசமான பிரசாரக் கருத்துக்கள் இன,மத, பிரதேச ஒற்றுமையை விரும்பும் மக்களிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்திவருகிறது. அத்துடன் இச்செயலானது அரசாங்கத்தின் மீது வேண்டுமென்றே பழியைப் போடும் ஒரு முயற்சியாகவும் அமைந்துள்ள மையை…

  • அரசியலிலிருந்து என்னை ஓரங்கட்டும் சதி முயற்சி: நீதி ஒருபோதும் சாகாது என்கிறார் ரிசாத்

    அரசியலிலிருந்து என்னை ஓரங்கட்ட வேண்டுமென்ற ஒரே நோக்கில் தனக்கெதிராக மேற்கொள்ளப்படும் சதிகளின் இன்னொரு வடிவமே மன்னார் சம்பவத்தையும் தன்னையும் தொடர்புபடுத்தும் திட்டமிட்ட முயற்சியாகுமென முஸ்லிம் காங்கிரஸ் கூறுவது அப்பட்டமான பொய்யென அவர் ஆணித்தரமாகத் தெரிவித்தார். அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் தாம் தனித்துப் போட்டியிட மேற்கொண்ட திட்டத்துக்கு  மூன்று நாடகங்களை அரசியல் அரங்கில் மேடையேற்றியது.

  • இன்று மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்ட ரணில் குழுவினர்.

    – MMS எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில்  போட்டியிடும் ஐ.தே.க. வேட்பாளர்களையும், மட்டக்களப்பு மாவட்ட ஐ.தே.க. யின் உறுப்பினர்களையும் சந்தித்து உரையாடுவதற்காக ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று சனிக்கிழமை  மட்டக்களப்புக்கு விஜயம் செய்தார்.

  • ‘மட்டக்களப்பில் தேர்தல் முறைகேடுகள் குறித்து முறைப்பாடுகள்’

    மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த சிலரால் தேர்தல் சட்ட விதிகள் மீறப்படுவதாக இலங்கை தமிழரசுக் கட்சி (தமிழ் தேசியக் கூட்டமைப்பு) நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராஜா குற்றம் சாட்டுகின்றார். மீள் குடியேற்ற துணை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் அவர்கள், தான் கலந்து கொள்ளும் அரசாங்க பொது வைபவங்களில் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ஆளும் கட்சியைச் சேர்ந்த இரண்டு வேட்பாளர்களுடன் கலந்து கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜா கூறுகின்றார்.

  • நோன்பு

    -மிஸ்ஜா நோன்பு ஏழையின் பசி உணர்ந்து படைத்தவனுக்காய் பசித்திருந்து பகற்பொழுதில் தனைக்காத்ததால் நாம் அடைந்திடுவோம் ‘பாபுர்ரையான்’ எனும் சுவனவாசலை!

  • நான் நீதியையும் சட்டத்தையும் உச்ச அளவில் மதிப்பவன்

    கேள்வி:- அண்மையில் மன்னாரில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக தற்போது பரவலாகப் பேசப்படுகின்றது. ஆகவே இச்சம்பவம் தொடர்பாகவும், அச்சம்பவம் இடம்பெற ஏதுவான பின்னணி குறித்தும் வன்னி மாவட்ட மக்கள் பிரதி நிதி என்ற வகையில் சுருக்கமாகக் கூற முடியுமா? பதில்:- ஆம். வட மாகாணத்திலுள்ள மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்கள் சில மணிநேரக் காலக்கெடுவுடன் உடுத்த உடையோடு 1990ம் ஆண்டில் புலிகளால் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டனர்.…

←Previous Page
1 … 1,231 1,232 1,233 1,234 1,235 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar